உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 2/8 பக். 22-25
  • உங்களுக்குத் தெரியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்குத் தெரியுமா?
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வினாடிவினாக்களுக்கான விடைகள்
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—1998
  • யெகோவாவின் சாட்சிகளுடைய 1996 வருடாந்தர புத்தகத்திலிருந்து அனுபவங்கள்
    விழித்தெழு!—1996
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—1999
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 2/8 பக். 22-25

உங்களுக்குத் தெரியுமா?

(இந்த வினாடிவினாக்களுக்கான விடைகளை, கொடுக்கப்பட்டுள்ள பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; விடைகளின் முழுப் பட்டியல், பக்கம் 25-ல் அச்சிடப்பட்டிருக்கிறது. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)

1. தம் சொந்த ஊரில் உள்ள ஜனங்களிடையே பலத்த செய்கைகளைச் செய்வதிலிருந்து இயேசுவை தடுத்தது எது? (மாற்கு 6:5, 6)

2. பரிசேயர் கண்டிப்பாகச் செலுத்தும் தசமபாகத்தின் சம்பந்தமாக என்ன இரண்டு பூண்டுகள் இயேசுவால் குறிப்பிடப்பட்டன? (லூக்கா 11:42)

3. ஒடுக்கப்படும்போது இயேசு எப்படி ‘சத்தமிடாதிருப்பார்’ என்பதைக் காட்ட தீர்க்கதரிசனமாக எந்த மிருகம் பயன்படுத்தப்பட்டது? (ஏசாயா 53:7)

4. யெகோவாவைக் காட்டிலும் தன் குமாரர்களை அதிகமாய் மதித்ததனால் பாதகமான தீர்ப்பைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? (1 சாமுவேல் 2:27-29)

5. சீமோனின் மாமியை விட்டு நீங்கி, அவள் எழுந்திருக்கும்படியாக செய்வதற்கு எதை இயேசு “நீங்கும்படி கட்டளையிட்டார்?” (லூக்கா 4:38, 39)

6. ‘கர்த்தருடைய வசனத்தின்’ நிரந்தரத்தன்மைக்கு முரணாக மனுஷருடைய வாழ்வின் தற்காலிகத்தன்மை எதற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது? (1 பேதுரு 1:24, 25)

7. முதல் தடவையாக இஸ்ரவேலர் மன்னாவைப் புசித்ததும் ஓய்வுநாளுக்கான பிரமாணம் அமலாக்கப்பட்டதும் எந்த வனாந்தரப்பகுதியில்? (யாத்திராகமம் 16:1, 13-31)

8. விக்கிரகங்கள் செய்யமுடியாத சில காரியங்கள் யாவை? (சங்கீதம் 115:5-7)

9. மேரிபாவின் தண்ணீர்களிடத்தில் கடவுளைப் பரிசுத்தப்படுத்தவும் கனப்படுத்தவும் தவறினதற்காக, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் நுழைய எவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது? (எண்ணாகமம் 20:12)

10. உடலின் எந்த உறுப்பு அடையாள அர்த்தத்தில் பலத்தையோ அல்லது சக்தியையோ செலுத்தும் திறனைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது? (ஏசாயா 51:9)

11. கிறிஸ்துவின் ஆசாரியத்துவத்தினுடைய மேம்பட்ட தன்மையைக் காட்டும் வகையில், ஆபிரகாமின் அரையிலிருந்த போது, லேவியானவன் எதைச் செலுத்தினதாக பவுல் கூறினார்? (எபிரெயர் 7:9, 10)

12. இஸ்ரவேலரின் ராஜா ஒருவர் யெகோவாவின் தேவாட்சி முறையில் ஆட்சி செலுத்திவந்தார் என்பதைக் குறிக்க பைபிளில் என்ன சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது? (1 நாளாகமம் 29:23)

13. யோவானின் தரிசனத்திலுள்ள நான்கு ஜீவன்களில் ஒவ்வொன்றும் எதைப் போன்றிருந்தது? (வெளிப்படுத்துதல் 4:7)

14. பிசாசு பரலோகத்தைவிட்டுத் தள்ளப்பட்டுப் போனதற்குப் பிறகு பூமிக்கு என்ன ஏற்படவிருந்தது? (வெளிப்படுத்துதல் 12:12)

15. எந்த முறையில் வாக்குப்பண்ணப்பட்ட தேசம் 12 கோத்திரங்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பட்டது? (எண்ணாகமம் 26:55, 56)

16. எந்தப் பறவைக்கு, ஒரு பொருளை ஒரே சமயத்தில் இரு கண்களாலும் நோக்க முடியும் வகையில், இரு கண்களும் முன்னோக்கிப் பார்ப்பதாய் அமைந்திருக்கின்றன? (சங்கீதம் 102:6)

