உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 12/1 பக். 3-5
  • உலக அழிவு ஏன் அச்சுறுத்துகிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலக அழிவு ஏன் அச்சுறுத்துகிறது?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உலக அழிவின் பயத்தைப் பற்றிய சரித்திரம்
  • உலக அழிவு பற்றிய பயம் நியாயமானதா?
  • திருவெளிப்பாடு—அது என்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • திருவெளிப்பாடு—எப்பொழுது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • உலக அழிவு—அஞ்ச வேண்டுமா, நம்பிக்கையோடு எதிர்நோக்க வேண்டுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • அப்பாக்கலிப்ஸ் புத்தகத்தின் “மகிழ்ச்சிக்குரிய செய்தி”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 12/1 பக். 3-5

உலக அழிவு ஏன் அச்சுறுத்துகிறது?

“பல பத்தாண்டுகளாக, [ஏதோ] ஒருவகை பேரழிவு சமுதாயளவில் வெகு சீக்கிரத்தில் நிகழும் என்று கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் முன்னறிவித்து வந்திருக்கின்றனர்” என டைம் பத்திரிகையில் குறிப்பிடுகிறார் டேம்யன் தாம்ஸன் என்ற மத எழுத்தாளர். “இப்போது அவர்களே மூக்கில் விரல் வைக்குமளவுக்கு, இந்த நிகழ்ச்சிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படுவதோடு அவற்றை கிண்டலடித்து கேலிசெய்த கம்ப்யூட்டர் புரோகிராமர்கள், வியாபார பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகள் ஆகியோரே எல்லாரிடமும் அவற்றை பரப்புகின்றனர்.” 2000-மாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கையில், உலகளாவிய விதத்தில் கம்ப்யூட்டர் ஸ்தம்பிப்பதைப் பற்றிய பயமே “மத நம்பிக்கையற்ற ஆட்களையும்கூட ஆயிரமாண்டு பற்றி பயத்தில் உழல வைக்கிறது.” இவர்கள், “பெரும் திகில், அரசாங்கம் ஆற்றலிழந்து போதல், உணவு குறைபாடு ஏற்படுத்தும் அமைதியின்மை, வானளாவ உயர்ந்த கட்டடங்களில் விமானங்கள் மோதி சிதறுதல்” போன்ற பெருந்துயர்களின் வருகையை எண்ணி கலங்குகின்றனர் என அவர் உறுதியாக கூறுகிறார்.

கவலையெனும் எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பதுபோல் இருப்பது, “அப்பாக்கலிப்டிக்” என பெரும்பாலும் அழைக்கப்படும் பல்வேறு சிறு சிறு மத தொகுதிகளின் அமைதிகெடுக்கும் நடவடிக்கைகள்தான். ஜனவரி 1999-ல் ஃபிரெஞ்சு தினசரியான லா ஃபிகாரோவில் “ஜெரூசலமும் வெளிப்படுத்துதலின் எச்சரிக்கை சமிக்கைகளும்” என்று தலைப்பிடப்பட்டிருந்த கட்டுரை குறிப்பிட்டதாவது: “ஒலிவ மலையிலோ அதன் அருகிலோ ‘ஆயிரமாண்டு நம்பிக்கையினரில்’ நூற்றுக்கும் அதிகமானோர் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக அல்லது வெளிப்படுத்துதலுக்காக தவம் கிடப்பதாய் [இஸ்ரேலிய] பாதுகாப்பு படை கணக்கிட்டிருக்கிறது.”

1998 பிரிட்டானிக்கா புக் ஆஃப் த இயர்-ல் “டூம்ஸ்டே மதப் பிரிவுகள்” பற்றிய விசேஷ அறிக்கை உள்ளது. ஹெவன்ஸ் கேட், பீப்பில்ஸ் டெம்ப்பிள், ஆர்டர் ஆஃப் த சோலார் டெம்ப்பிள், 1995-ல் சாவுக்கேதுவான விஷ வாயுவை உபயோகித்து டோக்கியோவின் சுரங்கப் பாதையில் 12 பேரைக் கொன்று ஆயிரக்கணக்கானோருக்குக் காயம் ஏற்படுத்திய ஆம் ஷின்ரிக்யோ (சுப்ரீம் ட்ரூத்) போன்ற தற்கொலை மதப் பிரிவுகளைப் பற்றியும் அது குறிப்பிடுகிறது. இந்த அறிக்கையைத் தொகுத்துரைக்கும் விதமாக, சிகாகோ பல்கலைக்கழகத்தின் மத பேராசிரியர் மார்டின் ஈ. மார்டீ எழுதியதாவது: “காலண்டரின் பக்கத்தை 2000-க்குப் புரட்டுவது இனம்புரியாத உற்சாகத்தை அளிக்கிறது; எல்லா விதமான முன்னறிவிப்புகளுக்கும் இயக்கங்களுக்கும் அது நிச்சயமாகவே ஊக்கமளிக்கும். அவற்றுள் சில ஆபத்தானவையாகலாம். ஏனோதானோவென அசட்டையாய் இருக்க முடியாத காலம் அது.”

