உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w86 8/1 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
  • இதே தகவல்
  • கண்காணிகளும் உதவி ஊழியர்களும் தேவராஜ்ய முறைப்படி நியமிக்கப்படுகின்றனர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • இன்று கடவுளுடைய மக்களை உண்மையிலேயே வழிநடத்துவது யார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • ‘பரிசுத்த ஆவியின் நாமத்திலே’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • இன்று ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் எப்படி செயல்படுகிறார்கள்?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
w86 8/1 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

◼ மூப்பர்களை நியமிக்கப்படும் காரியத்தில் பரிசுத்த ஆவி எவ்விதத்தில் தற்கால ஆளும் குழுவோடு சேர்ந்து செயல்படுகிறது?

எபேசுவிலுள்ள கிறிஸ்தவர்களிடம் பவுல் அப்போஸ்தலன் பின்வருமாறு சொன்னான்: “உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்.”—அப்போஸ்தலர் 20:28.

இந்த நியமிப்புகளில் கடவுளுடைய ஆவி எவ்வாறு செயல்பட்டது என்பதை பவுல் விவரமாக விளக்கவில்லை. என்றபோதிலும், முதல் நூற்றாண்டில் விருத்தசேதனத்தைப் பற்றிய ஒரு கேள்வி எழும்பினபோது அதை ஆளும் குழு எவ்வாறு கையாண்டார்கள் என்பதிலிருந்து நாம் உள்ளான கருத்தைப் புரிந்துக் கொள்ளலாம். அவர்களுடைய முடிவை தொகுத்துரைக்கும் விதத்தில் அவர்கள் பின்வருமாறு எழுதினார்கள்: “அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாக கண்டது.” (அப்போஸ்தலர் 15:29) கடவுளுடைய ஆவி, அவருடைய கிரியை செய்யும் சக்தி, அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எவ்வாறு உதவியாயிருந்தது?

பவுலும் பர்னபாவும் இந்தக் கேள்வியை எவ்வாறு அமைத்தார்கள் என்று அப்போஸ்தலர் அதிகாரம் 15 காட்டுகிறது. இதைத் தொடர்ந்து ஒரு கலந்தாலோசிப்பு இருந்தது. விருத்தசேதனம் பண்ணப்படாத புறஜாதியானாகிய கொர்நெலியுவும் அவனுடைய வீட்டாரும் முழுக்காட்டுதல் பெறுவதற்கு எது வழிநடத்தியது என்பதை அப்போஸ்தலனாகிய பேதுரு விளக்கினான். பேதுரு பின்வருமாறு விவரித்தான். ‘தேவன் நமக்குப் பரிசுத்த ஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக் குறித்துச் சாட்சி கொடுத்தார்.’ (அப்போஸ்தலர் 15:7, 8; 10:9-48) அடுத்ததாக, பவுலும் பர்னபாவும் ‘தங்களைக் கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும்’ விவரித்துச் சொல்லக் கேட்டார்கள். (அப்போஸ்தலர் 5:12) எனவே, பேதுரு கொர்நெலியு, பவுல் மற்றும் பர்னபா ஆகியவர்கள் மீது கிரியை செய்வதன் மூலம் புறஜாதியார் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டிய அவசியமில்லை என்பதை பரிசுத்த ஆவி சுட்டிக் காட்டியது.

என்றபோதிலும், ஆளும் குழு எடுத்த தீர்மானத்தில், பரிசுத்த ஆவி கூடுதலான விதங்களில் செயல்பட்டதும் உட்பட்டிருந்தது. அவர்களுடைய சிந்தனையிலும் செயலிலும் அவர்கள் பரிசுத்த ஆவியின் உதவியை கேட்டிருப்பார்கள் என்று நாம் யூகிக்கலாம். அவ்விதமான உதவி, சீஷனாகிய யாக்கோபு ஆமோஸ் 9:11, 12-லுள்ள தீர்க்கதரிசனத்தையும் அதனுடைய நிறைவேற்றத்தையும் நினைவுப்படுத்திப் பார்க்க தூண்டியிருக்கும். அந்த தீர்க்கதரிசனம் தானே, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் கீழ் எழுதப்பட்டதாயிருந்தது. (அப்போஸ்தலர் 15:13-20) மேலும் ஆளும் குழுவை உண்டுபண்ணின எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாயும் அதன் கிரியைகளை தங்கள் வாழ்க்கையில் பிரதிபலிப்பவர்களாயும் அதாவது அதனுடைய கனிகளை தங்களுடைய வாழ்க்கையில் வெளிக்காட்டும் கிறிஸ்தவர்களாயும் இருந்தார்கள்.—அப்போஸ்தலர் 15:2; ரோமர் 8:14-17; 1 கொரிந்தியர் 7:40; கலாத்தியர் 5:22, 23.

