கடவுளுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாக இருப்பது—எப்படி?
“நான் சீராய் இருக்கிறேன் என்று கடவுள் சொல்லுகிறார்” (God ’e say ’im alrite). இப்படிப்பட்டதோர் வெளிப்படையான முறையில் “நீதியுள்ளவனாக தீர்க்கப்படுதல்” “புதிய ஏற்பாட்டி”னுடைய ஒரு சமீப காலத்திய நியு கினி பிட்ஜின் மொழிபெயர்ப்பில் அளிக்கப்பட்டது. இது பழம்பாணிக்குரியதாக தோன்றியபோதிலும் ரோமர் 5:16-ல் கூறப்பட்டிருக்கிறப்படியான “நீதி விளங்கும் தீர்ப்பு” அல்லது “நீதிக்கு ஏதுவான தீர்ப்பு” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தைக்கு பின்னாலுள்ள அடிப்படை அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
மறுபட்சத்தில், சில ஆட்கள், ‘நான் கண்ணியமான வாழ்க்கை நடத்துகிறேன். எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் நான் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறேன். என் சிருஷ்டிகரை சந்திக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்’ என்று சொல்லுகின்றனர். எனவே நீதிமானாக தீர்க்கப்படுதலென்பது நம்மை நாமே நீதியுள்ளவர்களாக தீர்த்துக்கொள்வதை குறிக்கிறதென்று அவர்கள் புரிந்துகொள்கின்றனர். பைபிளின் பிரகாரம் “நீதி விளங்கும் தீர்ப்பு” கொள்கையானது கடவுள் நம்மை கருதும் அந்த முறையுடன் அதாவது அவர் நம்முடன் செயல் தொடர்பு கொள்ளும் அந்த முறையுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. யெகோவாதாமே “சிருஷ்டிகர்.” (ஏசாயா 40:28) அவரே “சர்வலோக நியாயாதிபதி.” (ஆதியாகமம் 18:25) எனவே அவர் நம்மை எவ்வாறு கருதுகிறாரோ அந்த முறையை காட்டிலும் வேறு எதுவும் மிக முக்கியமானதாக இருக்க முடியாது.
கடவுள் முன்னிலையில் நாம் சீரான நிலைநிற்கையில் வைக்கப்பட வேண்டியது ஏன் அவசியம்
யெகோவாவைப்பற்றி பைபிள் சொல்வதாவது: “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர். (உபாகமம் 32:4) அவர் நீதியின் வடிவம். சிருஷ்டிகராகவும் ஜீவனளிப்பவராகவும் இருப்பதால் எது சரி எது தவறு என்பதற்குரிய அந்த தராதரங்களை ஏற்படுத்தவும் சட்டமளிப்பதற்கும் அவர் உரிமையுள்ளவராக இருக்கிறார். கடவுளுடைய தராதரங்களுக்கு எது இசைவானதாக இருக்கிறதோ அது நீதியுள்ளது.
ஆகையால் தங்களுடைய சிருஷ்டிகருக்கு இசைந்து வாழ அவர்கள் விரும்புவார்களேயாகில் தம்முடைய புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகர் எட்டவேண்டிய குறியை கடவுள் நிர்ணயிக்கிறார். அந்த குறியை அல்லது தராதரத்தை தவறுவதையே பண்டைய மூல பைபிள் மொழிப்பெயர்ப்புகள் பாவம் என்றழைக்கிறது. ஆகவே பாவம் என்பது அநீதியாகும். எது சரி எது தவறு என்று கடவுள் தீர்க்கும் காரியத்திற்கு நம்மை இசைவுபடுத்த தவறுவதை குறிக்கிறது. தெளிவாகவே, பாவம் என்பது ஒருவகை கலகத்தையும் ஒருவகை அக்கிரமச் செயலையும் குறிக்கிறது.—1 யோவான் 5:17; 3:4.
