உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g01 4/8 பக். 3
  • சரித்திரத்தை நம்பலாமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சரித்திரத்தை நம்பலாமா?
  • விழித்தெழு!—2001
  • இதே தகவல்
  • கடந்தகாலம் புகட்டும் பாடம் என்ன?
    விழித்தெழு!—2001
  • பைபிள் நம்பத்தகுந்த சரித்திர பதிவா?
    விழித்தெழு!—2001
  • பொருளடக்கம்
    விழித்தெழு!—2001
  • பைபிள் சரித்திரத்தின் மகா உலக வல்லரசுகள் தங்கள் முடிவை நோக்கி அணிவகுத்துச் செல்லுகின்றன! அணிவகுத்துச் செல்லுகின்றன
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
மேலும் பார்க்க
விழித்தெழு!—2001
g01 4/8 பக். 3

சரித்திரத்தை நம்பலாமா?

“சரித்திரத்தை அறிந்திருப்பது, . . . நாம் பிறப்பதற்கு முன்பே காலகாலமாக இருந்துவரும் சமுதாயத்தின், நாம் இறந்த பிறகும் காலகாலமாக இருக்கப்போகும் சமுதாயத்தின் பாகமாக இருக்கிறோம் என்ற உணர்வை நமக்கு அளிக்கிறது.” சரித்திர ஆராய்ச்சிக்கான துணைநூல் (ஆங்கிலம்), மைக்கல் ஸ்டான்ஃபர்ட் எழுதியது.

சரித்திரத்தை அறியாதிருந்தால், வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சத்தையே இழந்திருப்பதாக அர்த்தம். சரித்திர அறிவு இல்லை என்றால், உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்கு, உங்கள் இனத்திற்கு, ஏன் உங்கள் தேசத்திற்குக்கூட ஆரம்பமே அல்லது கடந்தகாலமே இல்லாதது போலல்லவா தெரியும். நிகழ்காலத்திற்கேகூட அஸ்திவாரமும் அர்த்தமும் இல்லாதது போல் தோன்றும்.

வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பாடங்களை அள்ளி வழங்கும் கிடங்கு என சரித்திரத்தை அழைக்கலாம். செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்யாதிருக்க அது நமக்கு உதவும். தத்துவஞானி ஒருவர் சொன்னபடி, கடந்தகாலத்தை மறந்துவிட்டவர்கள் முன்பு செய்த தவறை மீண்டும் செய்வது நிச்சயம். சரித்திரத்தை அறிந்துகொண்டால், பூர்வ நாகரிகங்கள், வியப்பூட்டும் கண்டுபிடிப்புகள், சுவாரஸ்யமான மக்கள், வித்தியாசமான கண்ணோட்டங்கள் என பல விஷயங்களை புரிந்துகொள்ள முடியும்.

ஆனால் வெகு காலத்திற்கு முன்பு வாழ்ந்த மக்களையும் நடந்த சம்பவங்களையும் பற்றியதே சரித்திரம் என்பதால் அதை நம்பலாமா கூடாதா என எப்படி தெரிந்துகொள்வது? சரித்திரத்திலிருந்து மதிப்புமிக்க பாடங்களை கற்றுக்கொள்ளப் போகிறோம் என்றால், நிச்சயம் அவை உண்மையை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். உண்மை என்பது மட்டும் தெரிந்துவிட்டால் கண்டிப்பாக அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சிலசமயம் உண்மை கசக்கலாம் என்றாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சரித்திரத்தை ரோஜா மலர் பூத்துக் குலுங்கும் தோட்டத்திற்கு ஒப்பிடலாம். அதில் அழகிற்கு பஞ்சமிருக்காது, அதேசமயம் முட்களுக்கும் பஞ்சமிருக்காது; அது மனதை மலரச் செய்யலாம், அதேசமயம் மனதை முள்ளாய் குத்தலாம்.

நாம் வாசிக்கும் சரித்திர பதிவுகள் உண்மைதானா என்பதை எடைபோட உதவும் சில அம்சங்களை பின்வரும் கட்டுரைகளில் கவனிப்போம். அதுமட்டுமல்ல, உண்மை சரித்திரம் பகுத்தறிவுள்ள வாசகருக்கு எப்படி நன்மை பயக்கும் என்பதையும் தெரிந்துகொள்வோம்.(g01 3/8)

[பக்கம் 3-ன் படம்]

ராணி நெஃபெர்டிடி

[பக்கம் 3-ன் படம்]

சரித்திரத்திலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]

நெஃபெர்டிடி: Ägyptisches Museum der Staatlichen Museen Preußischer Kulturbesitz, Berlin

பார்டர்: பிரிட்டிஷ் மியூஸியம் உதவியால் எடுக்கப்பட்ட படம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்