உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 6/8 பக். 3
  • ஊனம்—உங்களுக்கு உண்டாகுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஊனம்—உங்களுக்கு உண்டாகுமா?
  • விழித்தெழு!—1999
  • இதே தகவல்
  • ஊனமாதல்—ஆபத்தைத் தவிர்க்க வழிகள்
    விழித்தெழு!—1999
  • கண்ணி வெடிகளால்—ஏற்படும் சேதம்
    விழித்தெழு!—2000
  • செயற்கை கை, கால் பொருத்தும் மையத்திற்கு ஒரு விஜயம்
    விழித்தெழு!—2006
  • ஊனமானாலும் உற்சாகமான வாழ்க்கை
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 6/8 பக். 3

ஊனம்—உங்களுக்கு உண்டாகுமா?

சரஜெவோ நகரில் வசந்தகால வானிலே கதிரவன் வலம்வந்து கொண்டிருந்தான். அதன் இளம்சூட்டை ரசித்தபடி நடந்துகொண்டிருந்த பெஞ்சமின், மண்ணுக்குள் மறைந்திருந்த கண்ணிவெடி ஒன்றில் கால்வைக்க அவருடைய இடது கால் சின்னாபின்னமானது. “எழுந்து நிற்க முயன்றேன், ஆனால் முடியவில்லை” என அவர் கூறுகிறார். ஒரு வருடத்தில், கண்ணிவெடிகள் காரணமாக மரிக்கும் அல்லது ஊனமாகும் 20,000 அப்பாவிகளில் ஒருவர்தான் பெஞ்சமின்.

அங்கோலாவில் மட்டும் சுமார் 1.5 கோடி கண்ணிவெடிகள் மறைந்திருக்கின்றன. இது அந்நாட்டிலுள்ள ஆண், பெண், குழந்தை ஒவ்வொருவருக்கும் ஒன்று என்ற விகிதத்தைவிட அதிகம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! இவற்றால் ஊனமானவர்களில் 70,000 பேர் இப்போதும் அங்கோலாவில் உள்ளனர். கம்போடியாவிலோ கிட்டத்தட்ட 80 லட்சம் முதல் ஒரு கோடி கண்ணிவெடிகள் மண்ணுக்குள் இன்னமும் ஒளிந்திருக்கின்றன. உலகிலேயே, இவற்றால் ஊனமாகிறவர்களின் மிகவும் அதிகமான சதவிகிதம் அந்த நாட்டில்தான்; அதாவது 236 பேரில் ஒருவர் முடம் என கணிக்கப்படுகிறது. பாஸ்னியாவிலும் ஹெர்ட்ஸகோவினாவிலும் 30 லட்சத்திற்கும் அதிகமான கண்ணிவெடிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது, அதாவது ஒரு சதுர மைல் பரப்பில் 152 என்ற விகிதம்.

யுத்தம் நடைபெறும் தேசங்களில் மட்டுமே மக்கள் ஊனமாவதில்லை. உதாரணமாக, அமெரிக்காவில் சுமார் 4,00,000 பேர் ஊனமாகி தவிக்கின்றனர். அவ்வாறு ஊனமான வயது வந்தவர்களில் பெரும்பாலானோர் “கடைக்கோடி இரத்தக் குழாய் நோய்” (peripheral vascular disease) அல்லது சுருக்கமாக பிவிடி என அழைக்கப்படும் நாள்பட்ட நோயின் காரணமாகவே ஊனமாகிறார்கள். பிவிடி என்பது அநேக குறைபாடுகளை உள்ளடக்கும் ஒரு பொதுவான வார்த்தையே. அது, “கைகள் அல்லது கால்களிலுள்ள தமனிகளிலும் சிரைகளிலும் ஏற்படும் வியாதிகள், முக்கியமாய் கை கால்களுக்கு போதுமான இரத்தம் போய்வருவதை தடைசெய்யும் நிலைமைகள்” போன்ற பல வியாதிகளை உள்ளடக்கும் துல்லியமற்ற வார்த்தை என டேபர்ஸ் சைக்ளோப்பீடிக் மெடிக்கல் டிக்ஷ்னரி விளக்குகிறது. பிவிடி ஏற்படுவதற்கான ஒரு முக்கிய காரணம் டயாபெடிஸ் அல்லது சர்க்கரை வியாதி ஆகும். “உலக முழுவதும் வயது வந்தவர்கள் மத்தியில் ஏற்படும் டயாபெடிஸ், 1997-⁠ல் 14.3 கோடியாக இருந்தது 2025-⁠ல் 30 கோடி என இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கும்” என்று உலக சுகாதார அறிக்கை 1998 (ஆங்கிலம்) கூறுகிறது.

அமெரிக்காவில் ஊனமாவதற்கான இரண்டாவது முக்கிய காரணம், வாகனங்கள், மிஷின்கள், மின் கருவிகள், வெடி மருந்துகள் ஆகியவற்றின் விபத்துகளால் விளையும் அதிர்ச்சி புண்கள் ஆகியவையே. கை அல்லது கால் துண்டிக்கப்படுவோரில் 20 முதல் 30 சதவிகிதமானோர் இதன் காரணமாகவே ஊனமாகின்றனர். கழலைகள் (சுமார் 6 சதவிகிதம்), பிறவி கோளாறுகள் (சுமார் 4 சதவிகிதம்) ஆகியவையும் ஊனமாவதற்கான மற்ற காரணங்களாகும்.

அருமையான ஓர் உறுப்பை இழப்பது என்று நினைத்தாலே கதிகலங்கிப் போகிறது, இல்லையா? ஆனால் இந்த ரிஸ்கைக் குறைக்க ஏதாவது வழி இருக்கிறதா? நீங்கள் ஏற்கெனவே ஊனமாகியிருந்தால் உற்சாகமான வாழ்க்கை வாழ முடியுமா? இவை மட்டுமல்ல இன்னும் அநேக கேள்விகளுக்கான பதில்களை பின்வரும் கட்டுரைகளில் காண்க.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்