உங்களுக்குத் தெரியுமா?
(இந்த வினாடிவினாவுக்கான விடைகளை, கொடுக்கப்பட்டுள்ள பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; விடைகளின் முழுப் பட்டியல் பக்கம் 27-ல் அச்சிடப்பட்டிருக்கிறது. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)
1. கலிலேயாக் கடல், அதன் மேற்குக் கரையில் அமைந்துள்ள ஒரு நகரின் பெயரால் வேறு எப்படியும் அழைக்கப்பட்டது? (யோவான் 6:1; 21:1)
2. தாவீதின் இரண்டு மனைவிகளை சிறைபிடித்துச் சென்றிருந்த அமலேக்கியரைப் பின்தொடர்ந்து சென்றபோது, தாவீதோடிருந்த அறுநூறு போர்வீரர்களில் இருநூறுபேர் விடாய்த்துப் போனபடியினால் நின்றுவிட்ட இடம் எது? (1 சாமுவேல் 30:9, 10)
3. இஸ்ரவேல் வேவுகாரர் இருவரை மறைத்து வைக்க ராகாப் எதைப் பயன்படுத்தினாள்? (யோசுவா 2:6)
4. “தேவன் ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்தில் பரிசுத்த சேவை செய்யும்படி” எது கிறிஸ்தவர்களுக்கு உதவும் என்று பவுல் கூறினார்? (எபிரெயர் 12:28, NW)
5. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, ஒரு எஜமான் தன் அடிமை தன்னிடமிருந்து விடுதலை பெற விரும்பாதபோது என்ன செய்ய வேண்டி இருந்தது? (யாத்திராகமம் 21:6)
6. ஞானத்தின் மையம் என பெயர்பெற்ற ஏதோமிய நகரம் எது? (எரேமியா 49:7)
7. சாலொமோன் கட்டிய தேவாலயத்தின் சந்நிதி ஸ்தானத்தின் கதவுகள் எந்த மரத்தால் செய்யப்பட்டன? (1 இராஜாக்கள் 6:31-33)
8. நீதிமொழிகள் 6:17-19-ன்படி, யெகோவா வெறுக்கும் ஏழு காரியங்கள் யாவை?
9. எபிரெய எழுத்துக்களில் கடைசி எழுத்து எது? (சங்கீதம் 119:169 மேற்குறிப்பு)
10. பெருக அறுப்பவனுடன் ஒப்பிட, சிறுக அறுப்பவனுக்கு என்ன நிகழும் என்பதாக பவுல் கூறினார்? (2 கொரிந்தியர் 9:6)
11. யோபுவின் மீதான ஆசீர்வாதத்தை நிறுத்திவிட்டால், யோபு என்ன செய்வான் என்று சாத்தான் யெகோவாவிடம் சவால் விட்டான்? (யோபு 1:11)
12. ‘துன்மார்க்கனுடைய பெயருக்கு’ என்ன நடக்கும்? (நீதிமொழிகள் 10:7)
13. பத்து குஷ்டரோகிகளை இயேசு சுகப்படுத்தினபோது, அவர்களில் எத்தனை பேர் நன்றிகெட்டவர்களாய் இருந்தனர்? (லூக்கா 17:17)
14. எரிகோவின் சுவர் விழுவதற்கு முன்பு இஸ்ரவேலர் என்ன செய்தனர்? (யோசுவா 6:5)
15. இஸ்ரவேலர் கூட்டிலிருக்கும் பறவையைக் கண்டுபிடிக்க நேரிடுகையில் எதற்குத் தடை விதிக்கப்பட்டது? (உபாகமம் 22:6, 7)
16. இஸ்ரவேலருக்கு யெகோவா ஏன் தனிப்பட்ட வகையில் தயவு காட்டினார்? (ஏசாயா 41:8)
17. வஸ்தி ராணிக்கு எதிரான ஒருமித்த தீர்ப்பில் அகாஸ்வேரு ராஜாவுக்கு ஆலோசகர்களாக சேவித்த பிரபுக்கள் எத்தனை பேர்? (எஸ்தர் 1:13, 14)
18. யெகோவாவுக்கு பலி செலுத்தச் சென்றவர் எந்தவொரு பாகத்தையும் மீதம் வைக்காமல் செலுத்தும் ஒரு பலி. (லேவியராகமம் 1:3, 4)
19. இரட்சிக்கப்படுவதற்காக ஒருவர் என்ன இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும் என்று பவுல் கூறினார்? (ரோமர் 10:9)
20. ஆலயத்தைக் கட்ட சாலொமோனுக்கு எவ்வளவு காலம் எடுத்தது? (1 இராஜாக்கள் 6:1, 38)
21. பண்டைய நாட்களில், சிறைபிடிக்கப்பட்ட ஒரு பகைவனை ஊனமாக்குவதற்கு சில சமயங்களில் என்ன செய்யப்பட்டது? (நியாயாதிபதிகள் 1:6)
22. நியாயப்பிரமாணச் சட்டம் எழுதப்பட்ட கற்பலகைகளை முதலில் மோசே எங்கு வைத்தார்? (உபாகமம் 10:1-5)
23. பேதுரு, பவுல் ஆகியோரின் நடவடிக்கைகளை பிரதானமாய் தெரிவிக்கும் பைபிள் புத்தகம் எது?
24. பேதுரு வாசலில் நின்றபோது, கதவைத் திறந்து அவரை உள்ளே விடுவதற்கு முன்பு, அவருடைய சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில் குதூகலத்துடன் மற்றவர்களிடம் போய் தெரிவித்த வேலைக்காரப் பெண்ணின் பெயர் என்ன? (அப்போஸ்தலர் 12:13, 14)
[பக்கம் 27-ன் பதில்]
வினாடிவினாக்களுக்கான விடைகள்
1. திபேரியாக்கடல்
2. பேசோர் ஆற்றுப் பள்ளத்தாக்கு
3. சணல் தட்டைகள்
4. ‘தேவபயமும் பக்தியும்’
5. ‘காதைக் கம்பியினால் குத்த வேண்டும்’
6. தேமான்
7. ஒலிவமரம்
8. “மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், அபத்தம்பேசும் பொய்ச் சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல்”
9. தௌ
10. அதற்கேற்ப அறுப்பான்
11. யெகோவாவின் முகத்துக்கு எதிரே தூஷிப்பான்
12. அழிந்து போகும்
13. ஒன்பது பேர்
14. ஆர்ப்பரித்தனர்
15. அவர்கள் தாய்ப் பறவையைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்
16. அவர்கள் யெகோவாவின் சிநேகிதனான ‘ஆபிரகாமின் சந்ததியாய்’ இருந்தனர்
17. ஏழு
18. சர்வாங்க தகனபலி
19. ஒருவர் கர்த்தராகிய இயேசுவை . . . தன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று விசுவாசிக்க வேண்டும்
20. ஏழுவருஷம்
21. அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தரித்தனர்
22. சீத்திம் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பெட்டிக்குள்
23. அப்போஸ்தலர்
24. ரோதை