பகுதி 12—முன்னுரை
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அதோடு, கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதற்காகவும், அவருடைய அரசாங்கம் வருவதற்காகவும், அவருடைய விருப்பம் பூமியில் நிறைவேறுவதற்காகவும் ஜெபம் செய்யக் கற்றுக்கொடுத்தார். இந்த ஜெபத்தின் அர்த்தத்தையும் அது நம் வாழ்க்கையில் எந்தளவு முக்கியம் என்பதையும் உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள். கடவுளுக்கு உண்மையாக நடப்பதிலிருந்து தன்னை விலக்க சாத்தானுக்கு இயேசு இடம் கொடுக்கவில்லை. இயேசு தன் அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தின் முதல் அங்கத்தினர்களாக ஆனார்கள். அவர்களுக்குச் சில விசேஷப் பொறுப்புகளை கொடுத்தார். உண்மை வணக்கத்துக்காக அவர் எப்படிப் பக்திவைராக்கியத்தைக் காட்டினார் என்று கவனியுங்கள். அவர் மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்பினார். அதனால், நோயாளிகளைக் குணமாக்கினார், பசியாக இருந்தவர்களுக்கு உணவு கொடுத்தார், இறந்தவர்களைக்கூட உயிரோடு எழுப்பினார். கடவுளுடைய அரசாங்கம் மக்களுக்கு என்னென்ன செய்யும் என்பதைக் காட்டுவதற்காக இந்த அற்புதங்களைச் செய்தார்.