யெகோவா “கலகத்திற்கு தேவனாயிராமல் சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்.” (1 கொரிந்தியர் 14:33) ஆரம்பத்தில், பரலோகத்திலும் பூமியிலுமிருந்த எல்லா சிருஷ்டிகளும் பரிபூரணமாயிருந்தன. அவர்கள் சுயாதீன இயற்பண்பை கொண்டவர்களாக இருந்தனர். (2 கொரிந்தியர் 3:17) அவர்கள் “தேவனுடைய பிள்ளைக்குரிய மகிமையான சுயாதீனத்தை” அனுபவித்து மகிழ்ந்தனர். (ரோமர் 8:21) அவருடைய நீதியான தராதரங்கள் மதிக்கப்பட்ட வரையில் சர்வலோகம் முழுவதிலும் சமாதானமும் ஒழுங்கும் நிலவியது. முதலில் பரலோகத்திலும் பின்பு பூலோகத்திலும் சில சிருஷ்டிகள் கடவுளுக்கு முன்பாக அக்கிரமக்காரர்களாகி தங்கள் மீது அவருக்கு இருந்த ஆளும் உரிமையை மறுத்தபோது கலகம் உள்ளே பிரவேசித்தது. அவர்கள் எது சரி எது தவறு என்பதற்குரிய கடவுளுடைய தராதரத்திலிருந்து வழிவிலகிப் போனார்கள். அவர்கள் இவ்வாறாக குறியை தவறி தங்களை தாங்களே பாவிகளாக ஆக்கிக்கொண்டார்கள்.
ஆதாம் ஏவாளாகிய நம் முதல் பெற்றோர் காரியத்தில் நடந்தது இதுவே. (ஆதியாகமம் 3:1-6) “இப்படியாக . . . பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. (ரோமர் 5:12) அவர்களுடைய கலகம் முதற்கொண்டு “பாவம் மரணத்துக்கேதுவாக ஆண்டு கொண்டது.” (ரோமர் 5:21; 3:23) எனவேதான் கடவுளுக்கு முன்பாக நம்மை சரியான நிலைநிற்கையில் வைத்துக்கொள்வதற்கான அவசியம் எழுந்தது.
“நீதிமான்களாக எண்ணப்படுதல்” குறித்து கத்தோலிக்கர் கருத்து
கடவுளோடு ஒப்புரவாக வேண்டியதன் அவசியம் கிறிஸ்தவமாயிருப்பதாக உரிமை பாராட்டக்கூடிய எல்லா சர்ச்சுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. என்றபோதிலும், அந்த ஒப்புரவாகுதல் நிலையை அடையும் அந்த முறையையும் மற்றும் கடவுளுக்கு முன்பாக கிறிஸ்தவ நிலைநிற்கை பற்றியதுமான புரிந்துகொள்ளுதலில் தானே கத்தோலிக்கரும் புராட்டஸ்டாண்டினரும் வேறுபடுகின்றனர்.
கத்தோலிக்கருடைய கொள்கையை பொருத்ததில் தி கத்தோலிக்க என்ஸைக்ளோபீடிய குறிப்பிடுவதாவது: “நீதிமான்களாக நிரூபித்தல் என்பது மனிதன் ஆதாமின் பிள்ளையாக தான் பிறந்திருக்கக்கூடிய தன்னுடைய ஆதி பாவ நிலையிலிருந்து இரண்டாம் ஆதாமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவ கிருபையும் மற்றும் தெய்வீக புத்திர சுவிகாரத்திற்குமுரிய ஒரு நிலைக்கு ஆத்துமாவில் ஒரு மாற்றம் அல்லது உருமாற்றம் அடைவதை குறிக்கிறது.” ஒரு கத்தோலிக்க அகராதி கூடுதலாக தரும் விளக்கம் என்னவெனில்: மரணம் மற்றும் பாவ நிலையிலிருந்து கடவுளுடைய தயவு மற்றும் நட்புரவிற்குள் பெரியவர்கள் உயர்த்தப்படும் அந்த செயல் முறையோடு இங்கே