விதி உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறதா?
செப்டம்பர் 1988-ல் பேராபத்து ஒன்று நேரிட்டது. கங்கை மற்றும் பிரம்மபுத்திராவின் விசாலமான கழிமுகத்தில் கட்டுக்கடங்கா தண்ணீர்கள் 9 மீட்டர்கள் உயரத்துக்கு எழும்பி பங்ளாதேஷின் முக்கால்வாசி பகுதியை வளைத்து சூழ்ந்து கொண்டது, ஆயிரக்கணக்கானோர் மூழ்கினர். 3,70,00,000 பேர் வீடுகளை இழந்தனர். 60,000 கிலோமீட்டர்கள் சாலை மறைந்துவிட்டது.
இப்படிப்பட்ட வெள்ளப்பெருக்குகள் அவ்வப்போது பங்ளாதேஷை திணறச் செய்திருப்பதன் காரணமாக செய்தித்தாள் ஒன்று இந்தத் தேசத்தை “விதியின் கழிமுகம்” என்றழைத்தது. அந்த வருணனை, இப்பேர்ப்பட்ட அதிர்ச்சியூட்டும் பேராபத்துக்குரிய காரணத்தை அநேகர் எவ்வாறு கருதுகிறார்கள் என்பதை பிரதிபலிக்கிறது: ஊழ் அல்லது விதி.
மற்றவர்கள் விதி வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதாக உணர்ந்தபோதிலும் சம்பவங்களை தவிர்க்கமுடியாதது என ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கு உலகம் முழுவதிலும் காணப்படுகிறது. அநேகர் விதியில் நம்பிக்கை வைக்க காரணமென்ன? விதிவாதம் என்பது என்ன?
மதத்தின் பங்கு
“விதி” என்ற வார்த்தை “பேசப்பட்டது” என்று பொருள்படும் ஃபேட்டம் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது.a விதியில் நம்பிக்கையுடையவர்கள், சம்பவங்கள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுவிடுகின்றன என்றும் மனிதர்கள் காரியங்களை மாற்றுவதற்கு, சக்தியற்றவர்கள் என்றும் நம்புகின்றனர். இந்தக் கருத்து பல்வேறு மதங்களால் பரப்பப்பட்டு வருகிறது, இலட்சக்கணக்கான விசுவாசிகளின் மனநிலைகளை உருப்படுத்தியிருக்கின்றது. உலகிலுள்ள மூன்று முக்கியத்துவம் வாய்ந்த மதங்களை பார்வையிடுவது—இந்து கோயில்கள், இஸ்லாமிய மசூதிகள் மற்றும் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் வடிவங்கள் போல—அத்தனை மாறுபட்ட முகபாவங்களுள்ள ஒரு முகத்தை விதி அணிந்திருப்பதை காண்பிக்கிறது.
உதாரணமாக உலகிலுள்ள சுமார் 90 கோடி முகமதியர்கள், விதி (ஊழ்) தெய்வீக சித்தத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதாக நம்புகிறார்கள்.b குரான் அறிவிக்கிறது: “பூமியில் ஏற்படக்கூடிய எந்தக் கஷ்டமும் . . . அவற்றை நாம் சிருஷ்டிப்பதற்கு முன்னதாகவே, புத்தகத்தில் பதியப்பட்டில்லாமல் இல்லை.” “யாதோர் ஆத்மாவும் அதற்குக் குறிப்பிடப்பட்ட, அல்லாஹ்வின் கட்டளையின் போதன்றி இறப்பதில்லை.”—சூரா 57:22; 3:145.
