உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w87 4/1 பக். 3-4
  • திருவெளிப்பாடு—அது என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • திருவெளிப்பாடு—அது என்ன?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அது உண்மையிலேயே என்ன?
  • திருவெளிப்பாடு—எப்பொழுது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • உலக அழிவு—அஞ்ச வேண்டுமா, நம்பிக்கையோடு எதிர்நோக்க வேண்டுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • உலக அழிவு ஏன் அச்சுறுத்துகிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • போப்பும் திருவெளிப்பாடும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
w87 4/1 பக். 3-4

திருவெளிப்பாடு—அது என்ன?

“திரு வெளிப்பாடு!” என்ற இந்த வார்த்தைகளை கேட்கும்போது உங்கள் மனதுக்கு வருவது என்ன, அது இறுதித் தீர்ப்பு நாளா? சர்வ நாசமா? மூன்றாம் உலக யுத்தமா? இந்த உலகத்தின் முடிவா? இப்படிப்பட்ட மனக்காட்சிகள் உங்களுக்கு வருகிறதா? அப்படியானால் இவ்வாறு நினைப்பவர்கள் நீங்கள் மட்டுமல்ல. விஞ்ஞானமும் செய்தி துறைகளும் மனிதனுடைய எதிர்காலத்தை மங்கலானதாக வர்ணித்துக் காட்டுகிறது. எனவே ஏதோ ஒரு கோர சம்பவம் மூலம் மனித குலம் துடைத்தழிக்கப்படும் காரியத்துடன் இந்த திருவெளிப்பாட்டை அநேகர் சம்பந்தப்படுத்துவதில் ஆச்சரியம் ஏதாவது இருக்கக்கூடுமா?

திருவெளிப்பாடு என்பது இன்று வெறும் பைபிள் குறிப்பிடும் விவரிப்பாக மட்டும் இல்லை. ஆனால் அது அதிக நிஜமாக சாத்தியமாக ஆகிவிட்டது என்று ஐ.நா. பொது காரியதரிசியான ஜேவியர் பிரெஸ் டி க்யூலார் தன்னுடைய தொடக்க விழாப் பேச்சில் குறிப்பிட்டார்: “மனித அனுபவத்தில் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் நாம் பேரழிவுக்கும் மற்றும் உயிர் தப்புதலுக்கும் இடையேயுள்ள அதிக குறுகலான விளிம்பில் வைக்கப்பட்டிருக்கிறோம்.” அவர் எதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்? தற்போதைய தீவிரமான போராயுத போட்டியின் எழுச்சியடைந்திருக்கும் அனுசக்தி மோதலையே அவர் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார். ஐக்கிய நாட்டிற்கு தன் எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்துபவராய் அவர் பின்ருமாறு குறிப்பிட்டார்: “உலக முழுவதிலுமுள்ள சுமார் 5,00,000 விஞ்ஞானிகள் மிக அதிக செயல் திறம் வாய்ந்ததும் மற்றும் சாவுக்கேதுவானதுமான ஆயுதங்களைக் கண்டுபிடிப்பதில் தங்கள் அறிவை செலவழித்துக் கொண்டிருக்கின்றனர்.”

வேறு பலருங்கூட இன்றைய நிலைமையைக் குறித்து உணர்வுள்ளவர்களாக இருக்கின்றனர். சமூக ஆராய்ச்சிக்கான புதிய பள்ளியில் தத்துவ போராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற ஹான்ஸ் ஜோனாஸ் என்பவர், “தொழில்நுட்பஞ் சார்ந்த நாகரீக உலகத்தின் திட்டமிடப்படாத விசையியக்கவியலின் இயல்பிலிருந்து வரும் திருவெளிப்பாட்டின் அச்சுறுத்தலே” தன்னுடைய பிரதான அச்சமாக இருப்பதாய்க் குறிப்பிட்டார். அவர் இந்தத் திருவெளிப்பாட்டை முற்றும் வெறுமையாக்குதல், தூய்மைக் கேடாக்குதல், கிரகத்தைப் பாழாக்குதல், அதோடு அணுகுண்டினால் ஏற்படும் திடீர் அழிவின் அச்சுறுத்தல் ஆகியவற்றுடன் இணைத்துப் பேசுகிறார்.

அதேவிதமாக, சரித்திராசியன் கோலோ மேன் குறிப்பிட்டதாவது; நாம் மற்றொரு உலகப் போரை கொண்டிருக்க முடியாது. போர் என்பது தவறான ஒரு வார்த்தை. ‘மூன்றாம் உலகப் போர்’ என்ற அந்த வார்த்தையை நாம் தடை செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக திருவெளிப்பாடு அல்லது சர்வ நாசம் என்று சொல்ல வேண்டும்.”—ஹாம்பர்க்ஸ் டைஜீட், ஆகஸ்ட் 30, 1985.