எனவே, விருத்தசேதன கேள்வியின் பேரில் பரலோகத்திலிருந்து ஒரு குரல் மூலமாக வழிநடத்துதல் இல்லாமலேயே ஆளும் குழுவினர் “பரிசுத்த ஆவியினால்” அந்த தீர்மானத்தை எடுக்க முடிந்தது என்று திருத்தமாக சொல்ல முடிந்தது.

இன்று சபைகளில் கிறிஸ்தவ ஆண்கள் மூப்பர்களாக அல்லது கண்காணிகளாக நியமிக்கப்படும் விஷயத்திலும் இது உண்மையாயிருக்கிறது. மூப்பர்களின் குழு (அநேகமாய் சங்கத்தின் ஒரு பிரயாண கண்காணியும் உட்பட) கண்காணிகளாக நியமிக்கப்படுவதற்கு சகோதரர்களை சிபார்சு செய்வதற்காக அவ்வப்போது ஒன்றாக கூடி கலந்தாலோசிக்கின்றனர். அந்த குழுவில் இருப்பவர்கள்தானே மூப்பர்களாக நியமிக்கப்பட்டு, அவர்களுடைய வாழ்க்கையில் ஆவி கிரியை செய்கிறது என்பதை வெளிக்காட்டுகின்றனர். ஆவியின் வழிநடத்துதலுக்காக அவர்களுடைய சம்பாஷணை ஒரு ஜெபத்தோடு ஆரம்பமாகிறது. பிறகு, அந்தக் கூட்டத்தின்போது, சிந்திக்கப்படும் ஒவ்வொரு சகோதரரும் பைபிளில் மூப்பர்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் பைபிள் தகுதிகளை நிறைவேற்றுபவராக இருக்கிறாரா என்பதை ஆலோசிக்கிறார்கள், ஏனெனில் பைபிள் தானே பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. (1 தீமோத்தேயு 3:2-7; தீத்து 1:5-9) மேலும் அந்த சகோதரர் தன்னுடைய வாழ்க்கை முறையில் “பரிசுத்த ஆவியின் ஞானமும் நிறைந்த”வராயிருப்பதை வெளிக்காட்டுகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். (அப்போஸ்தலர் 6:3) அவ்விதமாக அவர் இருக்கிறார் என்பதாகவும், தகுதிகளை நியாயமான அளவுக்கு நிறைவேற்றுகிறார் என்பதாகவும் தெரியும்போது, அவர்களுடைய சிபாரிசு ஆவியினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆளும் குழுவுக்கு அல்லது அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அனுப்பப்படுகிறது. பிறகு, அந்த சகோதரர் நியமிக்கப்படுகிறார் என்று சபைக்கு தெரிவிக்கப்படலாம்.

நியமிக்கப்பட்டிருக்கும் மூப்பர் இன்னும் அபூரணராகவும் சில குறைபாடுகளை உடையவராகவும் இருக்கிறார் என்பது புரிந்துக் கொள்ளத்தக்கதே. ஆனால் அப்போஸ்தலர்கள் ஆளும் குழுவோடு சேவை செய்தபோதும், இயேசு அவர்களை தேர்ந்தெடுக்கும் முன்பும் அதற்கு பின்பும் அபூரணராகவே இருந்தனர். (லூக்கா 9:46, 54; 22:54-62; கலாத்தியர் 2:11-14) அவர்கள் நிச்சயமாக கடவுளுடைய ஆவியை உடையவர்களாகவும், அதனுடைய வழிநடத்துதலின் கீழ் நியமிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர். அதே விதமாக, ‘சபையை மேய்ப்பதற்கு பரிசுத்த ஆவி கண்காணிகளை நியமித்திருக்கிறது’ என்பதைக் குறித்து சகோதரர்களும் சகோதரிகளும் நிச்சயமாயிருக்கலாம். (அப்போஸ்தலர் 20:28) அவ்விதமான ஆட்களை குறித்து தானே பின்வரும் ஆலோசனை கொடுக்கப்படுகிறது: “தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.”—எபிரெயர் 13:7 (w85 8/1)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்