உங்களுக்குத் தெரியுமா?
(இந்த வினாடிவினாவுக்கான விடைகளை, கொடுக்கப்பட்ட பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; விடைகளுக்கான முழுப் பட்டியல், பக்கம் 19-ல் அச்சிடப்பட்டிருக்கிறது. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட, “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)
1. இயேசுவினுடைய கழுமரத்தை சுமக்கும்படி யார் பலவந்தப்படுத்தப்பட்டார்? (மத்தேயு 27:32)
2. எசேக்கியேல் தீர்க்கதரிசியை அழைக்கும்போது, அவரும் நம்மைப்போல் சாதாரண மனிதனே என்பதை அறிவுறுத்த கடவுள் என்ன பதத்தை 90 தடவைக்கும் மேலாக பயன்படுத்தினார்? (எசேக்கியேல் 2:1)
3. எதன் அடிப்படையில் செய்யப்படும் தர்ம காரியங்கள் கொடுப்பவருக்கும் பிரயோஜனம் தருமென பவுல் சொன்னார்? (1 கொரிந்தியர் 13:3)
4. சேவல் கூவுவதற்கு முன் மூன்று முறை பேதுரு என்ன செய்வாரென இயேசு முன்னறிவித்தார்? (லூக்கா 22:34)
5. இஸ்ரவேலின் எந்த கோத்திரம் யோர்தானுக்கு கிழக்கிலும் மேற்கிலும் சுதந்தரிக்கப்பட்ட தேசத்தை பெற்றது? (யோசுவா 13:29; 17:5)
6. ஒருவன் எல்லாரிலும் உயர்ந்தவனாக இருக்கவேண்டும் என்றால், அவன் எவ்விதம் தன்னை நடத்திக்கொள்ள வேண்டும் என இயேசு சொன்னார்? (லூக்கா 9:48)
7. சிம்சோன் ஏன் பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணை மனைவியாக தேர்ந்தெடுத்தார்? (நியாயாதிபதிகள் 13:25-14:4)
8. ஆமானின் பத்துக் குமாரரும் ஏற்கெனவே கொலை செய்யப்பட்டிருக்க, எஸ்தர் செய்த விண்ணப்பம் என்ன? (எஸ்தர் 9:13)
9. பாபிலோனிய, பெர்சிய சாம்ராஜ்யத்தின் மாகாண பிரதான அதிகாரிகள் எப்படி அழைக்கப்பட்டனர்? (தானியேல் 6:1)
10. மனுஷர் தப்பிப்பிழைப்பதற்கு, ‘மிகுந்த உபத்திரவத்தின்’ நாட்கள் என்ன செய்யப்பட வேண்டும் என்று இயேசு சொன்னார்? (மத்தேயு 24:21, 22)
11. யோசேப்பு, தான் மரிக்கும் தறுவாயில் இஸ்ரவேலின் குமாரருக்கு எதை உறுதிப்படுத்தினார்? (ஆதியாகமம் 50:24; எபிரெயர் 11:22)
12. ஜலப்பிரளயத்திற்கு பிறகு, முதல் பேரரசை உருவாக்கிய ராஜா யார்? (ஆதியாகமம் 10:8-12)
13. சமாரியாவை தலைநகரமாக ஆக்குவதற்கு முன்பாக, ராஜாவாகிய உம்ரி சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு யாரிடமிருந்து வாங்கினார்? (1 இராஜாக்கள் 16:24)
14. எந்த பட்டணத்தில், பவுலையும் பர்னபாவையும் யூப்பித்தர் மற்றும் மெர்க்கூரி கடவுட்களாக தவறாக எண்ணினர்? (அப்போஸ்தலர் 14:8-12)
15. அப்சலோமின் கலகத்திற்கு பிறகு, தாவீதும் அவருடைய ஆட்களும் எருசலேமிலிருந்து ஓடிப்போகையில் அவர்கள்மீது கற்களை எறிந்து, புழுதியை வாரித்தூற்றிக் கொண்டு சென்றவன் யார்? (2 சாமுவேல் 16:13)
16. வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும் சண்டையிடும் தரிசனத்தை தானியேல் எந்த ஆற்றங்கரையில் கண்டார்? (தானியேல் 10:4)
17. பாபேல் கோபுரம் எந்த இடத்தில் கட்டப்பட்டது? (ஆதியாகமம் 11:2)
வினாடிவினாவுக்கான விடைகள்
1. சிரேனே ஊரானாகிய சீமோன்
2. ‘மனுபுத்திரன்’
3. அன்பு
4. அவர் இயேசுவை மறுதலிப்பார்
5. மனாசே
6. ‘சிறியவனாயிருப்பவன்’
7. கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலுக்கு இசைய அவர் நடந்தார்; இப்படிப்பட்ட விவாகம் பெலிஸ்தருக்கு எதிராக போரிட அவருக்கு சந்தர்ப்பத்தை கொடுக்கும்
8. தகப்பனைப் போல், அவர்களுடைய உடல்களையும் ஜனங்களுக்கு முன்பாக கேவலமாக தூக்கில் தொங்கவிட வேண்டும்
9. தேசாதிபதிகள்
10. அந்த நாட்கள் குறைக்கப்படும்
11. எகிப்திலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு பிரயாணப்படுதல்
12. நிம்ரோத்
13. சேமேர்
14. லீஸ்திரா
15. பென்யமீன் கோத்திரத்தானாகிய சீமேயி
16. டைக்ரீஸ் (இதெக்கேல்)
17. சிநெயார்