சமத்துவம் நாடுதல்
தாழ்வாகக் கருதப்படுவதை எவருமே விரும்புவதில்லை. ‘அடுத்தவனுக்கு நான் தாழ்ந்தவனல்ல” என்பது பொது வழக்கு. தன்னை உயர்த்திக் கொள்ளும் ஆவி நமக்கு கசப்பை ஏற்படுத்துகிறதல்லவா? அடிப்படையில், மற்றவர்களுக்கு சமமாயிருக்கும் என்ற உணர்வுதானே திருப்தியளிக்கிறது. என்றபோதிலும், அநேகருடைய அனுபவம் காட்டுவதுபோல், சமத்துவ உணர்வைப் பெறுவதைவிட சமத்துவத்தைப்பற்றி பேசுவது எளிது. இந்த ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள்:
1776-ல் வட அமெரிக்காவிலுள்ள ஆங்கிலேய குடியேற்ற நாடுகள் சுய ஆட்சிக்கான உரிமைகளைக் கோரின அவர்களுடைய பிரசித்திப்பெற்ற சுதந்திர அறிக்கை “விளக்கம் தேவையில்லாத உண்மைகளில்” “எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்பதையும் குறிப்பிட்டது. “ஜீவனையும் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும்” அனுபவிக்கும் உரிமை எல்லா குடிமக்களுக்கும் உரியது என்றும் அறிக்கை செய்தது.
பிரிட்டனிலிருந்து 13 குடியேற்ற நாடுகள் பிரிந்த அந்த சமயத்தில் அவர்களுடைய மக்கள் தொகை முப்பது லட்சமாக இருந்தது. அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் அடிமை முறையை ஒழிப்பதற்கு ஏறக்குறைய நூறு ஆண்டுகளாயின. அந்த அறிக்கையின் அமலாக்கத்திற்கு அடிப்படையாயிருந்த தாமஸ் ஜெஃபர்சன் தனது வாழ்க்கை முழுவதும் ஒரு அடிமை எஜமானனாகவே இருந்து வந்தார். அந்த அறிக்கையின் குறிக்கோள்கள் உயர்ந்த நோக்கமுடையவை. என்றபோதிலும் இப்படிப்பட்ட அடிப்படை சமத்துவம் ஓரளவுக்கு நிலைநாட்டப்படுவதற்குக்கூட காலம் தேவைப்பட்டது.
உலகத்தில் பல பகுதிகளில் இன்னும் அநேகர் சுதந்திரம் இல்லாதவர்களாக, அல்லது ஏற்றத்தாழ்வின் கொடுமைக்கு ஆளானவர்களாக இருக்கிறார்கள். இந்தக் காரியத்தை உணர்ந்தவர்களாக, அநேக ஆட்கள் எல்லா விதமான அநீதிகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் முழுமையாக நீக்குவதற்கு தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்பணித்திருக்கிறார்கள். சுதந்திரம் என்ற பொருளில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சமீப வெளியீடு ஒரு டஜனுக்கும் கூடுதலான முறை சமத்துவத்தைக் குறித்தும் அதற்கான அவசியத்தைக் குறித்தும் பேசினது. அது இன்னும் எட்டிப்பிடிக்க முடியாத ஒரு இலக்காகவே இருக்கிறது. ஏன்?
பிரச்னை என்னவென்றால், சமத்துவம் பல கோணங்களை கொண்டதாயிருக்கிறது. எனவே அதைக் குறிப்பாக விளக்குவது அவ்வளவு எளிதல்ல. மக்கள் சமத்துவத்தைப் பல கோணங்களில், பல வழிகளில் பார்க்கின்றனர். இது, அவர்களுடைய சூழ்நிலைகளை சார்ந்ததாயிருக்கிறது. அப்படியென்றால் மனிதர்கள் சமமாக இருக்கிறார்கள் என்று எத்தளவுக்கு சொல்லப்படலாம்? இன்றும் எதிர்காலத்திலும் நம்முடைய உடன் மனிதனுக்கு சமமாயிருப்பதன் சம்பந்தமாக நியாயமான அளவுக்கு நாம் என்ன எதிர்பார்க்கலாம்?
சமத்துவம்—இன்று எந்தளவுக்கு உண்மையானதாக இருக்கிறது
இளவரசன் ஒருவனும் ஏழை ஒருவனும் ஒரே நகரில் ஒரே சமயத்தில் பிறந்தாலும் சம்பத்தும் சிலாக்கியமுமாகிய வெள்ளிக் கரண்டி இளவரசன் சார்பில்தான் இருக்கும். மற்றவனை வறுமை பாதிக்கும். இன்றுள்ள எல்லோருமே சமமாகப் பிறக்கிறார்கள் என்று சொல்லப்பட முடியாது என்பதை எடுத்துக் காட்டும் பல அம்சங்களில் இது ஒன்று.
