பகுதி 4–முன்னுரை
இந்தப் பகுதியில் நாம் யோசேப்பு, யோபு, மோசே மற்றும் இஸ்ரவேலர்களைப் பற்றிப் படிப்போம். இவர்கள் எல்லாரும் சாத்தானால் வந்த கஷ்டங்களைச் சகித்தார்கள். சிலர் அநியாயம், சிறைத் தண்டனை, அடிமைத்தனம், மரணம் என நிறைய கஷ்டங்களைச் சந்தித்தார்கள். ஆனால், யெகோவா பல வழிகளில் இவர்களைப் பாதுகாத்தார். கஷ்டம் வந்தபோதும், இவர்கள் எப்படி விசுவாசத்தை விட்டுவிடாமல் இருந்தார்கள் என்பதை உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள்.
எகிப்திலிருந்த எல்லா கடவுள்களையும்விட தான் அதிக சக்தியுள்ளவர் என்பதைக் காட்ட யெகோவா பத்துத் தண்டனைகளைக் கொடுத்தார். யெகோவா தன்னுடைய மக்களை அந்தக் காலத்தில் எப்படிப் பாதுகாத்தார், இப்போது எப்படிப் பாதுகாக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுங்கள்.