உங்களுக்குத் தெரியுமா?
(கொடுக்கப்பட்ட பைபிள் இடக்குறிப்புகளில் இந்த வினாடிவினாவுக்கான விடைகளைக் காணலாம்; பக்கம் 22-ல் விடைகள் அச்சிடப்பட்டுள்ளன. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட, “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)
1. போதிக்கவும் அவிசுவாசிகளுக்கு அடையாளமாகவும் இருக்கும் எதை கடவுளுடைய ஆவியின் மூலம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் செய்தனர்? (1 கொரிந்தியர் 12:30)
2. எந்த மரத்தின் இலையோடு புறா நோவாவிடம் திரும்பி வந்தது? (ஆதியாகமம் 8:11)
3. ஒரு மலைப் பகுதியையோ, தொடர்ச்சியான எல்லைக் கோட்டைகளையோ, ஒரு பிராந்தியத்தையோ, அல்லது ஒரு பட்டணத்தையோ, சீனாய் தீபகற்பகத்தின் வடமேற்கில் அமைந்திருக்கும் ஏதோவொரு பகுதியையோ குறிக்கும் என்ன புவியியல் பெயர் பைபிளில் ஆறு முறை குறிப்பிடப்பட்டு இருக்கிறது? (ஆதியாகமம் 25:18)
4. அப்சலோம் மூன்று வருடங்கள் தலைமறைவாகிய பிறகு அவனுக்காக ராஜாவாகிய தாவீதிடம் பரிந்துபேச யோவாப் யாரை பயன்படுத்தினான்? (2 சாமுவேல் 14:4)
5. ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சாம்ராஜ்யத்தின் கிழக்கு எல்லையாக அமைந்த தேசம் எது? (எஸ்தர் 1:1)
6. திரும்ப நிலைநாட்டப்படும் தீர்க்கதரிசனங்கள், “முட்செடிகள்” மற்றும் “காஞ்சொறி” செடிகளுக்கு பதிலாக என்ன மரங்கள் வளரும் என்று முன்னறிவித்தன? (ஏசாயா 55:13)
7. அகாயா நாட்டின் அதிபதியான கல்லியோன் முன்பாக நியாயவிசாரணைக்காக பவுலை யூதர்கள் ஏன் நிறுத்தினர், மேலும் கல்லியோன் அந்த விசாரணையை ஏன் ரத்து செய்தான்? (அப்போஸ்தலர் 18:12-17)
8. மரித்தோரின் நிலையை பைபிள் எவ்வாறு விவரிக்கிறது? (அப்போஸ்தலர் 7:60)
9. மோசேக்கு உதவ தேர்ந்தெடுக்கப்பட்ட 70 பேரில் ஆசரிப்புக்கூடாரத்திற்குப் போகாத இரு மூப்பர்கள் யார்? (எண்ணாகமம் 11:14-17, 24-26)
10. எப்பிராயீம், மனாசே புத்திரருடைய சுதந்திரத்தின் எல்லையில் இருக்கும் எந்தப் பட்டணம் எப்பிராயீமுக்கும், அதே பெயரில் அதை சுற்றியுள்ள எந்தப் பிராந்தியம் மனாசேக்கும் கொடுக்கப்பட்டது? (யோசுவா 16:8)
11. கிரேக்க அகர வரிசை எழுத்துகளில் முதல் நான்கு யாவை?
12. பைபிள் பதிவின்படி, “புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே” எது பலியிடப்பட்டது? (மாற்கு 14:12)
13. பார்வோன்நேகோ, யோசியாவின் குமாரரில் யாருக்கு யோயாக்கீம் என பேரை மாற்றி அவரை யூதாவின் ராஜாவாக்கினான்? (2 இராஜாக்கள் 23:34)
14. மோசே, பிரதிஷ்டைக்கான ஆட்டுக்கடாவின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோன் மற்றும் அவருடைய குமாரர்கள் ஒவ்வொருவரின் வலதுகாலின் பெருவிரலில் பூசியது எதை அர்த்தப்படுத்துகிறது? (லேவியராகமம் 8:22-24)
15. யோசுவாவின் தகப்பன் யார்? (நெகேமியா 8:17)
16. யேசபேலின் தகப்பன் யார்? (1 இராஜாக்கள் 16:31)
17. “ஷிபோலேத்” என்ற வார்த்தையை தவறாக உச்சரித்ததால் எந்த கோத்திரத்தில் 42,000-ம் பேர் கொல்லப்பட்டனர்? (நியாயாதிபதிகள் 12:1-6)
18. குடித்து வெறித்திருப்பதாக நீதியுள்ள அன்னாளை தவறுதலாக கண்டனம் செய்த பிரதான ஆசாரியன் யார்? (1 சாமுவேல் 1:12-15)
19. இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளின் சட்டத்தின்கீழ், திருடன் பிடிபட்டால் என்ன செய்ய வேண்டும்? (யாத்திராகமம் 22:1-4)
20. ஆலயம் கட்டப்படுகையில், எந்த மரம் அதிகமாக பயன்படுத்தப்பட்டது? (1 இராஜாக்கள் 6:9-20)
21. கடவுளால் செய்யக் கூடாத ஒன்று என்ன? (எபிரெயர் 6:18)
22. கடவுளின் பிரதான எதிரி யார்? (சகரியா 3:1)
23. ஆவிக்குரிய நேர்மைக்கான பரீட்சையில் இஸ்ரவேலர்கள் தோற்றனர் என்பதை காண்பிக்க யெகோவா தம் கையில் எதைப் பிடித்திருப்பதாக ஆமோஸ் தரிசனத்தில் கண்டார்? (ஆமோஸ் 7:7-9)
24. மதிகேடாய் நடக்கிற அழகான பெண்ணை நீதிமொழிகள் புத்தகம் எதற்கு ஒப்பிடுகிறது? (நீதிமொழிகள் 11:22)
25. எருசலேமுக்கு செல்வதற்காக கழுதைக்குட்டியைக் கொண்டுவர இயேசு எத்தனை சீஷர்களை அனுப்பினார்? (மாற்கு 11:1)
வினாடிவினாவுக்கான விடைகள்
1. அந்நிய பாஷை பேசுதல்
2. ஒலிவ மரம்
3. சூர்
4. தெக்கோவாவிலிருந்த புத்தியுள்ள ஒரு ஸ்திரீ
5. இந்தியா
6. தேவதாரு, மிருதுச்செடி
7. “வேதப்பிரமாணத்துக்கு விகற்பமாய்த் தேவனைச் சேவிக்கும்படி” மனுஷருக்குப் போதிப்பதாக. ரோம சட்டம் மீறப்படாததால்
8. நித்திரை
9. எல்தாத், மேதாத்
10. தப்புவா
11. ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா
12. பஸ்கா ஆடு
13. எலியாக்கீம்
14. அவர்கள் மேற்கொண்ட வாழ்க்கை முறையையும், ஆசாரியத்துவத்தின் பலி சம்பந்தப்பட்ட தங்களுடைய கடமைகளை சிறந்த முறையில் செய்வதில் தளராதிருத்தலையும் சுட்டிக்காட்டியது
15. நூன்
16. ஏத்பாகால்
17. எப்பிராயீம்
18. ஏலி
19. ஐந்து மடங்குவரை இழப்பீடு
20. கேதுரு மரம்
21. பொய்
22. சாத்தான்
23. தூக்குநூல்
24. “பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்தி”
25. இரண்டு