உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 8/8 பக். 15-26
  • உங்களுக்குத் தெரியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்குத் தெரியுமா?
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—1998
  • ஞானமாய், தைரியமாய், தன்னலமின்றி செயல்பட்டாள்
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—1998
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 8/8 பக். 15-26

உங்களுக்குத் தெரியுமா?

(இந்தக் கேள்விகளுக்கான பதில்கள், கொடுக்கப்பட்டிருக்கும் பைபிள் மேற்கோள்களில் காணப்படலாம்; மேலும் எல்லா பதில்களும் பக்கம் 26-ல் அச்சிடப்பட்டிருக்கின்றன. கூடுதலான விவரங்களுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியால் வெளியிடப்பட்ட “வேதாகமங்களின் பேரில் உட்பார்வை” என்ற ஆங்கில பிரசுரத்தைக் காண்க.)

1. யெகோவா, தம்முடைய ஜனங்கள் விசுவாசமற்றவர்களாய் நடந்துகொண்டபோது அவருடைய எதிரிகள் அவர்களை தோற்கடிக்கும் படி அனுமதித்தபோதிலும், பிறகு அந்த தேசங்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுத்தார்? (உபாகமம் 32:26, 27; ஏசாயா 64:1, 2; நாகூம் 1:2)

2. குழந்தை பிறக்கும்போது மரித்துக்கொண்டிருந்த ராகேல் தன் இரண்டாவது மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்? (ஆதியாகமம் 35:18)

3. பவுல், ஒரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய போராயுதங்களை மாம்சத்திற்குரிய யுத்த கருவிகளுடன் ஒப்பிட்டபோது, விசுவாசத்தை எதற்கு ஒப்பிட்டார்? (எபேசியர் 6:16)

4. அரசனாகிய சவுலிடமிருந்து ஓடிக்கொண்டிருந்தபோது, தாவீது எந்த ராஜாவிடம் தஞ்சம் புகுந்தார்? (1 சாமுவேல் 27:2)

5. எதை செய்தால் பூமியின் சகல ராஜ்யங்களையும் இயேசுவுக்கு கொடுப்பதாக சாத்தான் வாக்களித்தான்? (லூக்கா 4:5-7)

6. பினெகாஸின் என்ன உடனடி நடவடிக்கை 24,000 இஸ்ரவேலர்களைக் கொன்ற வாதையை முடிவுக்கு கொண்டுவந்தது? (எண்ணாகமம் 25:7-9)

7. தான் மரணத்திலிருந்து தப்பிப்பிழைத்த விதத்தை யோபு எந்த சொற்றொடரை பயன்படுத்துவதன் மூலம் கூறுகிறார்? (யோபு 19:20)

8. கருமை நிறமுள்ள எந்த மரம் அடிக்கடி தந்தம் பதிக்கப்பட்டதாக பயன்படுத்தப்பட்டது? (எசேக்கியேல் 27:15)

9. என்ன காரணத்திற்காக அசீரிய ராஜா திகிலாத்பிலேசர் சீரியாவை முற்றுகையிட்டு, தமஸ்குவை பிடித்து, சிறைப்பட்டவர்களை கீர் பட்டணத்திற்கு கொண்டுசென்றான்? (2 இராஜாக்கள் 16:7-9)

10. பத்சேபாள் மூலமான தன்னுடைய முதல் குமாரன் இறந்துவிட்டதை கேள்விப்பட்ட பிறகு, தாவீது என்ன செய்தது அவர் ஊழியக்காரர்களை ஆச்சரியப்படுத்தியது? (2 சாமுவேல் 12:21)

11. “சரீரத்தின் விளக்காயிருக்கிறது” என்று இயேசு எதைச் சொன்னார்? (மத்தேயு 6:22)

12. கடவுளுடைய ஜனங்கள் மீதான கடைசி தாக்குதலை செய்ய கோகை தாம் எவ்வாறு வழிநடத்தப்போவதாக யெகோவா சொல்லியிருந்தார்? (எசேக்கியேல் 38:4)

13. யாருடைய சரீரத்தைக் குறித்து பிரதான தூதனாகிய மிகாவேலுக்கு சாத்தானுடன் தர்க்கம் உண்டாயிற்று? (யூதா 9)

