உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பக். 160-161
  • பகுதி 11​—⁠முன்னுரை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பகுதி 11​—⁠முன்னுரை
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • பகுதி 13​—⁠முன்னுரை
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • பகுதி 4​—⁠முன்னுரை
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இயேசு கிறிஸ்து யார்?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • பகுதி 12​—⁠முன்னுரை
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பக். 160-161
மர வேலை செய்ய இயேசுவுக்கு யோசேப்பு சொல்லிக்கொடுக்கிறார், மரியாளும் இயேசுவின் கூடப்பிறந்தவர்களும் பக்கத்தில் இருக்கிறார்கள்

பகுதி 11​—⁠முன்னுரை

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் உள்ள விஷயங்களை இந்தப் பகுதியில் படிப்போம். ஒரு சின்ன ஊரில் வாழ்ந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் இயேசு பிறந்தார். அவருடைய அப்பா மர வேலை செய்தார். அவரோடு சேர்ந்து இயேசு வேலை செய்தார். இயேசுதான் மனிதர்களைக் காப்பாற்றப் போகிறவர். பரலோக அரசாங்கத்தின் ராஜாவாக இயேசுவை யெகோவா தேர்ந்தெடுத்திருந்தார். இயேசுமேல் யெகோவாவுக்கு ரொம்ப அன்பும் அக்கறையும் இருந்தது. அதனால், கடவுள்பக்தியுள்ள ஒரு குடும்பத்தில், அன்பான சூழலில் அவர் வளரும்படி பார்த்துக்கொண்டார் என்பதை உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள். ஏரோது இயேசுவைக் கொன்றுவிடாதபடி யெகோவா எப்படிக் காப்பாற்றினார் என்பதையும், யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதையும் சொல்லுங்கள். இயேசுவுக்கு வழியைத் தயார்படுத்த யோவானை யெகோவா தேர்ந்தெடுத்ததைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். யெகோவாவின் ஞானமான ஆலோசனைகள் தனக்குப் பிடிக்கும் என்பதை இயேசு சின்ன வயதிலிருந்தே எப்படிக் காட்டினார் என்று எடுத்துச் சொல்லுங்கள்.

முக்கியப் பாடங்கள்

  • யெகோவாவின் ஏற்பாடுகளுக்கு எப்போதும் உண்மையாக இருங்கள்

  • கடவுளுடைய மகனும், வல்லமையுள்ளவருமான இயேசு, இந்தப் பூமியில் ஒரு குழந்தையாகப் பிறக்கத் தயாராக இருந்தார்

  • மேசியாவின் வருகைக்காக மக்களைத் தயார்படுத்தும் வேலையை யோவான் ஸ்நானகர் தாழ்மையோடு செய்தார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்