உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 5/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1999
  • இதே தகவல்
  • ‘யெகோவா தம் முகத்தை அவர்கள்மீது பிரகாசிக்கச் செய்திருக்கிறார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • கண்கள் காணும் மௌன மொழி!
    விழித்தெழு!—1998
  • காதுகேளாத சகோதர சகோதரிகளை நெஞ்சார நேசியுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • காது கேட்காதவர்கள்மேல் கடவுள் எப்படி அக்கறை காட்டுகிறார்?
    வேறுசில தலைப்புகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 5/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

இளைஞர் தற்கொலை “இன்றைய இளைஞர்​—⁠அவர்களுக்கு என்ன நம்பிக்கை?” (செப்டம்பர் 8, 1998) தொடர் கட்டுரைகளுக்காக உங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி. அவற்றை கண்ணீர் மல்க வாசித்தேன். நான் பல தடவை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்து இருக்கிறேன். ஆனால், அவற்றில் நான் வெற்றி பெறாததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏ. இஸட்., செக் குடியரசு

உணர்ச்சிகளை பாதிக்கும் மிகச் சிறப்பான கட்டுரைகள் இவை. இந்த வருடத்தின் ஆரம்பத்தில், மருத்துவ சிகிச்சைப் பெறுமளவுக்கு மன உளைச்சலின் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது, என்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயன்றேன். சரியான நேரத்தில் வந்த இந்தக் கட்டுரைகளுக்கு மிக்க நன்றி. அது என் உயிரைக் காப்பாற்றியது.

ஆர். பி., இங்கிலாந்து

விசனகரமான விஷயம் என்னவெனில், என்னுடைய சக மாணவர்களுள் இருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்றவர்கள். அவர்களில் ஒருவருக்கு, தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கையில், பிரச்சினைகள்தான் கண்முன் தோன்றினவே தவிர நல்ல காரியங்கள் ஏதும் தெரியவில்லை என்பதால் தற்கொலைக்கு முயன்றார். எனவே, இக்கட்டுரை நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது. நம்முடைய எதிர்காலம் எப்படி ஒளிமயமாக இருக்கமுடியும் என்பதை தெள்ளத்தெளிவான முறையில் விளக்கியது.

ஆர். டி., ஸ்பெய்ன்

உங்களுடைய கட்டுரைகள் என் இதயத்தை உருக்கிவிட்டன. அன்பான தகப்பனைப் போல் யெகோவா தேவனே என்னிடம் பேசுவதுபோல் இருந்தது. நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது, என்னுடைய தகப்பனே என்னை துஷ்பிரயோகம் செய்தார். அதனால், நான் ஒன்றுக்கும் உதவாதவள் என்ற எண்ணமே எப்போதும் மேலோங்கி இருந்தது. அநேக தடவை நான் தற்கொலை செய்துகொள்ள நினைத்திருக்கிறேன். ஆனால், இப்பொழுதோ உங்களுடைய கட்டுரையின் ஆலோசனைப்படி “வருங்கால ஜீவனுக்கான” பேராவலை வளர்க்கிறேன்.​—⁠1 தீமோத்தேயு 6:⁠19.

எஸ். ஆர்., பிரேஸில்

குறிப்பாக, அநேக இளைஞர்கள் சொன்னதை மேற்கோள்களாக தந்தமைக்கு நன்றி. அவற்றில் பெரும்பாலானவை பிரச்சினைகளுக்கான தீர்வை ஓரிரு வார்த்தைகளில் ரத்தின சுருக்கமாக தந்தன.

டபிள்யூ. ஹெச்., ஜெர்மனி

பணம் சம்பாதித்தல்  “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் எப்படி கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம்?” (ஆகஸ்ட் 22, 1998) என்ற தகவல் நிறைந்த கட்டுரையை நேரம் எடுத்து பிரசுரித்ததற்காக மிக்க நன்றி. வேலை கிடைப்பது எனக்கு சிரமமாக இருந்தது. ஆனால், நீங்கள் கொடுத்த ஆலோசனைகளை பின்பற்றினேன். கைமேல் பலன் கிட்டியது. ஆம், வேலை கிடைத்தது!

எஸ். டி., கானா

சைகை மொழி  “கண்கள் காணும் மெளன மொழி!” (செப்டம்பர் 8, 1998) கட்டுரையை படித்தபின், உங்களுக்கு பாராட்டுக் கடிதம் எழுதாமல் என்னால் இருக்கமுடியவில்லை. வித்தியாசமான நிலைமைகளில் இருக்கும் மற்றவர்களைப் புரிந்துகொள்ள இப்படிப்பட்ட கட்டுரைகள் எங்களுக்கு உதவுகின்றன. பிறவி செவிடான ஒரு தோழி எனக்கு இருக்கிறாள். அதனால், சைகை மொழியை கற்றுக்கொள்ள நான் விரும்பினேன். ஆனால், ஏதோ சில காரணங்களால், எனக்கு அதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. ஆனால், அதைக் கற்றுக்கொள்வதை இனியும் நான் தள்ளிப்போடுவதாக இல்லை!

எம். இ., இங்கிலாந்து

காது கேளாதோருக்கு ஆதரவு காண்பிப்பதில் நீங்கள் எடுக்கும் பெருமுயற்சிக்காக நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களுடைய கட்டுரையின் சில பிரதிகளை அரசாங்க அதிகாரிகளுக்கு கொடுத்தேன். அவை அத்தனை அருமையாக எழுதப்பட்டு இருந்ததால் இன்னும் அதிக பிரதிகளை அவர்கள் கேட்டனர்! தன்னுடைய காது கேளாத மகள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிப்பதை எதிர்க்கும் ஒரு பெண்மணிக்கும் இதைக் காண்பித்தேன். இக்கட்டுரையைப் படித்துவிட்டு அவள் ஆனந்தக் கண்ணீர் விட்டாள். இப்பொழுது தன் மகள் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்வதை தடை செய்வதில்லை. கிறிஸ்தவ மாநாடு ஒன்றிற்கு செல்வதற்கான போக்குவரத்து செலவையும் தருவதாக அவள் ஒப்புக்கொண்டிருக்கிறாள்!

இ. ஆர்., மெக்ஸிகோ

இக்கட்டுரையை எந்தளவு நான் ரசித்துப் படித்தேன் என்பதை உங்களுக்கு எழுதாமல் இருக்கமுடியவில்லை. யெகோவாவின் சாட்சிகளின் உள்ளூர் சைகை-மொழி சபைக்கு உதவிசெய்ய, அமெரிக்க சைகை மொழியை கற்றுக்கொள்ளும் இலக்கு எனக்கு இருந்தது. ஆனால் ஏனோ உற்சாகம் இல்லாமல் போய்விட்டது. என்னுடைய இலக்கை அடைவதற்கு தேவையான ஊக்கத்தை அக்கட்டுரை சரியான நேரத்தில் தந்தது!

என். டி., ஐக்கிய மாகாணங்கள்

காது கேளாதோர் தங்களுடைய சைகை மொழியிலேயே யோசிக்கின்றனர் என்பதை அறிவது உண்மையிலேயே ஆர்வத்தைத் தூண்டியது. எனக்கு காது நன்றாக கேட்பதால் காது கேட்காதவர்களோடு நல்ல முறையில் ‘பேசும்’ வழிகளுக்காக இதுமுதல் நான் முயற்சி செய்வேன்.

பி. ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்