காரணமும் விளைவும் என்ற கர்மம்—விதியின் மற்றொரு முகபாவம்—உலகிலுள்ள சுமார் 70 கோடி இந்துக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. ஓர் இந்துவினுடைய தற்கால வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் முற்பிறவியில் அவனுடைய செயல்களினால் முடிவு செய்யப்படுகின்றன என்பதாக நம்பப்படுகிறது. பண்டைய இந்துக்களின் எழுத்தாகிய கருட புராணம் (Garuda Purana) இவ்விதமாகச் சொல்லுகிறது: “அடுத்தப் பிறவியில் உயிரினத்தின் தன்மையையும், சரீர சம்பந்தமாகவோ மனதின் சம்பந்தமாகவோ அது இரையாகப் போகிற அந்த நோயின் தன்மையையும், முந்தையப் பிறவியில் அவனுடைய இந்த வினைகளே தீர்மானிக்கின்றன . . . ஒரு மனிதன் அவனுடைய வாழ்க்கையில் விதிப்படி பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்கிறான்.”
கிறிஸ்தவமண்டலத்தின் சுமார் 170 கோடி உறுப்பினர்களைப் பற்றி என்ன? கிறிஸ்தவமண்டலத்திலுள்ள சிலர், விதிக்குப் பதிலாக கடவுளையும் விதிவாதக் கொள்கைக்குப் பதிலாக முன்னறுதியையும் நம்புவதாக உரிமைப் பாராட்டக்கூடும். ஆனால் மத மற்றும் நன்னெறியின் என்சைக்ளோபீடியா (Encyclopoedia of Religion and Ethics) இவ்விதமாக ஒப்புக்கொள்கிறது: “கிறிஸ்தவம் . . . விதியின் நம்பிக்கையிலிருந்து முற்றிலும் விலகியதாய் இருக்கிறது என்று சொல்லப்பட முடியாது.” ஒருசில மதப் பிரிவுகள், 16-வது நூற்றாண்டு சீர்திருத்தவாதியான மார்டின் லூதரின் நம்பிக்கையை இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. இவர் ஒரு சமயம் மனிதன் “ஒரு மரக்கட்டை, ஒரு பாறை, களி மண் அல்லது ஓர் உப்புத்தூண் போன்று அத்தனை சுயாதீனமற்றவனாக இருக்கிறான்” என்று சொன்னார்.
நாணயத்தைச் சுண்டிப்போடுவதும் நட்சத்திரங்களைக்கொண்டு கணிப்பதும்
இப்படிப்பட்ட கண்டிப்பான கருத்துகள் இப்பொழுது கிறிஸ்தவமண்டலத்தின் முக்கியப் பகுதிகளின் நம்பிக்கைகளில் தேக்க நிலைக்குள் விழுந்துவிட்ட போதிலும், அதனுடைய உறுப்பினர்களில் அநேகர் இன்னும் “மதச்சார்பற்ற உருவில்” இந்த நம்பிக்கையை ஏற்றுக்கொள்கின்றனர் என்பதாக ஓர் இறையியலர் ஒப்புக்கொள்கிறார். அந்த உருவில், விதி கணநேரம் தோன்றி மறைகிற ஒரு புன்முறுவலை அணிந்து அதிர்ஷ்டம் என்பதாக பெயர் சூட்டப்படக்கூடும். அதிர்ஷ்டம் அல்லது விதியின் உதவியை நாடும் வகையில் அடிக்கடி நாணயத்தைச் சுண்டிப்போடும் பலரை நீங்கள் அறிந்திருக்கலாம். இதை வெறும் ஒரு பழக்கம் என்பதாக அவர்கள் தட்டிக்கழித்துவிட முயற்சி செய்தாலும், அதை அவர்கள் தொடர்ந்து செய்கின்றனர். சில சமயங்களில் அது அவர்களுக்கு பலனளிப்பதாகவும் தோன்றுகிறது. உதாரணமாக ஐக்கிய மாகாணங்களில் வாழும் ஒரு மனிதன் லாட்டரி சீட்டுகளை வாங்கிய பின் நாணயத்தைச் சுண்டிப் போட்டு