நாங்கள் கட்டுபடுத்திக் கொள்கிறோம்; ஆனால் குழந்தைகளை பொருத்ததிலோவெனில் தங்களுடைய சுய செயல் எதுவுமின்றி தங்கள் ஞானஸ்நானத்தின்போது அக்குழந்தைகள் நீதியுள்ளவர்களாக ஆக்கப்படுகின்றனர் என்று சர்ச் கற்பிக்கிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், “நீதியுள்ளவர்களாக தீர்க்கப்படுவது” கடவுளுடைய செயலாக இருக்கிறது. இவ்வாறாக, கத்தோலிக்க விசுவாசத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெறும் ஒருவர் தெய்வீக “கிருபையின்” வரத்தால் உண்மையிலேயே நீதியுள்ளவராக ஆக்கப்படுகிறார் மற்றும் புனிதப்படுத்தப்படுகிறார் என்று கத்தோலிக்க சர்ச் கற்பிக்கிறது. இப்படிப்பட்ட நீதியுள்ள தன்மையானது (1) தனிப்பட்ட தகுதிகள் அல்லது நற்கிரியைகளால் அதிகரிக்கப்படலாம்; (2) சாவான பாவத்தாலும் மற்றும் அவநம்பிக்கையினாலும் இழக்கப்படலாம். (3) பிராயசித்தத்திற்குரிய நெஞ்சார்ந்த புனித சடங்கின் மூலம் திரும்ப பெறலாம் என்றும் அது உரிமை பாராட்டுகிறது. இந்த ஏற்பாட்டிற்குள்ளாக, நீதிமானாக தீர்க்கப்பட்ட கத்தோலிக்கன் தன் பாவங்களை ஒரு பாதிரியாரிடம் அறிக்கை செய்து பாவ மன்னிப்பை பெற வேண்டும். இந்த பாவமன்னிப்பை பெற்றபின்பு இன்னமும் உரியதாயிருக்கும் எந்த ஒரு “தற்காலிக தண்டனைக்காகவும் நற்கிரியைகள்” மூலம் அல்லது “பாவமன்னிப்பு சலுகை சீட்டு”a மூலம் பிராயச்சித்தம் செய்துவிடலாம்.
புராட்டஸ்டாண்டினர் கருத்து
பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த பாவமன்னிப்பு சலுகை சீட்டின் தவறான விற்பனை புராட்டஸ்டாண்ட் சீர்திருத்தம் ஏழும்புவதற்கு தூண்டுதலளித்தது. கத்தோலிக்க மடத் துறவியான மார்ட்டின் லூதர் 1517-ல் ஜெர்மனியிலுள்ள விட்டன்பெர்க் காசல் சர்ச்சின் கதவுகளில் 95 கொள்கைகளை எழுதி ஒட்டி, இந்த பழக்கத்தை தாக்கினார். ஆனால், நடைமுறையிலோ, கத்தோலிக்கரின் அதிகாரப்பூர்வமான கொள்கையோடு லூத்தர் ஒத்துப்போகாமையானது அதை காட்டிலும் அதிக ஆழமாக சென்றது. சர்ச்சினுடைய பாவ மன்னிப்பு பற்றி முழு கோட்பாட்டையும் அது உட்படுத்தியது. இதை உறுதிபடுத்துவதாய் ஒரு கத்தோலிக்க அகராதி சொல்வதாவது: “பாவிகள் கடவுளுக்கு முன்பாக மன்னிப்பு வழங்கப்படக்கூடிய வழிமுறையின்பேரில் உள்ள நம்பிக்கை வித்தியாசம்தானே சீர்திருத்த காலத்தில் கத்தோலிக்கருக்கும் புராட்டஸ்டாண்டினருக்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்திற்கு முக்கிய பொருளாக இருந்தது! ‘இந்த கொள்கை, (அதாவது விசுவாசத்தினால் மட்டுமே பாவமன்னிப்படைதல் என்ற கோட்பாடு) வீழ்ச்சியடைந்தால், எல்லாமே நம்முடன் முடிவடைந்துவிட்டது’” என்பதாக லூத்தர் தன் மேசையுரையாடலில் சொல்லுகிறார்.
