பகுதி 13—முன்னுரை
தவறு செய்யும் இயல்புள்ள மக்களுக்காகத் தன்னுடைய உயிரைக் கொடுக்க இயேசு இந்தப் பூமிக்கு வந்தார். அவர் இறந்தாலும், இந்த உலகத்தை ஜெயித்தார். யெகோவா தன்னுடைய மகனுக்கு உண்மையாக இருந்து, அவருக்கு மறுபடியும் உயிர் கொடுத்தார். சாகும்வரை இயேசு மனத்தாழ்மையாக மற்றவர்களுக்குச் சேவை செய்தார், அவர்கள் செய்த தவறுகளை மன்னித்தார். உயிரோடு எழுந்த பிறகு, தன்னுடைய சீஷர்களுக்கு முன் தோன்றினார். தான் கொடுத்த முக்கியமான வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அந்த வேலையை நாமும் செய்ய வேண்டும் என்பதை உங்கள் பிள்ளை புரிந்துகொள்ள உதவுங்கள்.