இது நாம் எந்த சமுதாயத்தில் வாழ்கிறோம், வருடங்களினூடே அது வளர்ந்திருக்கும் சமத்துவத்தின் நிலை எந்தளவுக்கு இருக்கிறது என்பதையே அதிகமாக சார்ந்திருக்கிறது. என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா இதை நல்ல விதத்தில் சுருக்கமாக அமைத்திருக்கிறது.
“வளம், வல்லமை மற்றும் மதிப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை எல்லா சமுதாயங்களுமே செய்கிறது. தனிப்பட்டவர்கள் மத்தியிலும் தொகுதிகளிலும் இந்த ஏற்பாடுகள் சமத்துவத்தையும் ஏற்றத்தாழ்வையும் எல்லா அளவிலும் பிரதிபலிக்கின்றன.”
எந்த சமுதாயத்தை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு தனி நபரும் தனக்கே உரிய ஏதாவதொன்றை கொடுக்கும் நிலையிலிருக்கிறார். இப்படியாக சிலர் எல்லோருடைய தனிப்பட்ட சிறப்பியல்புகளையும் திறமைகளைச் சார்ந்து வளத்தையும் உற்பத்திக்கு தேவைப்பட்டதையும் சமமாகப் பகிர்ந்துகொள்ள முயற்சித்திருக்கின்றனர். எனவேதான் கம்யூனிஸ்ட் கொள்கை: “ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவருடைய திறமைக்கேற்றபடி, ஒவ்வொருவருக்கும் அவரவருடைய தேவைக்கேற்றபடி.” மற்றும்: “ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவருடைய தேவைக்கேற்றபடி, ஒவ்வொருவருக்கும் அவரவருடைய வேலைக்கேற்றபடி.” இப்படிப்பட்ட தத்துவங்கள் கவர்ச்சியுற்றவையாக இருந்த போதிலும், எல்லா மனித அரசாங்க முறைகளின் கீழ் ஏற்றத்தாழ்வு தொடர்ந்து காணப்படுகிறது.
உண்மை என்னவென்றால், சமத்துவத்தைப் பரப்புவதற்கு மாறாக சில அரசியல் முறைகள் இன வேற்றுமைகளைத் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நாஸி பிரிவினர் அறிவுறுத்திய “அதிகாரப் போட்டி”யை நினைவுபடுத்திப் பாருங்கள். என்றாலும் எந்தவிதமான அதிகாரப் போட்டியும் அதுமுதல் வரவேற்கப்படாததாகிவிட்டது. சரீர சம்பந்தமான தன்மைகளில் வித்தியாசங்கள் இருந்தாலும், நடத்தையிலும் புத்திக் கூர்மையிலும் உண்மையான இன வேற்றுமை காணப்படக்கூடிய நிலையை நிரூபிப்பது கடினமாக இருக்கிறது,” என்று என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட இன ஒற்றுமை அல்லது சமத்துவம் அடிப்படையான ஒரு காரியம்.
கல்வியும் திறமையும்
கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் மிக எளிதில் கிடைக்கக் கூடியவையாயிருக்கும்போது, அது சமத்துவத்தை ஏற்படுத்துவதில் மிகச் சிறந்த பாகத்தை வகிக்கக்கூடும். ஆனால் எல்லா சமயங்களிலும் அது அவ்விதமாக இருப்பதில்லை. அநேக நாடுகளில் அடிப்படைக் கல்வியைப் பெறுவதற்குக்கூட கடின உழைப்பினால் கிடைக்கும் சம்பாத்தியத்தைப் பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது.
உதாரணமாக, இந்தக் கோளத்தின் தெற்குப் பகுதியிலிருக்கும் ஒரு நாட்டில், 20 சதவிகித மக்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்கள். அங்குள்ள குடும்பங்களில் பெரிய பிள்ளைகள் இருவர் ஓரளவு கல்வி கற்றவர்களாக இருப்பதையும் மற்ற பிள்ளைகள் கல்வி பெறாதவர்களாக இருப்பதையும் காண்பது மிக சாதாரணமான காரியம். ஏனென்றால் மற்ற பிள்ளைகளைப் படிக்க வைக்க குடும்பத்தின் வரவு செலவு இடமளிப்பதில்லை. மற்ற வளரும் நாடுகளுங்கூட இதே பிரச்னையை எதிர்படுகின்றனர்.
