நீங்கள் கடவுளுடன் சரியான நிலைநிற்கையில் இருக்கிறீர்களா?
இந்தக் கேள்வியில் எந்த ஒரு குறிப்புமில்லையென ஜனங்கள் நினைக்கின்றனர். அவர்களுடைய நோக்குநிலையில் ஒருவர் தனக்குதானே நேர்மையுள்ளவராக உணர்வதே அதி முக்கியமானதாக இருக்கிறது. ‘உனக்கு விருப்பமானதை நீ செய்’ என்பதே இக்காலத்தின் பிரபலமான கோட்பாடாக இருக்கிறது. ‘குற்ற உணர்ச்சி அடையாதே’ இது மற்றொரு கருத்து.
இது ‘நானே-முதல்’ என்ற வாழ்க்கை தத்துவத்தால் மூழ்கிக்கிடக்கும் வாலிபர்களின் ஒரு நோக்குநிலை மட்டுமல்ல, உதாரணமாக 82 சதவிகிதமான மக்கட்தொகையினர் ஞானஸ்நானம் பெற்ற கத்தோலிக்கர்களாக இருக்கக்கூடிய பிரான்ஸ் நாட்டில் 1983-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வானது பாவம் என்ற எண்ணத்தை வெறும் 4 சதவிகிதமான ஆட்களே ஏற்கின்றனர் என்பதை காட்டியது. ஐக்கிய மாகாணங்களை பொருத்ததில் பல ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க மனநோய் மருத்துவ தந்தையென கருதப்படும் டாக்டர் கார் மென்னிங்கர் ‘பாவம் என்ன ஆனது?’ என்ற பொருளில் ஒரு முழு புத்தகத்தையே எழுதும்படி தூண்டப்பட்டார்: அதில் அவர் எழுதினதாவது: “ஒரு தேசத்தினராக நாங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பே ‘பாவஞ் செய்வதை’ அதிகாரப்பூர்வமாய் நிறுத்திவிட்டோம்.” அந்த புத்தகத்தின் அட்டை குறிப்பிட்டதாவது: “அந்த ‘பாவம்’ என்ற வார்த்தை எங்களுடைய சொல் அட்டவணையிலிருந்தே ஏறக்குறைய மறைந்துவிட்டது.”
மெய்யாகவே, பாவம் என்ற கருத்து இன்று மக்களிடையே அவ்வளவாய் மறைந்துவிட்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டக்கூடியவர்களும்கூட பாவம் என்றால் என்ன என்பதை விளக்குவதில் கஷ்டப்படக்கூடும்.
நவீன-கால அவநம்பிக்கை
பாவத்தைப்பற்றிய கருத்தில் இப்படிப்பட்டதோர் மதிப்புக்குறைவு இருந்தபோதிலும் உலக காட்சியில் எழுந்திருக்கும் சில சமீப கால சம்பவங்கள் மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது. உலகத்தின் அநேக வளர்ச்சியுற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள ஒரு காரியம் மிகுதியான கருச்சிதைவுகள். இவற்றில் சில நாடுகள் பெருமளவுக்கு “கிறிஸ்தவமாய்” இருந்தபோதிலும் அதிக தங்குதடையற்ற கருச்சிதைவு சட்டங்களை கொண்டிருக்கின்றன. அளவுக்கு மீறிய இந்த சிசு கொலைகள் பாவத்தைப்பற்றிய கருத்தை ஏற்க மறுக்கும் ஆட்கள் விளக்கம் தருவதற்கு கடினமாக ஆக்கக்கூடிய சில எதிர் செயல்களை பிறப்பித்திருக்கிறது.
உதாரணமாக, கருச்சிதைவு செய்துகொள்ளலாம் என்று தங்களுக்கு அனுமதியளிக்கக்கூடிய ஒரு வாழ்க்கை தத்துவத்தைக் கொண்ட சில பெண்கள் பின்பு ஏன் குற்ற உணர்ச்சியை கொண்டிருக்கலாமா, அதுவும் மனநோய் அடையும் அளவுக்கு குற்ற உணர்ச்சியை கொண்டிருக்கிறார்கள்? எனினும் “கருச்சிதைவு செய்துகொண்ட பொரும்பான்மையான சதவிகிதத்தினர், சீரான மன ஒப்புதலுக்கு வரவில்லை என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.” கம்யூனிஸ யூகோஸ்லேவியா நாட்டிலும்கூட அப்படியே இருக்கிறது. (தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா) மருத்துவம் சார்ந்த பிரன்ச் கலைகழகத்தின் அங்கத்தினரான பேராசிரியர் ஹென்றி பாருக் என்பவர் “எல்லா மக்களுடைய இருதயத்திலும் எழுதப்பட்டிருக்கும் ஒரு அடிப்படை நியமத்தை” மீறியதன் காரணமாகவே இந்த ஒரு காரியம் வெளிப்படையாக காணப்படுகிறது என்று விவரித்தார். அப்படியானால் அதை இருதயத்தில் எழுதியது யார்?