விசுவாசத்தின் மூலம் மட்டுமே ‘பாவ மன்னிப்பு’ என்பதன் மூலம் திட்டவட்டமாக லூத்தர் அர்த்தங்கொண்டது என்ன? ஒரு கத்தோலிக்கனாக இருந்தபோது லூத்தர் பின்வரும் இந்த காரியங்களைக் கற்றுக்கொண்டிருந்தார், அதாவது, மனிதனுடைய பாவமன்னிப்பானது ஞானஞ்நானம், தனிப்பட்ட தகுதிகள் மற்றும் நற்கிரியைகள் அதோடு அந்த பாவத்தை விசாரிக்கக்கூடிய பாதிரியார் மூலம் நிகழ்த்தப்படும் பிராயச்சித்ததிற்குரிய நெஞ்சார்ந்த சடங்குகள் பின்பு அவர் வழங்கக்கூடிய சுயஒடுக்கம் தேவைப்படுத்தக்கூடிய பதில் செயல்கள் ஆகியவற்றை உட்படுத்துகிறது என்பவை.
கடவுளோடு சமாதான உறவுக்குள் வரவேண்டும் என்ற தனது முயற்சியில், பாவமன்னிப்பு பேரில் ரோமன் கொள்கையினுடைய வளங்கள் அனைத்தையும் லூத்தர் பயன்படுத்தினார். அதாவது, உபவாசம், ஜெபங்கள், சுய ஒடுக்கம் அனைத்தையும் பயன்படுத்தினார். ஆனால் எவ்வித பயனும் இருக்கவில்லை. மனதிருப்தி அடையாதவராக அவர் சங்கீதங்களையும், பவுலின் கடிதங்களையும் திரும்ப திரும்ப வாசித்தார். இறுதியில் அவர் கடவுள் ஒருவனை நீதியுள்ளவனாக தீர்ப்பது அவனுடைய தகுதிகள் நற்கிரியைகள், அல்லது பிராயச்சித்த செயல்கள் ஆகிவற்றின் மூலமாக அல்ல ஆனால் முற்ற முழுக்க அவர்களுடைய விசுவாசத்தின் மூலம் மட்டுமே என்ற முடிவுரையின் மூலம் மன சமாதானத்தைக் கண்டடைந்தார். “விசுவாசத்தின் மூலம் மட்டுமே நீதிமானாக தீர்க்கப்படுகிறோம்” என்ற இந்த கருத்தில் அவர் அகமகிழ்ந்து போனார். எனவே ரோமர் 3:28-ல் தன்னுடைய ஜெர்மன் மொழிபெயர்ப்பில் “விசுவாசம்” என்ற வார்த்தைக்கு பிற்பாடு “மட்டுமே” என்ற வார்த்தையை கூட்டினார்!b
பெரும்பாலான புராட்டஸ்டாண்டு சர்ச்சுகள் “விசுவாசத்தின் மூலம் கிருபையினால் பாவமன்னிப்பு” என்ற லூத்தரின் கருத்தை அடிப்படையாக ஏற்றுக்கொண்டன. உண்மையில் இக்கருத்தானது ஏற்கனவே பிரான்ஸ் தேசத்து சீர்திருத்தவாதியான ஜாக்குவெஸ் லிஃபிவர்டி ஈடெபில்ஸ் என்பவரால் வெளிப்படுத்தப்பட்டது. இந்த பாவ மன்னிப்பின் பேரில் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டாண்டு மதங்களுக்கு இடையேயுள்ள வித்தியாசத்தை சுருங்க கூறுவதாய் ஒரு கத்தோலிக்க அகராதி குறிப்பிடுவதாவது: “கத்தோலிக்கர்கள், பாவ மன்னிப்பை, ஒரு மனிதன் உண்மையிலே நீதிமானாக ஆக்கப்படுவதற்குரிய ஓர் செயலாக கருதுகின்றனர்; புராட்டஸ்டாண்டினரோ, அவன் நீதியுள்ளவனாக வெறுமென அறிக்கையிடப்படுகிறான் மற்றும் மதிக்கப்படுகிறான், மற்றொருவரின்—அதாவது கிறிஸ்துவின் தகுதிகள் தனக்கு வழங்கப்படுவதன் மூலமாக அவ்வாறு மதிக்கப்படுகிறான் என்று கருதுகின்றனர்,
