பாடல் 71
கடவுளுடைய சக்தி—நல்ல பரிசு
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா-வே, நீர் மா-வள்-ளல்-தா-மே,
உம் ம-னம் மா-ம-னம் என்-று-மே!
பா-ரம் தா-ளா-மல் சோர்ந்-து-போ-னோ-மே,
உம் சக்-தி தந்-து உ-த-வி-டு-மே!
2. பா-வ சு-மை தோ-ளில் சு-மக்-கின்-றோம்,
பா-தை-யும் மா-றி-வி-டு-கின்-றோம்!
நெஞ்-சம் நெ-கிழ்ந்-து வேண்-டு-கின்-றோ-மே,
உம் சக்-தி தந்-து வ-ழி-காட்-டு-மே!
3. வா-டு-தே உள்-ளம் வே-த-னை-யா-லே,
தே-று-மே தூ-ய சக்-தி-யா-லே!
வான் க-ழு-கு போ-ல ப-றப்-போ-மே,
தே-வ-னே, உம் சக்-தி தந்-தி-டு-மே!
(காண்க: சங். 51:11; யோவா. 14:26; அப். 9:31.)