உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 4/8 பக். 20
  • உங்களுக்குத் தெரியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்குத் தெரியுமா?
  • விழித்தெழு!—1998
  • இதே தகவல்
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—1998
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—1998
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—1997
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 4/8 பக். 20

உங்களுக்குத்  தெரியுமா?

(இந்தக் கேள்விகளுக்கான விடைகள் இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வசனங்களில் இருக்கின்றன, விடைகளின் முழு பட்டியலும் 27 பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட “வேதாகமங்களின் பேரில் உட்பார்வை,” [ஆங்கிலம்] பிரசுரத்தை கூடுதல் தகவல்களுக்கு கவனிக்கவும்.)

1. மற்றவர்கள், ‘சத்தியத்துக்கு செவியை’ விலக்கும்போது தீமோத்தேயு என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பூட்டப்பட்டார்? (2 தீமோத்தேயு 4:4, 5)

2. அகாஸ்வேரு ராஜாவுக்கு எதிராக சதிசெய்த இரண்டு பிரதானிகள் யாவர்? (எஸ்தர் 2:21)

3. நிம்ரோது தன்னை எவ்விதம் வேறுபடுத்திக்காட்டினான்? (ஆதியாகமம் 10:9, தி.மொ.)

4. ஆபிரகாமின் இரண்டாவது மனைவி யார்? (ஆதியாகமம் 25:1)

5. “ரத்தப்போக்கினால் பன்னிரண்டு வருஷம்” வேதனை அனுபவித்த ஸ்திரீ எவ்விதம் இயேசுவால் குணமாக்கப்பட்டாள்? (மாற்கு 5:27-29, NW)

6. “ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும்” எது எளிதாக இருக்கும் என்பதாக இயேசு ஒரு உவமையில் சொன்னார்? (லூக்கா 18:25)

7. தம்முடைய வார்த்தையின்பேரில் அதிகப்படியான நம்பிக்கை ஏற்படுத்த எப்படிப்பட்ட சட்டப்பூர்வமான உத்திரவாதத்தை தேவன் பயன்படுத்தினார்? (எபிரெயர் 6:17)

8. நேபுகாத்நேச்சாரின் கனவில் வந்த சிலையின் எந்தப் பாகம் இரும்பாலும் களிமண்ணினாலும் ஆனது? (தானியேல் 2:41, 42)

9. தங்களுடைய தலைச்சன் பிள்ளைகளை தேவதூதன் கொண்டுவரும் அழிவிலிருந்து தப்புவிக்க எந்தச் செடியின் இலைகளால் தங்களுடைய வாசல் நிலைகளின்மேல் இஸ்ரவேலர்கள் இரத்தத்தை தெளித்தார்கள்? (யாத்திராகமம் 12:22)

10. பூர்வகாலங்களில் பிரதானமாக எந்த விலங்கு யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது? (யாத்திராகமம் 15:21)

11. யெகோவா தேவனால் எதைச் செய்ய முடியாது என்பதாக வேத வசனங்கள் குறிப்பிடுகின்றன? (எபிரெயர் 6:18)

12. காகங்களால் போஷிக்கப்படத்தக்கதாக எந்த இடத்தில் ஒளிந்துகொள்ளும்படி தேவன் எலியாவிடம் கூறினார்? (1 இராஜாக்கள் 17:3, NW)

13. உடன்படிக்கைப் பெட்டியை சுமப்பதற்கு யெகோவா யாரை நியமித்தார்? (உபாகமம் 10:8)

14. ‘கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்டவன்’ என்று யாரைப்பற்றி அப்போஸ்தலன் பவுல் பேசினார்? (ரோமர் 16:13)

15. தீனாளை சீகேம் கெடுத்ததால் கொல்லப்பட்டவர்களுள் இருந்த சீகேமின் தகப்பன் யார்? (ஆதியாகமம் 34:26)

16. ஆபிரகாமின் தகப்பன் யார்? (யோசுவா 24:2)

17. லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்ததால் மற்ற கோத்திரங்களிலிருந்த 273 முதற்பேரானவர்களை, மீட்க என்ன செய்யவேண்டும் என்று தேவன் குறிப்பிட்டார்? (எண்ணாகமம் 3:46, 47)

18. ஒரு அடிமையின் உடலில் எந்தப் பாகங்கள் தன் எஜமானால் சேதப்படுத்தப்பட்டால் அவன் விடுதலையாக முடியும்? (யாத்திராகமம் 21:26, 27)

19. எது ஒரு நபரை விடுதலையாக்கும் என்பதாக இயேசு சொன்னார்? (யோவான் 8:32)

20. பரஸ்பர அக்கறைகளினாலும் சம அந்தஸ்திலும் பதவியிலும் இருந்ததாலும் ராஜாவாகிய ஈராம் சாலொமோனை எவ்விதம் அழைத்தார்? (1 இராஜாக்கள் 9:13)

21. நறுமணத்திற்காகவும் ஒப்பனைக்காகவும் பெயரெடுத்த எந்தச் செடி சாலொமோனின் உன்னதப்பாட்டில் மட்டும் குறிப்பிடப்படுகிறது? (உன்னதப்பாட்டு 1:14)

22. யோசுவாவின் சாபம் நிறைவேறும் வண்ணம் தங்கள் தகப்பன் எரிகோவை மறுபடியும் கட்டியபோது யாரெல்லாம் தங்களுடைய உயிரை இழந்தனர்? (1 இராஜாக்கள் 16:34)

23. நோவாவின் பேழையில் தண்ணீர் உட்புகாமல் இருப்பதற்கு எதை உபயோகித்தார்கள்? (ஆதியாகமம் 6:14)

கேள்விகளின் விடை

1. ‘தன்னுடைய மனதில் தெளிவாக இருப்பது, தீங்கனுபவிப்பது, சுவிசேஷகனுடைய வேலையைச் செய்வது, ஊழியத்தை நிறைவேற்றுவது’

2. பிக்தானும் தேரேசும்

3. ‘யெகோவாவுக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரன்’

4. கேத்தூராள்

5. அவள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்

6. ‘ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது’

7. ஓர் ஆணையிடுவது

8. பாதங்களும் கால்விரல்களும்

9. ஈசோப்பு

10. குதிரை

11. பொய்

12. கேரீத் ஆற்றுப்படுகை

13. லேவி கோத்திரம்

14. ரூப்

15. ஏமோர்

16. தேராகு

17. ஒரு நபருக்கு ஐந்து சேக்கல் என்ற மீட்பின் கிரயம்

18. ஒரு கண் அல்லது பல்

19. சத்தியத்தை அறிதல்

20. சகோதரன்

21. மருதோன்றி

22. அபிராம் மற்றும் செகூப்

23. கீல்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்