எமது வாசகரிடமிருந்து
செமிட்டிக் இனத்தவருக்கு விரோதமானவர்கள் அல்ல நீங்கள் சொல்லிய விஷயத்திற்காக பிறகு வருந்தியதை ஒளிவுமறைவின்றி ஒத்துக்கொண்டீர்கள், அதற்காக பாராட்டுகிறேன். நீங்கள் சொன்ன ஸ்டேட்மென்டுக்காக வருத்தம் தெரிவித்திருப்பதை நான் வாசிக்க விரும்பியபோதிலும், யூத மக்கள் அனைவரையும் பொதுவில் குறிப்பிடவில்லை என்று அக்கட்டுரையில் நீங்கள் அளித்த விளக்கமே போதுமானதாக இருந்தது. விழித்தெழு! பத்திரிகையின் தரத்தையும் நேர்மையையும் உங்களுடைய வாசகர்கள் மெச்சுகிறார்கள். எனவே உங்களுடைய நற்பணியை தொடருங்கள்.
டபிள்யு. எச்., ஐக்கிய மாகாணங்கள்
“உண்மைகளின் அறிக்கை” என்பதிலிருந்த ஸ்டேட்மென்டுகளை இந்த வாசகர் குறிப்பிடுகிறார். 1933-ல் ஜெர்மனியிலுள்ள பெர்லினில் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் இந்த அறிக்கை. (“யெகோவாவின் சாட்சிகள் நாஸி கொடுமையை அஞ்சா நெஞ்சோடு எதிர் கொண்டனர்” என்ற ஜூலை 8, 1998 விழித்தெழு!-வை பாருங்கள்.) அந்தக் கட்டுரை குறிப்பிட்டபடி, யூதர்களிடம் பகைமையை காட்டும் அல்லது அதை கண்டும் காணாமல் விட்டுவிடும் எதுவும் 1933-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சொல்லப்படவில்லை. அதிலுள்ள சில ஸ்டேட்மென்டுகள் இன்றைக்கு அப்படிப்பட்ட அபிப்பிராயத்தை கொடுத்திருந்தால் அதற்காக நாங்கள் வருந்துகிறோம். யெகோவாவின் சாட்சிகள் செமிட்டிக் இனத்தவருக்கு எதிரானவர்கள் என்பதை இந்த “உண்மைகளின் அறிக்கை” அர்த்தப்படுத்துவதாக 1930-களுக்கு முன் வாழ்ந்தவர்கள் யாரேனும் விளக்கம் கொடுத்திருந்தால், யூதர்களின் சார்பாக சாட்சிகள் எடுத்த தைரியமான மற்றும் இரக்கமான செயல்களை கவனிப்பதன்மூலம் இந்தத் தவறான அபிப்ராயத்தை எளிதில் திருத்தியிருக்க முடியும். மேலும், ஐரோப்பாவிலுள்ள யூதர்கள் கொடுமையாக நடத்தப்பட்டதைப் பற்றி முதன் முதலில் பகிரங்கமாக வெளிப்படுத்தியது உவாட்ச் டவர் சொஸைட்டி பத்திரிகைகளே.
ஏழு பையன்களை வளர்த்தல்
“ஏழு பையன்களை வளர்க்கும் சவால்களும் ஆசீர்வாதங்களும்” (ஜனவரி 8, 1999) என்ற கட்டுரைக்கு என்னால் நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஒரு பருவ வயது பிள்ளையை வளர்ப்பது, அதுவும் ஒரு விதவையாக இருந்து வளர்ப்பது ரொம்ப சவாலானது என்பதை நான் கண்டிருக்கிறேன். என்னுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் இந்தக் கட்டத்தை சமாளிப்பது முற்றிலும் சாத்தியம் என்பதை இந்தக் கட்டுரையை படிக்கிறவரை நான் உணரவே இல்லை.
