உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w91 3/1 பக். 3-4
  • மரித்தோருக்கு என்ன நம்பிக்கை?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மரித்தோருக்கு என்ன நம்பிக்கை?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ‘மரித்தோர் உயிரோடிருக்கிறார்களா?’
  • மரித்தோர் மறுபடியும் உயிர்வாழ்வார்களா?
  • அழியாத ஆத்துமா உங்களுக்கு இருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • மரணத்திற்கு பின் வாழ்க்கை—பைபிள் கூறுவதென்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • உயிர்த்தெழுதலில் உங்கள் நம்பிக்கை எவ்வளவு உறுதியானது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • அந்தப் புதிர் விடுவிக்கப்பட்டது!
    விழித்தெழு!—1989
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
w91 3/1 பக். 3-4

மரித்தோருக்கு என்ன நம்பிக்கை?

இளம் வயது குடும்பம் ஒன்று விடுமுறைக்காகத் தென் ஆப்பிரிக்க கிழக்கு கரைக்குப் பயணம் செய்துகொண்டிருந்தது. மனைவியின் பெற்றோர் சற்றே முன்னால் மற்றொரு காரில் இருந்தனர். திடீரென்று ஒரு டயர் வெடித்தது. சாலைக்கு அடுத்தப் பக்கத்தில் அதை மாற்றுவதற்காக அவர்கள் ஆயத்தஞ்செய்து கொண்டிருந்தபோது, குடித்துவிட்டிருந்த ஓர் ஓட்டுநர் இரண்டு கார்கள் மீதும் வந்து பயங்கரமாக மோதினான். வயதான அந்த மனிதனும் அவனுடைய மனைவியும் மரித்துவிட்டனர். இளம் மனிதன் ஒரு சில நாட்களுக்குப் பின்பு மரித்துப் போனான். அவனுடைய மனைவி விலா எலும்பு முறிவினாலும் மற்ற காயங்களினாலும் அவதியுற்றாள். அவளுடைய குழந்தை செயலறச் செய்யும் மூளை சேதத்தை அனுபவித்தது.

எதிர்பாராதவிதமாக இந்தக் குடும்பத்துக்கு என்னே ஒரு சோகச் சம்பவம்! இளம் மனைவியின் சகோதரி கரோலேன் செய்தியைக் கேள்விப்பட்டபோது ஸ்தம்பித்துப்போனாள். இது போன்ற சோகச் சம்பவங்கள் எல்லாத் தேசங்களிலும் நடைபெறுகின்றன. துக்கத்தில் ஆழ்ந்துவிடும் உறவினர்களும் நண்பர்களும் அடிக்கடி யோசிப்பது, ‘மரித்தோர் உண்மையில் மரித்துவிட்டார்களா,’ அல்லது . . .

‘மரித்தோர் உயிரோடிருக்கிறார்களா?’

பெரும்பாலும் எல்லா மதங்களுமே ஆத்துமா சாவாமையுள்ளது என்பதாகக் கற்பிக்கின்றன. ஆகவே இவைகளைப் பின்பற்றுகிறவர்கள், மரித்தோர் உண்மையில் மரித்தவர்களாக இல்லை, ஆனால் பரலோகத்தில், உத்தரிக்கும் ஸ்தலத்தில் அல்லது நரகத்தில் இன்னும் உயிரோடிக்கிறார்கள் என்பதாக நினைக்கிறார்கள். அநேக சர்ச்சுகளில் கற்பிக்கப்படுகிறபடி, பின்சொல்லப்பட்ட இடத்திலிருப்பவர்கள் நித்தியத்துக்குமாகப் பயங்கர வேதனையை அனுபவிக்கிறார்கள். ஆனால் அன்புள்ள ஒரு கடவுள் தம்முடைய சிருஷ்டிகள் உண்மையில் இப்படிப்பட்டத் துன்பத்தை அனுபவிக்கச் செய்வாரா?—1 யோவான் 4:8.

அவ்விதமாகச் செய்யமாட்டார் என்று தோன்றுகிறது, ஆனால் நாம் எவ்விதமாக நிச்சயமாயிருக்கலாம்? பின்வரும் பைபிள் விளக்கத்தைக் கவனமாகச் சிந்தித்துப் பாருங்கள். “தேவனாகிய கர்த்தர் (யெகோவா, NW) மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” (ஆதியாகமம் 2:7) முதல் மனிதனாகிய ஆதாமுக்கு ஓர் ஆத்துமா கொடுக்கப்பட்டது என்பதாக ஆவியால் ஏவப்பட்ட இந்தக் கூற்று சொல்லுகிறதா? இல்லை, அவன் உயிருள்ள ஒரு நபராக ஆத்துமாவானான். பின்வருமாறு எழுதிய அப்போஸ்தலனாகிய பவுலால் இது உறுதிப்படுத்தப்படுகிறது: “முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது.” பவுல் ஆதியாகமத்திலிருந்து மேற்கோள் காண்பித்துக்கொண்டிருந்தான்.—1 கொரிந்தியர் 15:45, எருசலேம் பைபிள்.

மனித ஆத்துமா சாகமுடியுமா? எசேக்கியேல் தீர்க்கதரிசி எழுதினதாவது: “இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்.” (எசேக்கியேல் 18:4, 20; பிரசங்கி 9:5, 10) ஆத்துமா மரித்துவிடுகிறதென்றால் பின்னர் அந்த நபர் எதையும் அறியமாட்டார், ஆகவே அவர் துன்பப்பட்டுக் கொண்டிருக்க முடியாது என்பது தெளிவாக இருக்கிறது. பொ.ச. 33-க்குப் பின்பு, தன்னுடைய முதல் பொது பேச்சில் அப்போஸ்தலனாகிய பேதுரு அறிவித்ததாவது: “அந்தத் தீர்க்கதரிசியின் [இயேசு] சொற்கேளாத எந்த ஆத்துமாவும் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்.” ஆகவே ஆத்துமா சாகிறது.—அப்போஸ்தலர் 3:23, NW.

மரித்தோர் மறுபடியும் உயிர்வாழ்வார்களா?

பைபிள் உண்மை என்பதாக நம்பும் அனைவரும், இயேசு மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுப்பப்பட்டார் என்பதை அறிந்திருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 10:39, 40) இது எவ்விதமாகச் சம்பவிக்க முடியும்? கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால்.

இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒரு விதிவிலக்காக இருந்ததா? இல்லை. பவுல் கொரிந்துவிலிருந்த சபைக்கு எழுதிய வண்ணமே: “கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று . . . [கிறிஸ்துவினால்].” (1 கொரிந்தியர் 15:20–22) ஆகவே அநேகர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவார்கள். இயேசு மேலுமாகச் சொன்னார்: “இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள (ஞாபகார்த்தக் கல்லறையிலுள்ள, NW) அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும். அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருப்பார்கள்.” (யோவான் 5:28, 29) இது இலட்சக்கணக்கானோர் உயிர்த்தெழுதலுக்கு உறுதியளிக்கிறது.

மேல் கூறப்பட்ட விளக்கம், உயிர்த்தெழுதலில் உங்களுடைய அக்கறையைத் தூண்டியிருக்குமேயானால், ‘யாருக்கு உயிர்த்தெழுதல், மேலும் எப்போது?’ என்பதாக நீங்கள் கேட்கக்கூடும். முக்கியமான இந்தக் கேள்விகளை நாம் சிந்திப்போமாக. (w89 10/15)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்