உங்களுக்குத் தெரியுமா?
(இந்த வினாடிவினாவுக்கான விடைகளை கொடுக்கப்பட்டுள்ள பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; விடைகளின் முழுப் பட்டியல் பக்கம் 28-ல் அச்சிடப்பட்டிருக்கிறது. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)
1. யெகோவாவின் பிரதான எதிரி யார்? (வெளிப்படுத்துதல் 20:2)
2. “ஜெஹோவா” என்பதே தெய்வீகப் பெயரின் மிகவும் பிரபலமான ஆங்கில உச்சரிப்பாக இருந்தபோதிலும், பெரும்பாலான எபிரெய வல்லுநர்களால் விரும்பப்படுவது எது?
3. வனாந்தரத்திலே தன்னை பராமரித்துக் கொள்ளும்படி ஆபிரகாமின் முதல் குமாரனான இஸ்மவேல் என்னவாக ஆனான்? (ஆதியாகமம் 21:20)
4. தன் தகப்பனுக்கு மரியாதைக் காட்டத்தவறியதால் தன் குமாரன்மேல் சாபம் வருவித்தவர் யார்? (ஆதியாகமம் 9:22-25)
5. சூலமித்திய ஸ்திரீயை அனுப்பிவிட மனமில்லாதவராக அவளுக்கு என்ன கொடுப்பதாக சாலொமோன் வாக்குறுதி கொடுத்தார்? (உன்னதப்பாட்டு 1:11)
6. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாத போதிலும், எந்த இடத்திலிருந்து மோசே அதைப் பார்த்தார்? (உபாகமம் 3:27)
7. நோவாவுடைய பேழையின் உட்புறங்களிலும் வெளிப்புறங்களிலும் எது பூசப்பட்டிருந்தது? (ஆதியாகமம் 6:14)
8. “நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓட” நாம் என்ன செய்யவேண்டும் என பவுல் கூறினார்? (எபிரெயர் 12:1)
9. பதிவு செய்யப்பட்ட முதல் உயிர்த்தெழுதலை யார் நடப்பித்தது? (1 இராஜாக்கள் 17:21-23)
10. என்ன காரணத்திற்காக புது திராட்சரசத்தை பழைய துருத்திகளில் வார்த்துவைக்க மாட்டார்கள் என்று இயேசு கூறினார்? (மாற்கு 2:22)
11. ஆதியாகமம் 6 முதல் 9 அதிகாரங்களில் என்ன பதிவு காணப்படுகிறது? (ஆதியாகமம் 6:9)
12. மூன்று வருஷத்துக்கு ஒருமுறை தர்ஷீஸுக்கு சென்ற தன்னுடைய கப்பல்களின் மூலம், பொன்னும், வெள்ளியும், யானைத் தந்தங்களும் உட்பட வேறு என்ன இரண்டு விதமான மிருகங்களையும் சாலொமோன் இறக்குமதி செய்தார்? (1 இராஜாக்கள் 10:22)
13. பிரிந்துசென்ற வடதேசத்து கோத்திரங்களின் பிராந்தியத்திற்குள் ராஜாவாகிய ரெகொபெயாமும் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமும் நுழைந்தபோது என்ன நடந்தது? (2 நாளாகமம் 10:18)
14. கடவுள், தம்முடைய “பாதபடி” என்று எதைக் குறிப்பிடுகிறார்? (அப்போஸ்தலர் 7:49)
15. அவன் பிறந்தவுடனேயே அவன் தாய், தன் கணவன் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு அவளும் இறந்துபோனதால் அனாதையானது யார்? (1 சாமுவேல் 4:19-21)
16. எதில் குறைபாடு உள்ளவர்களுக்கு கடவுள் “வல்லமையைப் பெருகப்பண்ணுகிறார்”? (ஏசாயா 40:29, திருத்திய மொழிபெயர்ப்பு)
17. கடவுளுக்கு செலுத்தப்படும் எதில் புளித்தமா அல்லது ‘தேன்’ இருக்கக்கூடாது? (லேவியராகமம் 2:11)
18. எந்தத் தேசத்தாரும் எதைக் கற்றுக்கொள்ளமாட்டார்கள் என மீகா தீர்க்கதரிசனம் உரைத்தார்? (மீகா 4:3)
19. கடவுளுடைய வார்த்தை எது என்று இயேசு கூறினார்? (யோவான் 17:17)
20. யோனாவின் தகப்பன் யார்? (யோனா 1:1)
21. எஸ்தரை தன்னுடைய ராணி ஆக்கினதினால் அகாஸ்வேரு ராஜா தன் அதிகார எல்லைக்குள் இருந்த நாடுகளுக்கு எதை அளித்தார்? (எஸ்தர் 2:18, NW)
22. ஒரு எபிரெய அடிமை, விடுவிக்கப்படாமல் தன் எஜமானுக்கு தொடர்ந்து அடிமையாக இருக்க மனப்பூர்வமாய் தெரிவுசெய்ததற்கு அடையாளமாக அவனுக்கு என்ன செய்யப்பட்டது? (யாத்திராகமம் 21:5, 6)
23. காயம்பட்ட மனிதனை பராமரிப்பதற்காக, அந்த நல்ல சமாரியன் அவனை எங்கே எடுத்துச் சென்றான்? (லூக்கா 10:34)
[பக்கம் 28-ன் குறிப்பு]
வினாடிவினாவுக்கான விடைகள்
1. பிசாசாகிய சாத்தான்
2. யாவே
3. வில்வித்தையில் வல்லவனாக
4. காம்
5. “வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்கள்”
6. பிஸ்காவின் கொடுமுடி
7. கீல்
8. “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவி[ட]”
9. எலியா
10. துருத்திகள் கிழிந்துபோய், திராட்சரசமும் துருத்திகளும் வீணாகிப்போகும்
11. நோவாவின் வரலாறு
12. குரங்குகளும் மயில்களும்
13. அதோராம் கல்லெறிந்து கொல்லப்பட்டான், ரெகொபெயாம் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிப்போனான்
14. பூமி
15. இக்கபோத்
16. சக்தி
17. போஜனபலி
18. யுத்தம்
19. சத்தியம்
20. அமித்தாய்
21. குற்ற மன்னிப்பு
22. அவன் காது கம்பியினால் குத்தப்படும்
23. சத்திரம்