ஏ. ஆர்., ஐக்கிய மாகாணங்கள்
நானும்கூட ஏழு பிள்ளைகளையுடைய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள். கொஞ்ச நாட்களுக்கு முன்புவரை, நாங்கள் யெகோவாவை ஒற்றுமையுடன் சேவித்து வந்தோம். ஆனால், சுமார் ஆறு மாதங்களுக்குமுன் என் இளைய சகோதரிகளில் ஒருத்தி சபைநீக்கம் செய்யப்பட்டாள். முதலில் இந்தக் கட்டுரை என் கண்ணில் பட்டபோது, வெற்றிகரமான இந்தக் குடும்பத்தின் அனுபவத்தை வாசிக்க விரும்பவில்லை. பொறாமையை தவிர்த்து அந்தக் கட்டுரையிலிருந்து பயனடைய வேண்டும் என ஜெபம் செய்தேன். எங்கள் குடும்பத்தைப் போன்ற அனுபவத்தையுடைய குடும்பம் ஒன்று உள்ளது என்பதையும், எங்களுடைய சூழ்நிலையை குறித்து யெகோவா அக்கறை உள்ளவராய் இருக்கிறார் என்பதையும் கற்றுக்கொண்டது என்னை அதிகமாக உற்சாகப்படுத்தியது. தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்காக டிக்மென் குடும்பத்தாருக்கு என்னுடைய நன்றி. இந்தக் கட்டுரையைப் படித்து என் பெற்றோரும் தம்பி தங்கைகளும் அதிக உற்சாகத்தையும் ஆறுதலையும் பெற்றிருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
டபிள்யு. ஒய்., ஜப்பான்
முகத் தழும்புகள் “முகத் தழும்புகள்—நைஜீரியாவின் மறைந்துவரும் ‘அடையாள அட்டை’ ” (ஜனவரி 8, 1999) என்ற கட்டுரைக்கு என் உள்ளப்பூர்வமான நன்றி. முகத் தழும்புகளையுடைய ஆப்பிரிக்க நண்பர்கள் எனக்கும் என் கணவனுக்கும் உள்ளனர். அது என்ன தழும்புகள் என்று நாங்கள் யோசித்ததுண்டு. எங்களுடைய கேள்விக்கான பதிலை உங்கள் கட்டுரையிலிருந்து பெற்றோம்.
எம். .வி., இத்தாலி
சிங்கங்கள் “ராஜநடைபோடும் ஆப்பிரிக்க சிங்கங்கள்” (ஜனவரி 22, 1999) என்ற கட்டுரைக்கு நன்றி. சிங்கங்கள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே இந்தக் கட்டுரை எனக்காகவே எழுதப்பட்டதுபோல் இருந்தது. அவற்றின் அழகும் துணிவும் என்னை சொக்க வைக்கின்றன. ஒரு நாள் நானும்கூட ‘பாலசிங்கத்துடன்’ விளையாட விரும்புகிறேன்.—ஏசாயா 11:6-9.
இ. ஏ. எஸ்., பிரேஸில்
தாவரங்கள் Vs தூய்மைக்கேடு “தாவரங்கள் Vs தூய்மைக்கேடு” (ஜனவரி 22, 1999) என்ற சிறிய கட்டுரை உண்மையிலேயே பிரமாதம். அன்பாக பராமரித்து வரும் புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அந்தக் கட்டுரை நிரூபித்தது. பூமியை அழிப்பதற்கான மனித முயற்சிகளின் அச்சுறுத்தல் ஒருபுறமிருக்க எவ்வாறு பூமி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் வண்ணம் யெகோவா படைத்திருக்கிறார் என்பதை அது காண்பித்தது. அந்தக் கட்டுரை லூக்கா 23:43-ல் இயேசு வாக்களித்த பரதீஸிய வாழ்க்கையில் என் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியது.
ஆர். ஜெ., ஐக்கிய மாகாணங்கள்