மக்களை சிந்திக்க வைத்திருக்கும் மற்றொரு காட்சி உலக முழுவதிலும் பரவிவரும் பாலுறவினால் கடத்தப்படும் நோய். ஏய்ட்ஸ் [(AIDS) பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி இழக்கச் செய்யும் நோய்] அதிகப்படியான மரணத்தை ஏற்படுத்துகிறது. வரைமுறையற்ற பாலீடுபாடு தற்காலத்துக்கு ஒவ்வாத சமூக கட்டுப்பாடுகளிலிருந்து தங்களுக்கு விடுதலையளித்திருப்பதாக கருதிய அநேக ஆட்கள் மத்தியில் இது அச்சத்தையும் கவலையையும் உண்டுபண்ணியிருக்கிறது. தங்கள் பால்வினை “சுதந்தரத்திற்கு” உயர்வான ஒரு விலையை அநேகர் செலுத்திக் கொண்டிருப்பதானது தாங்கள் ஒருவேளை தண்டிக்கப்படுகிறார்களோ என்று யோசிக்கும்படி செய்திருக்கிறது. யாரால் தண்டிக்கப்படுகிறார்கள்?
மனிதன் ஒழுக்க நியமங்களை மீறிவிட்டு தீங்கின்றி தப்பித்துக்கொள்ள முடியாது என்ற இப்படிப்பட்ட நவீன கால நினைப்பூட்டுதல்கள், சில சிந்தனையுள்ள ஆட்கள் பாவத்தைக் குறித்தும் கடவுளுக்கு முன்பாக உத்தரவாதமுள்ளவர்களாக இருத்தல் பற்றியும் தாங்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களை மறுபரிசீலனை செய்யும்படி தூண்டியிருக்கின்றன.
சர்ச்சுகளும் பாவமும்
“எல்லா பாவ உணர்வையும் இழப்பதுதானே இந்த நூற்றாண்டின் பாவம்” என்ற இந்த வலிமை மிக்க கூற்றை 1946 போல் எடுத்துரைத்தவர் போப் பையஸ் XII. தெளிவாகவே அதுமுதற்கொண்டு சூழ்நிலையானது படுமோசமடைந்து வருகிறது. “ஒப்புரவாகுதலும் மற்றும் பிராய சித்தமும்” என்றழைக்கப்பட்ட பாவம் மற்றும் பாவ அறிக்கை பற்றிய தனது ஆவணத்தில் போப் ஜான் பால் II மேற்சொன்ன போப் கூறின அந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். மேலும் இக்காலத்து சமய சார்பற்ற சமுதாயத்தில் பாவம் பற்றிய கருத்தின் இருட்டடிப்பு என்று அவர் அழைத்ததை ஆழமாக ஆராய்ந்தார்.
இன்று அநேக கத்தோலிக்க சர்ச்சுகளில் அப்பியாசிக்கப்பட்டு வரும் ஒட்டு மொத்தமான பாவ அறிக்கை, மற்றும் மன்னிப்பின் பயன் இல்லை என்று கத்தோலிக்க பாதிரிமாரையும் மற்றும் பொதுவில் கத்தோலிக்கர்களையும் போப் நினைப்பூட்டினார். பிராயசித்தம் செய்யும் நெஞ்சார்ந்த புனித சடங்கை கடைபிடிப்பதற்குரிய “ஒரே ஒரு சாதாரண மற்றும் இயல்பான வழிமுறையானது” தனிநபர் பாவ அறிக்கையே என்று அவர் குறிப்பிட்டார். கத்தோலிக்க கோட்பாட்டில் ஒரு பாவியை கடவுளுடன் ஒப்புரவாக்குவதில் பிரயாசித்தமானது நற்கிரியைகளுடன் இணைந்திருக்கிறது.
பெரும்பாலான புராட்டஸ்டன்ட் சர்ச்சுகள் ஒரு பாதிரியாரிடம் தனித்த முறையில் பாவ அறிக்கை செய்வதன் அவசியத்தை மறுக்கின்றன. பாவங்களின் மன்னிப்பிற்கு கடவுளிடம் அறிக்கை செய்துவிடுவதே போதுமானது என்ற கருத்தை பற்றியிருக்கின்றனர். ஒரு சிலர் “தூய நற்கருணை” சமயத்தில் பொதுப்படையான பாவ அறிக்கையையும் மன்னிப்பையும் ஆதரித்து பேசுகின்றனர். கடவுளுக்கு முன்பாக பாவ மன்னிக்கப்பட்டவராக இருக்க விசுவாசம் மட்டுமே அவசியமாயிருக்கிறதென்று அநேக புராட்டஸ்டாண்டினர் நம்புகின்றனர்.
பாவ அறிக்கை, பிராயசித்தம், மற்றும் பாவ மன்னிப்பு அல்லது கடவுளுக்கு முன்பாக ஒரு சரியான நிலைநிற்கையை கொண்டிருப்பது போன்ற பொருளிள் பேரில், கிறிஸ்தவ சர்ச்சுகள் என்றழைக்கப்படும் அமைப்புகளுக்குள்ளேயே இத்தனை முரண்பாடான கோட்பாடுகள் இருப்பதானது அநேக ஆட்களை குழம்பிய நிலையில் வைக்கிறது. கடவுளுடன் நேர்மையாக இருப்பதற்கு எதையாவது ஒன்றை செய்யவேண்டுமென்ற நிச்சயமற்ற உணர்வையே அவர்கள் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதை எப்படி செய்யவேண்டும் என்பதை அறியாமலிருக்கின்றனர்.
கடவுள் முன்பாக சீரான நிலைநிற்கையை அடையவேண்டியது ஏன் அவசியம் என்பதற்கு பின்வரும் கட்டுரை விளக்கம் கொடுக்கிறது. மேலும் பாவமன்னிப்பு பற்றியதில் கத்தோலிக்கர் மற்றும் புராட்டஸ்டாண்டினர் கருத்துக்களையும் இது ஆராயும். (w85 12/1)