உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g03 9/8 பக். 13
  • குரங்குகளின் ‘கொசுவிரட்டி’!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குரங்குகளின் ‘கொசுவிரட்டி’!
  • விழித்தெழு!—2003
  • இதே தகவல்
  • குரங்கு அறிவு
    விழித்தெழு!—1992
  • பாடம் 2
    என் பைபிள் பாடங்கள்
  • கறையான்—நண்பனா பகைவனா?
    விழித்தெழு!—1995
  • பூச்சிகளின் விந்தை உலகம்
    விழித்தெழு!—2000
மேலும் பார்க்க
விழித்தெழு!—2003
g03 9/8 பக். 13

குரங்குகளின் ‘கொசுவிரட்டி’!

கப்யூஷன் என்ற குரங்கு அதி புத்திசாலியான பாலூட்டி வகையைச் சேர்ந்தது. அதன் தலைமுடியைப் பார்த்தால் ஆப்பு வடிவில் அலங்கரித்திருப்பது போல் இருக்கும். வெனிசுவேலாவின் வெப்ப மண்டலக் காடுகளே இக்குரங்கின் குடியிருப்பு. மழைக்கால மேகங்கள் இக்குரங்கின் குடியிருப்பை சூழ்ந்து கொள்ளும் நேரம் வருகையில், வேறொன்றும்கூட​—⁠மேகம் போல படையெடுத்து வரும் கொசுக்களின் கூட்டம்​—⁠இக்குரங்கை சூழ்ந்து ‘கொல்’கிறது. இது ஒரு தொல்லையாக இருப்பதோடு ஆபத்தானதும்கூட. இக்கொசுக்கள் பெரும்பாலும் ஒருவகை ஒட்டுண்ணி ஈ-யின் முட்டைகளை சுமந்து வருகின்றன. குரங்கின் தோலை இக்கொசுக்கள் கடித்து துளைக்கையில் இந்த முட்டைகள் தோலுக்கடியில் சென்றுவிடுகின்றன. இதனால் உடலையே உருக்கிவிடும் சீழ்க் கட்டிகள் உண்டாகின்றன.

இந்தத் தாக்குதலிலிருந்து தங்களை பாதுகாக்க கப்யூஷன் குரங்குகள் வீரியமிக்க ஓர் இயற்கை ‘கொசுவிரட்டியை’ தங்கள்மீது தேய்த்துக்கொள்கின்றன. அதுதான் ஒருவகை காட்டு மரவட்டை (millipede) சுரக்கும் திரவமாகும். இந்த மரவட்டைகளின் உடலில் இருவகை வேதிப் பொருட்கள் சுரக்கின்றன. அவை கொசுக்களை விரட்டுமளவுக்கு அதிக சக்தி வாய்ந்தவை. சொல்லப்போனால், இவை சுரக்கும் திரவம் இராணுவத்தினருக்காக தயாரிக்கப்படும் செயற்கை கொசுவிரட்டியை விடவும் சக்தி வாய்ந்தது!

ஆகவே, மழைக்காலத்தில், பத்து சென்டிமீட்டர் நீளமுடைய இந்த மரவட்டைகள் இருக்கின்றனவா என இந்த கப்யூஷன் குரங்கு மரப்பட்டைகளிலோ கறையான் புற்றுகளிலோ தேடிப் பார்க்கிறது. ஒரு மரவட்டையைக் கண்டுபிடித்துவிட்டால் போதும், அதை உடம்பு முழுக்க​—⁠உச்சி முதல் உள்ளங்கால் வரை​—⁠அழுந்த நீவிக்கொள்கிறது. இந்த “திரவத்திற்கு அந்தளவு கிராக்கி இருப்பதால் ஒரு மரவட்டை கிடைத்தாலே போதும், அதை நான்கு குரங்குகள் உடலில் தேய்த்துக் கொள்ளும்” என ஜர்னல் ஆஃப் கெமிக்கல் இக்காலஜி கூறுகிறது. குரங்குகளுக்கிடையே உணவு உண்ணும் சமயங்களிலும் மற்ற சமயங்களிலும் வழக்கமாக காணப்படும் ‘பெரியவன் சிறியவன்’ என்ற பாகுபாடும்கூட மரவட்டையை உடலில் தேய்க்க ஆரம்பிக்கையில் காணாமல் போய்விடும். (g03 8/22)

[பக்கம் 13-ன் படம்]

மரவட்டை சுரக்கும் திரவம்

[படத்திற்கான நன்றி]

Thomas Eisner/Cornell University

[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]

Dr. Zoltan Takacs

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்