நீதிமான்களாக தீர்க்கப்படுவதன் பேரில் கத்தோலிக்கர் மற்றும் புராட்டஸ்டாண்டினரின் கருத்துக்கள் சரியல்ல
ஞானஸ்நானம் பெறும் சமயத்தில் தெய்வீக கிருபையின் வரம் அளிக்கப்பட்டு ஒரு மனிதன் உண்மையிலேயே “நீதியுள்ளவனாக” அல்லது நீதிமானாக ஆக்கப்படுகிறான் என்று உரிமை பாராட்டுவதன் மூலம் கத்தோலிக்க கோட்பாடு பைபிள் போதிப்பதற்கு மீறிச் செல்கிறது. ஆதி பாவத்தை துடைத்தழிப்பது ஞானஸ்நானம் அல்ல. ஆனால் கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தமே கழுவுகிறது. (ரோமர் 5:8, 9) கடவுளால் உண்மையிலே நீதிமான்களாக ஆக்கப்படுவதற்கும் மற்றும் நீதிமான்களாக இருப்பதாக எண்ணப்படுவதற்கும் அல்லது கருதப்படுவதற்கும் இடையே பெரும் வித்தியாசம் இருக்கிறது. (ரோமர் 4:7, 8) பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் மல்லாடி கொண்டிருக்கும் எந்த ஒரு கத்தோலிக்கனும் அவன் உண்மையிலேயே நீதிமானாக்கப்படவில்லை என்பதை அறிந்திருக்கிறான். (ரோமர் 7:14-19) அவன் உண்மையிலேயே நீதிமானாயிருந்தால் பாதிரியினிடத்தில் அறிக்கையிடுவதற்கு அவனுக்கு பாவம் எதுவுமிராது
கூடுதலாக, கத்தோலிக்க கொள்கை பைபிளை பின்பற்றுமானால் அந்த பாவ உணர்வுள்ள கத்தோலிக்கன் தன்னுடைய பாவங்களை கடவுளிடம் அறிக்கை செய்வான். இயேசு கிறிஸ்துவின் மூலம் மன்னிப்பை கேட்பான். (1 யோவான் 1:9-2:2) “பாவ மன்னிப்பிற்குரிய” எந்த ஒரு நிலையிலும் ஒரு மனித ஆசாரியன் பரிந்துரை செய்வது பைபிளில் எந்த ஒரு ஆதாரத்தையும் கொண்டில்லை. பாவ மன்னிப்பு சலுகை சீட்டு கொள்கை சார்ந்த தகுதிகளின் சேமிப்பும்கூட எந்த ஒரு பைபிள் ஆதாரத்தையும் கொண்டில்லை.—எபிரெயர் 7:26-28.
பாவமன்னிப்பிற்குரிப புராட்டஸ்டாண்டினரின் கருத்தானது கிறிஸ்துவினுடைய பலியின் நன்மைகளின் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவன் நீதிமானாக தீர்க்கபடுகிறான் என்பதாகும். இது பைபிள் எதை போதிக்கிறதோ அதற்கு அருகாமையிலிருக்கிறது. என்றபோதிலும் ஒரு சில புராட்டஸ்டண்ட் சர்ச்சுகள் “விசுவாசத்தின் மூலம் மட்டுமே பாவமன்னிப்பு” என்று கற்பிக்கின்றன. இது அப்போஸ்தலனாகிய பவுல் மற்றும் யாக்கோபு ஆகியவர்களால் அளிக்கப்படும் திட்டவட்டமான நியாய விளக்கங்களை கவனிக்க தவறுகிறது. அந்த சர்ச்சுகளின் அற்பத்தன்னிறைவு மனப்பான்மையானது “ஒரு முறை இரட்சிக்கப்பட்டவர்கள் என்றுமே இரட்சிப்பட்டுவிட்டவர்கள்” என்ற கூற்றால் தொகுத்துரைக்கப்படுகிறது. இரட்சிக்கப்படுவதற்கு இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் போதுமானது என்றும் எனவே பாவமன்னிப்பு முழுக்காட்டுதலுக்கு முன்பாக நிகழ்கிறது என்றும் சில புராட்டஸ்டாண்டினர் நம்புகின்றனர்.
