பாட்டு 124
தன்னடக்கத்தின் கனி
1. உன் ஆத்துமாவைக் காத்துக்கொள்,
நேர்மையில் நிலைகொள்.
தன்னடக்கத்தைக் காத்துக்கொள்.
யுத்தத்தில் வெற்றிக்கொள்.
2. உண்மை அன்பை அப்பியாசிப்போம்.
ஞானமாய் நடப்போம்.
தன்னடக்கமாயிருப்போம்,
தேவன்போலிருப்போம்.
3. சரீரத்தை அடக்குவோம்.
இச்சை அடக்குவோம்.
இரட்சிப்பிற்கு தன்னடக்கம்,
தேவை தன்னடக்கம்.
4. சோதனை துன்பம் தாங்குவோம்.
சாந்தத்தைக் காட்டுவோம்.
யெகோவாவின் பக்கம் நிற்போம்.
நீதியில் நடப்போம்.