உங்களுக்குத் தெரியுமா?
(இந்தக் கேள்விகளுக்கான விடைகள் இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வசனங்களில் இருக்கின்றன, சரியான விடைகள் 27-ம் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. கூடுதல் தகவல்களுக்கு உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட “வேதாகமங்களின் பேரில் உட்பார்வை,” [ஆங்கிலம்] பிரசுரத்தைப் பார்க்கவும்.)
1. கிரய பலியில் இயேசு வகிக்கும் பாகத்தின் காரணமாக, முழுக்காட்டுபவனாகிய யோவான் அவரை என்னவென்று அழைத்தார்? (யோவான் 1:29)
2. கோகுவின் சேனை வரும் ‘வட தேசத்தின் தூரப் பகுதியிலுள்ள’ அந்த நாடு எது? (எசேக்கியேல் 38:2, 15, NW)
3. “கெட்ட கூட்டுறவுகள்” எதைக் கெடுக்கும்? (1 கொரிந்தியர் 15:33, NW)
4. “நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியத்தக்க ஞானேந்திரியங்களை” முதிர்ச்சியானோர் எவ்வாறு பெற்றுள்ளனர்? (எபிரெயர் 5:14)
5. அப்சலோமும் அதோனியாவும் ராஜ்யபாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கையில் என்ன செய்தார்கள்? (2 சாமுவேல் 15:1; 1 இராஜாக்கள் 1:5)
6. பவுல் சொல்கிறபடி, எது கையைப் பார்த்து “நீங்கள் எனக்கு வேண்டுவதில்லை” என சொல்லக்கூடாது? (1 கொரிந்தியர் 12:21)
7. யோசுவாவின் தகப்பன் யார்? (யோசுவா 1:1)
8. “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்படும்” என்று மீகா தீர்க்கதரிசனம் உரைத்தார், அது எங்கே ஸ்தாபிக்கப்படும்? (மீகா 4:1)
9. ஆகானும் அவனுடைய வீட்டாரும் எங்கே கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்? (யோசுவா 7:24)
10. விசுவாசம் அவசியம் என்று பவுல் சொல்லும்போது, ஒருவர் கடவுளைப் பற்றி என்ன நம்பிக்கை வைக்க வேண்டுமென சொன்னார்? (எபிரெயர் 11:6)
11. காயீனின் பேரன் யார்? (ஆதியாகமம் 4:18)
12. சவுலின் கோத்திரம் எது? (1 சாமுவேல் 9:21)
13. முந்திக்கொண்டு, தாவீது குடிமதிப்பு எடுத்ததால், தண்டனைக்குரிய மூன்று தெரிவுகளை எந்தத் தீர்க்கதரிசியின் மூலம் கடவுள் கொடுத்தார்? (1 நாளாகமம் 21:9-12)
14. மகா பாபிலோனோடு வேசித்தனம் செய்கிறவர்கள் யார்? (வெளிப்படுத்துதல் 17:1)
15. யூதர்களின் பரிசுத்த நாட்காட்டியில் எந்த மாதத்தை முதலாம் மாதமாக யெகோவா குறிப்பிட்டார்? (எஸ்தர் 3:7)
16. ஆபிரகாமின் சகோதரன் மகன் லோத்தை, அண்டை நாட்டு ராஜாக்களை திரட்டி வந்து சிறைபிடித்தது யார்? (ஆதியாகமம் 14:9)
17. நோய்வாய்ப்பட்ட ராஜா இறந்துபோவார் என்ற செய்தியை எலியாவே அனுப்பினார் என்று எந்த இரண்டு உடைகள் மூலம் அகசியா தெரிந்துகொண்டார்? (2 இராஜாக்கள் 1:8)
18. சூலேமிய பெண்ணின் சகோதரர்கள் அவளுடைய சருமத்தின் நிறத்தை மங்கச் செய்வதற்கு அவளை எங்கு வைத்தனர்? (உன்னதப்பாட்டு 1:6)
19. கடவுளுடைய பெயரை எழுதுவதில் அநேக கல்வியாளர்கள் ஆதரிக்கும் எழுத்துக் கூட்டு (spelling) என்ன?
20. மாவீர ராஜா இயேசுவுக்கு சூட்டப்பட்டதும், அவரது மேலங்கிகளில் எழுதப்பட்டதுமான பெயர் என்ன? (வெளிப்படுத்துதல் 19:16)
கேள்விகளுக்கான விடைகள்
1. “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி”
2. மாகோகு
3. ‘நல்ல பழக்கங்களைக் கெடுக்கும்’
4. “பயிற்சியினால்”
5. அவரவர் ஒரு இரதத்தையும் அதற்குமுன் ஓடும் 50 மனிதர்களையும் உண்டுபண்ணிக் கொண்டார்கள்
6. கண்
7. நூன்
8. ‘மலைகளுக்கு மேல்’
9. ஆகோர் பள்ளத்தாக்கு
10. “அவர் உண்டென்றும் அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவரென்றும்”
11. ஈராத்
12. பென்யமீன் கோத்திரம்
13. காத்
14. “பூமியின் ராஜாக்கள்”
15. நிசான்
16. ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேர்
17. மயிர் உடையும் வார்க்கச்சையும்
18. திராட்சத்தோட்டக் காவற்காரி
19. யாவே (Yahweh)
20. “ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா”