உங்களுக்குத் தெரியுமா?
(இந்த வினாடிவினாவுக்கான விடைகளை, கொடுக்கப்பட்டுள்ள பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; முழு விடை பட்டியல், பக்கம் 27-ல் அச்சிடப்பட்டிருக்கிறது. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட, “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)
1. தம் சொந்த ஊரில் இயேசு என்ன வேலை செய்துவந்தார்? (மாற்கு 6:3)
2. ரோமில் எந்தக் கிறிஸ்தவனுடைய தாயை பவுல் அவ்வளவாய் நேசித்ததால் அவரை தன் சொந்த தாய் என்றே அழைத்தார்? (ரோமர் 16:13)
3. எபிரோனில் மோசேயால் அனுப்பப்பட்ட வேவுகாரர்கள் யாருடைய பிரமாண்டமான உருவத்தைப் பார்த்து பயந்ததால் அவர்களில் பத்துப்பேர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்லவே பயந்தார்கள்? (எண்ணாகமம் 13:22, 32, 33, NW)
4. பண்டைய அளவைகளின்படி, பரிசுத்த அபிஷேக தைலத்தை தயாரிப்பதற்கு எவ்வளவு ஒலிவ எண்ணெய் பயன்படுத்தப்பட்டது? (யாத்திராகமம் 30:24)
5. ‘துன்மார்க்கனுடைய பேருக்கு’ என்ன சம்பவிக்கும்? (நீதிமொழிகள் 10:7)
6. மக்பேலா குகையில் அடக்கம்பண்ணப்படுவதற்கு முன்பு யாக்கோபின் சவ அடக்க ஊர்வலம் எந்த இடத்தில் ஏழு நாட்கள் துக்கங்கொண்டாடும்படி நின்றது? (ஆதியாகமம் 50:10)
7. பெர்சிய ராஜா ஆகாஸ்வேரு, எதற்காக வஸ்தி ராணியைத் தனக்கு முன்பாக கொண்டுவரும்படி பிரதானிகளுக்குக் கட்டளையிட்டார்? (எஸ்தர் 1:10, 11)
8. அப்சலோமின் மரணத்துக்கு வழிநடத்தின சம்பவம் எது? (2 சாமுவேல் 18:9)
9. அரணிப்பான இடமான தெபீரைப் பிடிக்கிறவனுக்கு என்ன பரிசை அளிக்க காலேப் முன்வந்தார்? (யோசுவா 15:16)
10. தம் நித்தியத்துவத்தைக் காட்டுபவராய், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் என்ன சொற்களால் யெகோவா தம்மை விவரிக்கிறார்? (வெளிப்படுத்துதல் 1:8; 21:6)
11. பைபிள் காலங்களில் துக்கங்கொண்டாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய உடுப்பு எது? (ஆதியாகமம் 37:34)
12. தாவீதின் அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்கும்போது, தனக்குப் பதிலாக யாரை அரசவைக்குக் கூட்டிக்கொண்டு போகும்படி பர்சிலா சிபாரிசு செய்தான்? (2 சாமுவேல் 19:37)
13. பவுல் எருசலேமில் இருக்கையில் எதை வெளிப்படுத்துவதன் மூலம் சவுக்கால் அடிபடுவதிலிருந்து தப்பினார்? (அப்போஸ்தலர் 22:24-29)
14. அரசனாகிய சவுல் எங்குச் சென்று அஞ்சனம்பார்த்தார்? (1 சாமுவேல் 28:7)
15. ரோமர்கள், பரியாசமாக, இயேசுவின் வலது கையில் எதைக் கொடுத்து, பின்பு அதைக் கொண்டே அவரைச் சிரசில் அடித்தார்கள்? (மத்தேயு 27:29, 30)
16. முன்பு வேசியாய் இருந்த யார் இயேசுவின் மூதாதையானார்? (மத்தேயு 1:5)
17. எப்படிப்பட்ட கருக்கான கல்லைக்கொண்டு மோசேயின் மனைவி சிப்போராள் தன் புத்திரனுக்கு விருத்தசேதனம் செய்து, திடீர் ஆபத்தைத் தவிர்த்தாள்? (யாத்திராகமம் 4:25, NW)
18. உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்படுவார்கள்? (வெளிப்படுத்துதல் 20:12)
19. யாருடைய பெயருக்கு, “எதிர்ப்பவன்” என்று அர்த்தம்? (சகரியா 3:1, NW)
20. “மூப்பனானவனுக்கு” விரோதமாக ஒருவன் சொல்லும் குற்றச்சாட்டு, எது இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது? (1 தீமோத்தேயு 5:19)
21. பாபிலோனியர்களைச் சேர்ந்துகொள்ளப்போகிறவன் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில் எரேமியாவைக் கைதுசெய்தவன் யார்? (எரேமியா 37:13, 14)
22. ஆகானின் பாவத்தால் எந்தப் பட்டணத்து மனுஷருக்கு முன்பாக இஸ்ரவேலர்கள் முறிந்தோடினார்கள்? (யோசுவா 7:4, 5)
23. வேலை செய்ய முடிந்தும், மனதில்லாதிருக்கும் ஒருவன், என்ன செய்ய அனுமதிக்கப்படக்கூடாது? (2 தெசலோனிக்கேயர் 3:10)
24. பொல்லாதவர்களாயிருந்ததினால், யூதாவின் எந்த இரண்டு மகன்கள் யெகோவாவால் அழித்துப்போடப்பட்டனர்? (ஆதியாகமம் 38:7-10)
25. பண்டைய இஸ்ரவேலில் எதை ஆசரிக்காமல் இருந்ததால் மரண தண்டனை அளிக்கப்பட்டது? (யாத்திராகமம் 31:14, 15)
வினாடிவினாவுக்கான விடைகள்
1. தச்சுவேலை
2. ரூபை
3. நெஃபிலிமின் சந்ததியில் வந்தவர்கள் என்று தவறாக கருதப்பட்டவர்களான ஏனாக்கியர், அல்லது ஏனாக்கின் குமாரர்
4. ஒரு குடம்
5. அழிந்துபோகும்
6. ஆத்தாத்
7. அவளுடைய சௌந்தரியத்தை காண்பிக்கும்படி
8. அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, சன்னல்பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தில், அவனுடைய தலை மாட்டிக்கொண்டு, அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்
9. அவருடைய குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பது
10. ‘அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும்’
11. இரட்டு
12. கிம்காம்
13. அவர் ஒரு ரோமன்
14. எந்தோர்
15. ஒரு கோல்
16. ராகாப்
17. சக்கிமுக்கிக்கல்
18. “ஜீவ புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே . . . தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக”
19. சாத்தான்
20. இரண்டு மூன்று சாட்சிகள்
21. யெரியா
22. ஆயி
23. சாப்பிட
24. ஏர், ஓனான்
25. ஓய்வுநாள்