இந்த நிலைமை ஏற்றத்தாழ்வு நிலையை பராமரித்து வருவதாகத் தோன்றுகிறது, ஏனென்றால் முன்னேற்றம் பொருளாதாரத்தை சார்ந்ததாகவும் அது கல்வி கற்றவர்கள் சார்பாகவும் இருக்கிறது. மற்றும் சில பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றவர்களைவிட அதிகமாக விரும்பப்படுகின்றனர், ஏனென்றால் மற்ற பல்கலைக்கழகங்களைவிட இவை அதிக மதிப்பை தாங்கியிருக்கின்றன. எனவே இன்றைய ஏற்றத் தாழ்வு பிரச்னைக்கு கல்வி தாமே முழு பதிலாக இல்லை.
அடிப்படை உரிமைகள்
மனிதர்கள் எல்லா அம்சங்களிலும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்று பிறப்பு மூலத்துக்குரிய அம்சங்கள் தீர்மானிக்கக்கூடும். என்றபோதிலும், சில அடிப்படைக் காரியங்களில் சமத்துவம் நிலவ வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களல்லவா? பின்வரும் சில அம்சங்களில் முன்னேற்றம் இருக்குமானால் மனிதவர்க்கம் இதைவிட நல்ல நிலைமையில் இருக்குமல்லவா?
இன சமஉரிமை: ஒரு இனத்தவர் இன்னொரு இனத்தவரை பழிப்பதற்கான காரணத்தை அல்லது கரையை நாம் எப்படி மேற்கொள்ள முடியும்? பொறாமைகள் அதிக ஆழமாகச் சென்றுவிடுவதால் அநேக பிரச்னைகள் எழும்புகின்றன. தனிப்பட்டவர்கள் சமமானவர்களாக நடத்தப்படுவதற்கும் அவர்களுக்கு உரிய மதிப்பு மரியாதையை வழங்குவதற்கும் என்ன செய்ப்படலாம்?
உணவு: வறுமையில் வாடிடும் பிள்ளைகளின் படத்தைப் பார்க்கும்பொழுதும், சத்துள்ள உணவு இல்லாததாலும் அதனால் ஏற்படும் நோய்களாலும் தங்கள் உயிரை இழந்துவிடும் லட்சக்கணக்கானவர்களைக் குறித்து வாசிக்கும்போதும் நீங்கள் எப்படி பிரதிபலிக்கிறீர்கள்? உலக மக்கள் தொகைக்கு தேவையான அளவு உணவு இருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்படலாம். அப்படியென்றால், இப்படிப்பட்ட வேதனைகளைக் குறைப்பதற்கும் நீக்குவதற்கும் உணவு பண்டங்களை ஏன் சரிசமமாகப் பங்கீடு செய்யக்கூடாது?
வேலை: வேலை வாய்ப்பு இல்லாமை மனவேதனையையும் சலிப்பையும் ஏற்படுத்தி தற்கொலைக்கும் வழிநடத்தக்கூடும். எல்லோருக்கும் நன்மையுண்டாகும் வகையில் எல்லோருக்கும் வேலை கொடுப்பது கூடாத காரியமா? எல்லோருக்கும் சரிசமமான வேலைவாய்ப்பு என்ற நிலையை ஏற்படுத்தமுடியாதா?
கல்வி: கல்வியறிவு இல்லாமை என்ற நிலை முற்றிலுமாக நீக்கப்படும் விதத்தில் எல்லோருக்கும் குறைந்த பட்சம் அடிப்படைக் கல்வியாது பெறுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டாமா? வகுப்பு பிரிவினைகளுக்கு (பணக்காரன் பணக்காரணாகவும் ஏழை ஏழையாகவும் இருப்பது) இடையே இருக்கும் வித்தியாசத்தை வளர்ப்பதற்கு மாறாக, கல்வி எல்லோருடைய வாழ்க்கை நிலையையும் முன்னேற்றுவிக்க உதவி செய்ய வேண்டாமா? கல்வி தொழில் சம்பந்தமான காரணங்களை மட்டும் உட்படுத்தாமல் தரமான மனித உறவுகளுக்கு அத்தியாவசியமான ஒழுக்கத்தையும் நியமத்தையும்கூட கல்வி உட்படுத்தியிருக்குமேயானால் அந்நிலை ஏற்படும்.
ஆம், சமத்துவம் நாடுதல் நீண்டதோர் பயணம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்! (w85 8/15)