உலக அழிவின் பயத்தைப் பற்றிய சரித்திரம்

அப்பாக்கலிப்ஸ் அல்லது வெளிப்படுத்துதல் என்பது பைபிளின் கடைசி புத்தகத்தின் பெயர்; இது பொ.ச. முதல் நூற்றாண்டின் முடிவில் எழுதப்பட்டது. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் தீர்க்கதரிசனங்களும் புரிந்துகொள்ள கடினமான அடையாள அர்த்தங்களும் புதைந்துகிடப்பதால், இந்தப் புத்தகம் எழுதப்படுவதற்கு வெகு முன்னதாகவே எழுதப்பட்ட இவ்வகை இலக்கியப் படைப்புகளுக்கு “அப்பாக்கலிப்டிக்” என்ற பெயரடை பிற்பாடு பயன்படுத்தப்பட்டது. கற்பனை சார்ந்த அடையாள அர்த்தம் தொனிக்கும் இவ்வகை இலக்கியப் படைப்புகளின் பிறப்பு பூர்வ பெர்சியா மற்றும் அதற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தவை. எனவே, “இந்த [யூத அப்பாக்கலிப்டிக்] படைப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான கற்பனை சார்ந்த அம்சங்கள் பாபிலோனுக்கே உரித்தான தனித்தன்மை வாய்ந்தவையாய் உள்ளன” என த ஜூயிஷ் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது.

யூத அப்பாக்கலிப்டிக் இலக்கியம் பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் முடிவு வரை அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது. இவ்வகை படைப்புகளுக்கான காரணத்தை விளக்கி ஒரு பைபிள் கல்விமான் எழுதியதாவது: “காலத்தை யூதர்கள் இரண்டு யுகங்களாக பிரித்தனர். தற்கால யுகம் முற்றிலும் மோசமானதாய் இருந்தது . . . ஆகவே யூதர்கள் அப்போதிருந்த காரியங்களின் முடிவை எதிர்நோக்கியிருந்தனர். அதன்பின் வரப்போகும் யுகம் அமைதி தவழும், செல்வம் கொழிக்கும், நேர்மை வியாபித்திருக்கும் கடவுளுடைய பொற்காலமாய் இருக்கும் . . . தற்கால யுகம் எப்படி வரப்போகும் யுகமாக மாறும்? இப்படிப்பட்ட மாற்றத்தை எந்த மனித அமைப்பும் ஒருபோதும் கொண்டுவர முடியாதென்று யூதர்கள் நம்பினர்; எனவே கடவுள் நேரடியாக தலையிடுவார் என எதிர்பார்த்திருந்தனர் . . . கடவுள் வருகை தரும் நாள் கர்த்தரின் நாள் என அழைக்கப்பட்டது; அது புது யுகம் பிறப்பதற்கு முன் ஏற்படும் பிரசவ வேதனைக்கொத்த திகில் நிறைந்த, அழிவுண்டாக்கும், நியாயத்தீர்ப்பின் பயங்கர காலமாய் இருக்கவிருந்தது. அப்பாக்கலிப்டிக் இலக்கிய படைப்புகள் அனைத்தும் இச்சம்பவங்களைப் பற்றி குறிப்பிடுகின்றன.”

உலக அழிவு பற்றிய பயம் நியாயமானதா?

‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்தை’ அல்லது அர்மகெதோனைப் பற்றி பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் குறிப்பிடுகிறது. அதில் துன்மார்க்கர் அழிக்கப்படுவர், அதைத் தொடர்ந்து (சில சமயங்களில் ஆயிரவருட ஆட்சி என அழைக்கப்படும்) ஆயிர வருட காலம் ஆரம்பிக்கும். அப்போது சாத்தான் அபிஸில் தள்ளப்படுவான், கிறிஸ்து மனிதவர்க்கத்தை நியாயந்தீர்ப்பார். (வெளிப்படுத்துதல் 16:14, 16; 20:1-4) கிறிஸ்துவின் பிறப்பு முதற்கொண்டே ஆயிர வருட ஆட்சி ஆரம்பித்துவிட்டது என்றும் அது இறுதியில் நியாயத்தீர்ப்பில் போய் முடிவடையும் என்றும் கத்தோலிக்க “புனிதர்” அகஸ்டின் (பொ.ச. 354-430) சொன்னார். அதனால், இடைக்காலத்தில் அநேகர் இந்தத் தீர்க்கதரிசனங்களைத் தவறுதலாக புரிந்துகொண்டிருந்தனர். காலக்கணக்கு விஷயத்தில் அகஸ்டின் சற்றும் யோசிக்காமல் கோட்டைவிட்டார்; ஆனால் 1000-மாவது ஆண்டு நெருங்குகையில் அச்சம் அதிகரித்தது. இடைக்கால உலக அழிவு பற்றிய பயம் எந்தளவுக்கு இருந்தது என்பதைக் குறித்ததில் சரித்திராசிரியர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உள்ளது. எனினும், அது எந்தளவு வியாபித்திருந்தாலும், உண்மையில் அது நிரூபிக்கப்படாத ஒன்றானது.

அதேபோல இன்று, 2000-மாவது ஆண்டு அல்லது 2001-வது ஆண்டு திகிலூட்டும் உலக அழிவுக்கு வழிநடத்தும் என ஆன்மீகவாதிகளும் மற்றவர்களும் பயப்படுகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட பயம் நியாயமானதா? பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலில் அல்லது அப்பாக்கலிப்ஸில் உள்ள செய்தி அஞ்ச வேண்டிய ஒன்றா அல்லது நம்பிக்கையோடு எதிர்நோக்க வேண்டிய ஒன்றா? தொடர்ந்து படித்துத்தான் பாருங்களேன்.

[பக்கம் 4-ன் படம்]

உலக அழிவு பற்றிய இடைக்கால பயம் நிரூபிக்கப்படாதது

[படத்திற்கான நன்றி]

© Cliché Bibliothèque Nationale de France, Paris

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

Maya/Sipa Press

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்