14. நினிவேயில் தீர்க்கதரிசியாகிய யோனாவினுடைய ஊழியத்திற்குப் பிறகு அவருக்கு நிழல் தரும்படி யெகோவா எந்த செடியை கட்டளையிட்டார்? (யோனா 4:6, NW)

15. எஸ்தர், தனக்கு ராணியானபோது அகாஸ்வேரு ராஜா அவ்வளவாக சந்தோஷப்பட்டதினால், தன்னுடைய நாடுகளுக்கு எதை கொடுத்தார்? (எஸ்தர் 2:18, NW)

16. இயேசுவின் வாதனைக் கழுமரத்தை சுமந்துவரும்படி யார் கட்டாயப்படுத்தப்பட்டது? (லூக்கா 23:26)

17. தனக்கு குமாரர்களே இல்லாததனால் தன்னுடைய குமாரத்தியை தன் எகிப்திய வேலைக்காரனுக்கு கொடுத்து இவ்வாறு தன் வம்சாவழியை தொடரச்செய்த யூதா வம்சத்தான் யார்? (1 நாளாகமம் 2:34, 35)

18. ராகேல் குழந்தைபிறப்பினால் மரிப்பதற்குமுன் அவளுடைய மருத்துவச்சி எதை குறித்து அவளுக்கு நம்பிக்கையளித்தாள்? (ஆதியாகமம் 35:17)

19. எஸ்தர் மற்றும் அவளுடனிருந்த பெண்களுக்கு அழகு ஜோடிப்புக்காக என்ன விதமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டன? (எஸ்தர் 2:12)

20. விசுவாசமற்ற யூதாசுக்கு பதிலாக இன்னொருவர் மாற்றீடு செய்யப்படவேண்டிய விஷயத்தை யார் எழுப்பினது? (அப்போஸ்தலர் 1:15-22)

21. யேசபேலின் தகப்பன் யார்? (1 இராஜாக்கள் 16:31)

22. ஆசரிப்புக்கூடாரத்தை கட்டுவதற்கு எந்த இரண்டு மனிதர்களை யெகோவா நியமித்திருந்தார்? (யாத்திராகமம் 31:2, 6)

23. தாறுமாறான விதத்தில் ஆணையிடுவதைப் பற்றி இயேசு என்ன ஆலோசனை கொடுத்தார்? (மத்தேயு 5:37)

24. பைபிளில் இயேசு மாத்திரமே சொன்ன அதிக வாசனையுள்ள செடி எது? (மத்தேயு 23:23)

கேள்விகளுக்கான பதில்கள்

1. தம்முடைய பரிசுத்த நாமத்தினிமித்தம்—பெருமையுள்ள, தற்புகழ்ச்சியான அந்த தேசங்களை தாழ்த்துவதற்கு

2. பெனொனி

3. பெரிய கேடகம்

4. காத்தின் ராஜாவாகிய ஆகீஸ்

5. “பணிந்துகொண்டால்”

6. அந்த மனிதனையும் ஸ்திரீயையும் ஈட்டியால் உருவக் குத்திப்போட்டான்

7. “என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது”

8. கருங்காலி மரம்

9. யூத ராஜாவாகிய ஆகாஸ் அவனுக்கு லஞ்சம் கொடுத்திருந்தான்

10. உபவாசத்தைவிட்டு, சாப்பிட ஆரம்பித்தார்

11. கண்

12. அவன் வாயில் துறடுகளைப் போட்டு

13. மோசேயின் சரீரம்

14. ஒரு சுரைக்கொடி வகை (A bottle-gourd plant)

15. பொது மன்னிப்பு

16. சிரேனே ஊரானாகிய சீமோன்

17. சேசான்

18. அவளுடைய குமாரன் உயிருடன் பிறப்பான் என்று

19. வெள்ளைப்போளத் தைலம் மற்றும் சுகந்தவர்க்கங்கள்

20. பேதுரு

21. சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகால்

22. பெசலெயேல் மற்றும் அகோலியாப்

23. “உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்”

24. ஒற்தலாம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்