உங்களுக்குத் தெரியுமா?
(இந்த வினாடி வினாக்களுக்கான விடைகளை, கொடுக்கப்பட்டுள்ள பைபிள் வசனங்களில் காணலாம்;
விடைகளின் முழுப் பட்டியல், பக்கம் 24-ல் அச்சிடப்பட்டிருக்கிறது. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட “வேதாகமங்களின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)
1. கடவுள் பூமியின் ‘கோடிக்கல்லை வைத்த’ சமயத்தில், யார் ‘கெம்பீரித்தார்கள்’? (யோபு 38:4-7)
2. கடவுளுடைய ராஜ்யத்துக்கு என்றென்றைக்கும் என்ன நேரிடாது? (தானியேல் 2:44)
3. தன்னைத் துரத்துவதனால் சவுலுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை எதனுடன் தன்னை ஒப்பிடுவதன் மூலம் தாவீது சுட்டிக்காட்டினார்? (1 சாமுவேல் 24:14)
4. ஏழாம் தூதன் கடவுளுடைய கோபாக்கினைக் கலசத்திலுள்ளதை எங்கு ஊற்றினான்? (வெளிப்படுத்துதல் 16:17)
5. யாக்கோபின் வம்சத்தினர் ஏன் இஸ்ரவேலர் என அழைக்கப்படுகின்றனர்? (ஆதியாகமம் 32:28)
6. உலகிலேயே மிகுந்த உப்பான நீர் உள்ள இடம் எது? (ஆதியாகமம் 14:3-ஐக் காண்க.)
7. “ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும்” ஜெபிக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு ஏன் உற்சாகம் அளிக்கப்படுகிறது? (1 தீமோத்தேயு 2:1, 2)
8. கொன்னைவாயுடைய ஒரு செவிடனை சுகப்படுத்துகையில் என்ன செமிட்டிக் சொற்றொடரை இயேசு பயன்படுத்தினார்? (மாற்கு 7:34)
9. எந்த ஊரில் இயேசு தமது முதல் அற்புதத்தைச் செய்தார்? (யோவான் 2:11)
10. ஏசாவுக்குக் கொடுக்கப்பட்ட பட்டப்பெயர் என்ன? (ஆதியாகமம் 36:1)
11. மனமில்லாமற்போன எருசலேமை தாம் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்ததைக் காட்டின உவமையில் இயேசு பயன்படுத்தின பிராணி எது? (லூக்கா 13:34)
12. பொருட்கள் செய்யப்படும் எந்த உலோகத்தைக் கருக்கிட அதே உலோகம் பயன்படுத்தப்படுகிறது? (நீதிமொழிகள் 27:17)
13. அப்போஸ்தலனாகிய யோவான், தான் கண்ட தரிசனத்தில் ஆட்டுக்குட்டியானவரையும், 1,44,000 பேரையும் எங்கே நிற்கக்கண்டார்? (வெளிப்படுத்துதல் 14:1)
14. யூதரல்லாதவர்களின் விருத்தசேதனம் பற்றி எழுந்த சூடான விவாதத்துடன் எருசலேமிலிருந்த ஆளும் குழுவிடம் சென்றவர்கள் யார்? (அப்போஸ்தலர் 15:2)
15. இஸ்ரவேலின் பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்துக்கு தலைநகராய் இருந்த பட்டணம் எது? (1 இராஜாக்கள் 16:29)
16. “அந்த மிருகத்தின்” இலக்கம் என்ன? (வெளிப்படுத்துதல் 13:18)
17. சேபாவின் ராஜஸ்திரீ எருசலேமுக்கு ஏன் வந்தாள்? (1 இராஜாக்கள் 10:4)
18. யூதாவின் எந்த அரசன் மெய் வணக்கத்தின் பேரில் அவ்வளவு வைராக்கியமாய் இருந்ததால், “அருவருப்பான விக்கிரகம்” செய்ததினிமித்தம் தன் பாட்டியை அவளது ராஜ பதவியிலிருந்து விலக்கினான்? (1 இராஜாக்கள் 15:13)
19. இரண்டாம் தூதன் கடவுளுடைய கோபாக்கினை கலசத்திலுள்ளதை எதன்மீது ஊற்றினான்? (வெளிப்படுத்துதல் 16:3)
20. திப்சாவுக்கு கடுந்தண்டனை அளித்த பொல்லாத இஸ்ரவேல் அரசன் யார்? (2 இராஜாக்கள் 15:16)
21. பொதுவாக எந்த ஆயுதம் எறியப்பட்டது? (யோசுவா 8:18)
22. பாபிலோனிய சிறையிருப்பைத் தொடர்ந்து ஏத்தானீம் என்ற சந்திர மாதத்துக்கு இடப்பட்ட பெயர் என்ன?
வினாடி வினாக்களுக்கான விடைகள்
1. தேவபுத்திரர்
2. ‘என்றென்றைக்கும் அழியாது’
3. “ஒரு தெள்ளுப்பூச்சி”
4. ஆகாயத்தில்
5. ஏனெனில் கடவுள் அவருடைய பெயரை இஸ்ரவேல் என மாற்றினார்
6. உப்புக்கடல்
7. “கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு”
8. எப்பத்தா (அர்த்தம், “திறக்கப்படுவாயாக”)
9. கானா
10. ஏதோம்
11. கோழி
12. இரும்பு
13. பரலோக சீயோன் மலையில்
14. பவுலும் பர்னபாவும்
15. சமாரியா
16. 666
17. சாலொமோனின் ஞானத்தைக் கேட்க
18. ஆசா
19. சமுத்திரத்தின்மீது
20. மெனாகேம்
21. ஈட்டி
22. திஷ்ரி