கூடுதலாக, சில புராட்டஸ்டாண்ட் சர்ச்சுகள் விசுவாசத்தின் மூலம் பாவமன்னிப்பு என்பதை நம்புகையில், பிரான்ஸ் நாட்டு சீர்திருத்தவாதியான ஜான் கால்வினை பின்பற்றி, தனிப்பட்டவரின் விதி முன்தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை போதிக்கின்றனர். இப்படி செய்வதன் மூலம் சுய சித்தத்தைப் பற்றிய பைபிள் கோட்பாட்டை மறுக்கின்றனர். (உபாகமம் 30:19, 20) ஆகவே இது பாவ மன்னிப்பின் பேரில் கத்தோலிக்க கருத்து அல்லது புராட்டஸ்டாண்ட் கருத்து ஆகிய இரண்டுமே மொத்தத்தில் பைபிளோடு இசைந்து இல்லை என்று சொல்லப்படலாம்.
பைபிள் என்ன போதிக்கிறது?
எனினும் பைபிள் திட்டவட்டமாகவே “நீதிமானாக தீர்க்கப்படுதல்” பற்றிய கொள்கையை அல்லது மனிதன் எந்த ஒரு முறையில் கடவுளுக்கு முன்பாக ஒரு நீதியான நிலைநிற்கையை கொண்டிருக்கும்படி செய்யப்படுகிறான் என்பதை போதிக்கிறது. நாம் யாவருமே, கடவுளுடைய பிள்ளைகளாக அல்ல, ஆனால் “கோபாக்கினையின் பிள்ளைகளாக” பிறந்திருப்பதன் காரணமாக நாம் ஏன் கடவுள் முன்னிலையில் சீரான நிலைநிற்கைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதை ஏற்கனவே நாம் சிந்தித்தோம். (எபேசியர் 2:1-3) கடவுளுடைய கோபம் நம்மீது நிலைத்திருக்குமா அல்லது நிலைத்திருக்காதா என்பது பரிசுத்தமும் நீதியுமுள்ள கடவுளாகிய அவருடன் ஒப்புரவாவதற்காக அவர் செய்திருக்கும் இரக்கமுள்ள ஏற்பாட்டை ஏற்பதில் அல்லது மறுப்பதன் பேரிலேயே சார்ந்திருக்கிறது. (யோவான் 3:36) அந்த அன்பார்ந்த ஏற்பாடுதான் இயேசு கிறிஸ்துவினால் செலுத்தப்பட்ட மீட்பு கிரயம்.—ரோமர் 3:23, 24.
இயேசு கிறிஸ்துவின் அந்த மீட்பு பலி இரண்டு நம்பிக்கைகளை திறந்து வைக்கிறது என்று அப்போஸ்தலனாகிய பவுல் காண்பித்தான். ஒன்று “பூமியின் மீது” மற்றொன்று “பரலோகத்தில்” அவன் எழுதினதாவது: “சகல பரிபூரணமும் அவருக்குள்ளே [கிறிஸ்துவுக்குள்ளே] வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.”—கொலோசெயர் 1:19, 20.