ஆம், தான் சுய அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறான் என்பதை மனிதன் ஒப்புக்கொள்ளுகிறான். ஆனால் திருவெளிப்பாட்டை இவன் தூண்டுவானா? பைபிள் பிரகாரம் அப்படியில்லை. அது சொல்வதாவது, “சர்வ வல்லமையுள்ள யெகோவா தேவனே”—மனிதனல்ல—“பூமியை கெடுத்தவர்களைக் கெடுப்பார்.” (வெளிப்படுத்தின விசேஷம் 11:17, 18) ஆகையால் திருவெளிப்பாடு என்றால் என்ன என்பதை பைபிளின் நோக்குநிலையிலிருந்து புரிந்துகொள்வது உங்களுக்கு ஒரு வித்தியாசப்பட்ட கருத்தை, ஒரு முற்றிலும் புதிய மற்றும் பிரகாசமுள்ள கருத்தைக் கொடுக்கக்கூடும்.

அது உண்மையிலேயே என்ன?

தெசலோனிக்கேயருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் இந்தத் திருவெளிப்பாடு விவரிக்கப்பட்டிருக்கிறது. அங்கே, அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுவதாவது: “உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது [திருவெளிப்பாட்டின்போது,] . . . நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.”—2 தெசலோனிக்கேயர் 1:6-10.

ஆகையால் திருவெளிப்பாடு என்பது மிகுந்த “உபத்திரவத்தின்” ஒரு காலப்பகுதியின்போது இயேசுகிறிஸ்து வெளிப்படுவதைக் குறிக்கிறது. (மத்தேயு 24:21) W.E. வைன் என்பவரின் புதிய ஏற்பாட்டு வார்த்தைகளின் ஓர் விளக்க அகராதி (An Expository Dictionary of New Testament Words by W.E Vine)-யில் குறிப்பிடுகிறபடி கிரேக்க வார்த்தையான அ-போ-க-லி-ப்சிஸ் (திருவெளிப்பாடு) என்பது “கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை வழங்குவதற்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை” குறிப்பிடுகிறது. வேறு இடத்தில் இந்த வெளிப்படுதலை அல்லது திருவெளிப்பாட்டை பைபிள் அர்மகெதோனில் நிகழும் “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தம்” என்று குறிப்பிடுகிறது.—வெளிப்படுத்தின விசேஷம் 16:14, 16; 19:11-21.a

திருவெளிப்பாட்டைக் குறித்ததில், பைபிள் “உபத்திரவம்” “கோபாக்கினை” மற்றும் “தண்டனை” என்று பேசுகிறது என்பது உண்மையே. என்றபோதிலும் உபத்திரவத்தை அனுபவித்த அப்பாவி ஆட்களுக்கு “விடுதலை” பற்றியுங்கூட அது பேசுகிறது. கடவுளுடைய வார்த்தை நமக்கு வாக்களிப்பதாவது: இன்னுங் கொஞ்ச நேரந்தான், அப்பொழுது துன்மார்க்கன் இரான்.” (சங்கீதம் 37:10) எனவே அந்தத் திருவெளிப்பாடு எல்லா துன்மார்க்க செல்வாக்குகளிலிருந்தும் மனிதவர்க்கத்தினருக்கு விடுதலையை அல்லது இளைப்பாறுதலை அளிக்கும். நேர்மை இருதயமுள்ளோருக்கு மேம்பட்ட நிலையைக் கொண்டுவரும் ஒரு திருப்புக் கட்டமாக இருக்கும்—பயப்படுவதற்குரிய ஒரு நிகழ்ச்சியாக இருக்காது.

எனவே, அனைத்தும் பூண்டோடொழிந்து போவதற்கு அல்லது முற்றிலுமாக துடைத்தழிக்கப்படுவதற்கு மாறாக மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்கு அந்தத் திருவெளிப்பாடு ஒரு நீதியான பரிகாரமாக இருக்கும். ஒரு புதிய சகாப்தத்தில்—நீதியும் சமாதானமும், மற்றம் செளகரியமும் உள்ள ஒரு சகாப்தத்தில்—வாழ்வோம் என்ற எண்ணம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனநிறைவளிப்பதாக இல்லையா?

ஆனால் நாம் பைபிள் சொல்லக்கூடிய அந்தத் திருவெளிப்பாட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோமா? அப்படியானால், அதனுடைய சரியான காலத்தை அறிந்துகொள்ளும் வழி ஏதாவது நமக்கு இருக்கிறதா? (w86 2/15)

[அடிக்குறிப்புகள்]

a காவற்கோபுரம், மார்ச் இதழில் மெகிதோவைப் பற்றிய கட்டுரையையும் பார்க்கவும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்