17. ஆவிக்குரிய விஷயங்களைத் தொடர்ந்து தனக்குப் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம் எதை தீமோத்தேயு மற்றவருக்கு விளங்கச் செய்கிறவராய் இருப்பார்? (1 தீமோத்தேயு 4:15)

18. பாபிலோனிய அரசாங்கத்தில் தானியேல் என்ன பொறுப்பு வகித்தார்? (தானியேல் 2:48)

19. ஆதாம் ஏவாள் உடை தயாரிக்க எதை ஒன்றாகச் சேர்த்து தைத்தார்கள்? (ஆதியாகமம் 3:7)

20. நாவைத் தவறாக பயன்படுத்தக்கூடாது என்ற தன் குறிப்பை அழுத்திக் காட்டுவதில், ஓர் அத்திமரம் எதைக் கொடுக்க முடியாது என்று யாக்கோபு கூறினார்? (யாக்கோபு 3:12)

21. பிணியாளிகள் முற்றிலும் சுகமடைய, இயேசுவினுடைய வஸ்திரத்தின் எந்தப் பாகத்தை மட்டும் தொடவேண்டியிருந்தது? (மத்தேயு 14:36)

22. சுடர்கள் எவற்றைக் குறிக்கிறதற்காக இருக்கும்? (ஆதியாகமம் 1:14)

23. யார் விசேஷமாக ஜாக்கிரதையுள்ளவர்களும், பரிசுத்தத்திற்கேற்ற வாழ்க்கை வாழ்பவர்களும், நற்கிரியைகள் செய்பவர்களுமாய் இருக்க வேண்டும்? (தீத்து 2:2, 3, 5)

24. ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாமல்’ இருக்கும்படி எது அவர்களுக்கு மன்னிக்கப்பட்டிருக்கும் என்று ஏசாயா கூறினார்? (ஏசாயா 33:24)

25. பவுல் மேற்கோள் காட்டிய வசனமாகிய, சங்கீதம் 140:3 (NW), ‘கொம்புள்ள விரியன் பாம்பு’ என்று அழைத்த போதிலும், அவர் இந்த நச்சுப்பாம்புக்கு என்ன பொதுப் பெயரைப் பயன்படுத்தினார்? (ரோமர் 3:13, NW)

26. எபிரெய அகர வரிசையின் ஆறாவது எழுத்து எது?

27. யூதரல்லாதவரை வேறுபடுத்திக் கூற என்ன பதம் பயன்படுத்தப்படுகிறது? (ரோமர் 2:9, 10; கிங் ஜேம்ஸ் வர்ஷன்-ஐக் காண்க.)

28. இராயனுக்கு முன்பு நிற்பதற்கு சென்றுகொண்டிருக்கையில், உடன் கிறிஸ்தவர்களோடு ஒரு வாரத்தைப் பவுல் செலவிட்ட இத்தாலியத் துறைமுகத்தின் பெயர் என்னவாய் இருந்தது? (அப்போஸ்தலர் 28:13, 14)

29. நித்தியமான எவற்றை நாம் நோக்கியிருக்கும்படி பவுல் புத்திமதி கூறுகிறார்? (2 கொரிந்தியர் 4:18)

30. யெகோவாவால் பார்த்துக்கொள்ளப்படப் போவதால் எதைக் கிறிஸ்தவர்கள் தாங்களாகவே செய்யக்கூடாது? (ரோமர் 12:19)

31. கெஹென்னாவின் அழிவுக்கேதுவான தன்மையை அழுத்திக்காட்டுவதில், எது அங்கு அழியாமலிருக்கும் என்று இயேசு கூறினார்? (மாற்கு 9:48)

வினாடிவினாக்களுக்கான விடைகள்

1. அவர்களுடைய அவிசுவாசம்

2. ஒற்தலாம், மருக்கொழுந்து

3. ஆடு

4. ஏலி

5. அவளுடைய ஜுரம்

6. உலரும் புல்

7. சீன் வனாந்தரம்

8. பேசுதல், பார்த்தல், கேட்டல், முகர்தல், உணர்தல், நடத்தல்

9. மோசேயும் ஆரோனும்

10. புயம்

11. தசமபாகங்கள்

12. ‘யெகோவாவின் சிங்காசனத்தில் உட்காருவது’

13. சிங்கம், காளை, மனிதன், கழுகு

14. ஐயோ

15. சீட்டு

16. ஆந்தை

17. அவர் தேறுவது

18. மாகாணம் முழுதுக்கும் அதிகாரி

19. அத்தி இலைகள்

20. ஒலிவப்பழங்கள்

21. ஓரம்

22. காலங்கள், நாட்கள், வருஷங்கள்

23. முதிர்வயதுள்ள ஆண்களும் பெண்களும்

24. அவர்களுடைய அக்கிரமம்

25. கட்டுவிரியன்

26. வௌ

27. புறஜாதியார்

28. புத்தேயோலி

29. “காணப்படாதவை”

30. பழிவாங்குதல்

31. “அவர்கள் புழு”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்