இந்த இரண்டு நம்பிக்கைளில் எதை அடைவதாக இருந்தாலும் கடவுளுக்கு முன்பாக நீதியான நிலைநிற்கையை கொண்டிருப்பது அவசியம். இது “வெறுமென இயேசுவில் நம்பிக்கை” வைப்பதை காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. இந்த பத்திரிகையை கொடுத்த யெகோவாவின் சாட்சியிடம் பைபிளை கொண்டு இந்த கட்டுரையில் உள்ளதை கலந்து பேசும்படி கேட்க தயங்க வேண்டாம். (w85 12/1)
[அடிக்குறிப்புகள்]
a கத்தோலிக்க கோட்பாட்டின் பாவம், குற்றப்பழியையும் இரண்டு வகையான தண்டனையையும் உட்படுத்துகிறது—நித்தியத்துக்குரியது மற்றும் இக்காலத்திற்குரியது. குற்றப்பழியும் மற்றும் நித்திய தண்டனையும் பிராய சித்தத்தின் புனித சடங்குகள் மூலம் மன்னிக்கப்படலாம். இக்காலத்துக்குரிய தண்டனைக்கு இந்த வாழ்க்கையின் நற்செயல்கள் மற்றும் நோன்பு செயல்கள் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளப்பட வேண்டும் அல்லது அடுத்த வாழ்க்கையில் அக்கினி உத்தரிப்பு அடைய வேண்டும். ஓர் பாவமன்னிப்பு சலுகையானது இக்காலத்துக்குரிய தண்டனைக்கு கிறிஸ்து மரியாள் மற்றும் புனிதர்களுடைய நன்மைகளை பொருத்துவதன் மூலம் ஒரு பகுதியளவான அல்லது முழுமையான பரிகாரமளிக்கிறது. “சர்ச்சின் கரூவூலத்தில்” சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பாவ மன்னிப்பு சலுகை பெறுவதற்கு தேவைப்படக்கூடிய அந்த “நற் செயல்களில்” ஒரு யாத்திரை அல்லது ஏதாவது ஒரு ‘நல்ல’ காரணத்துக்காக பணத்தை நன்கொடையாக அளிப்பது ஆகியவற்றை உட்படுத்துகிறது. கடந்த காலங்களில் புனித போர்களுக்காகவும் மற்றும் கத்தீட்ரல் கட்டடங்களையும் சர்ச்சுகளையும் மருத்துவ மனைகளையும் கட்டுவதற்காக நீதி வசூலிக்கப்பட்டது.
b லூத்தர் யாக்கோபு புத்தகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேதாகம தொகுப்பின் பாகம் என்பதன் பேரில் சந்தேகத்தை எழுப்பினார். கிரியையில்லாத விசுவாசம் செத்தது என்று 2-ம் அதிகாரத்திலுள்ள அவருடைய விவாதம் ‘கிரியைகளில்லாமல் நீதிமானாக்கப்படுதல்’ என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் விளக்கத்திற்கு முரண்பாடாக இருக்கிறது என்று கருதினார். (ரோமர் 4:6) அங்கே பவுல் யூதருடைய நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை குறித்து பவுல் பேசிக் கொண்டிருந்தான் என்பதை லூத்தர் கண்டுணர தவறினார்.—ரோமர் 3:19, 20, 28.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
கத்தோலிக்க சர்ச்சானது பாவ மன்னிப்பு மனிதனை உண்மையாகவே நீதியுள்ளவனாக ஆக்கிவிடுகிறது, ஆனால் இந்த நீதிமானாக்கப்பட்ட நிலை பாவத்தின் மூலம் இழக்கப்படலாம் அல்லது தனிப்பட்ட நற்செயல்கள் மூலம் அதிகரிக்கப்படலாம் என்று நம்புகிறது.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
புராட்டஸ்டாண்டினர் அநேகர் விசுவாசத்தின் மூலம் மட்டுமே பாவ மன்னிப்பு அல்லது நீதியுள்ளவனாக தீர்க்கப்படுதல் கிடைக்கிறது என்றும் இயேசுவில் விசுவாசம் வைப்பது இரட்சிப்பை உறுதியளித்துவிடுகிறது என்றும் நம்புகின்றனர். ஒருசிலர் நீதிமானாக்கப்படுதல் முன்தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று நம்புகின்றனர்.
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
பைபிள் மனிதனுக்கு சுயதெரிவு செய்யும் உரிமை இருக்கிறது என்றும் மேலும் கிறிஸ்துவின் மீட்பு பலி இரண்டு நம்பிக்கைகளை திறக்கிறது, ஒன்று பூமிக்குரியது, இன்னொன்று பரலோகத்துக்குரியது என்றும் கற்பிக்கிறது. இந்த இரண்டு நம்பிக்கைகளை அடைவதற்கும் கடவுளுக்கு முன்பாக நீதியான நிலைநிற்கையை பெற வேண்டும்.