அறிமுகம்
புயல்போன்ற பிரச்சினைகள், ஏதோவொரு கட்டத்தில் எல்லாருடைய வாழ்க்கையையும் புரட்டிப் போடுகின்றன. நோயினாலோ, விபத்தினாலோ, இயற்கை பேரழிவினாலோ, வன்முறையினாலோ ஒருவேளை நாம் பாதிக்கப்படலாம்.
இதற்கெல்லாம் காரணம் என்னவென்று மக்கள் யோசிக்கிறார்கள்.
கஷ்டங்களை எல்லாம் நம்மால் தவிர்க்க முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். அல்லது, அவற்றுக்கெல்லாம் தலைவிதியை காரணம் காட்டுகிறார்கள்.
வேறு சிலர், இந்த ஜென்மத்தில் அல்லது போன ஜென்மத்தில் செய்த பாவம்தான் நாம் கஷ்டப்படுவதற்கு காரணம் என்று நம்புகிறார்கள்.
இடிபோல் தாக்கும் பிரச்சினைகளால் மக்கள் மனதில் நிறைய கேள்விகள் எழும்புகின்றன.