தலை வந்ததைக் கண்டதாக தி நியு யார்க் டைம்ஸ் (The New York Times) அண்மையில் அறிவிப்பு செய்திருந்தது. அவர் சொன்னார்: “நாணயத்தைச் சுண்டி தலைவரும் ஒவ்வொரு சமயமும் எப்பொழுதும் ஏதாவது நல்லதே எனக்கு சம்பவித்திருக்கிறது.” இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் 65 கோடி ரூபாய் பரிசுதொகைப் பெற்றார். அதிர்ஷ்டம் அல்லது விதியில் அவருடைய நம்பிக்கை குறைந்துவிட்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
நாணயங்களைச் சுண்டிப் போடுவதைப் பற்றி சில ஆட்கள் கேலி செய்யக்கூடும். என்றபோதிலும் அவர்கள் தங்களுடைய எதிர்காலம் நட்சத்திரங்களின் இடப்பெயர்ச்சியினால்—விதியின் மற்றொரு முகத்தினால்—முன்னறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதாக அவர்கள் நம்பக்கூடும். வட அமெரிக்காவில் மட்டுமே, சுமார் 1,200 செய்தித்தாள்கள் சோதிடம் பத்திகளைக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய மாகாணங்களிலுள்ள 55 சதவீத இளைஞர்கள் சோதிடம் பலனளிக்கிறது என்று நம்புவதாக வாக்கெடுப்பு ஒன்று காண்பித்தது.
ஆம், அது ஊழ், கருமம், கடவுள், அதிர்ஷ்டம் அல்லது நட்சத்திரங்கள், எதுவாக அழைக்கப்பட்டாலும் சரி, விதியில் நம்பிக்கை உலகம் முழுவதிலும் காணப்படுகிறது, பல யுகங்களாக அவ்விதமாக இருந்து வந்திருக்கிறது. இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ள எல்லா சரித்திரப்பூர்வமான ஆட்களிலும் ஒரே ஒருவர் மாத்திரம் விதிவாதக் கொள்கையில் நம்பிக்கை வைக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? யார் நம்பவில்லை? விதியைப் பற்றிய அவருடைய கருத்து, உங்களுடையதை எவ்விதமாக பாதிக்கக்கூடும்? (w90 8/15)
[அடிக்குறிப்புகள்]
a மத என்சைக்ளோப்பீடியா, புத்தகம் 5, பக்கம் 290 சொல்கிறது: “விதி. லத்தீன் ஃபேட்டம் என்பதிலிருந்து பெறப்பட்டது (பேசப்பட்ட ஒன்று, ஒரு தீர்க்கதரிசன அறிவிப்பு, தெய்வ மொழி, ஒரு தெய்வீக தீர்மானம்).”
b “எல்லாம்–வல்லவருடைய சித்தம் என்பதாக குறிப்பிடப்படுவதில் மாத்திரமே ஊழ் விதியிலிருந்து வித்தியாசப்படுகிறது; இரண்டுக்கும் எதிராக எல்லா மனித முறையீடும் வீணானதே.”—ஹேஸ்டிங்ஸின் மத மற்றும் நன்னெறியின் என்சைக்ளோபீடியா, புத்தகம் V, பக்கம் 774.
[பக்கம் 4-ன் பெட்டி]
விதிவாதக் கொள்கையை நம்பினவர்கள் யார்?
மாஸ்கரிபுத்ரா கோஸலா இந்திய துறவி, இயேசு கிறிஸ்து கிறிஸ்தவத்தின் ஸ்தாபகர்,
பொ.ச.மு. 6-வது/5-வது நூற்றாண்டு பொ.ச. 1-ம் நூற்றாண்டு
சிட்டியமின் சீனோகிரேக்க தத்துவஞானி, ஜாகும், சஃப்வானின் மகன்
பொ.ச.மு. 4-வது/3-வது நூற்றாண்டு முஸ்லீம் போதகர், பொ.ச. 8-ம் நூற்றாண்டு
பப்ளியஸ் வெர்ஜீலியஸ் மாரோ ஜான் கால்வின் ஃபிரெஞ்சு இறையியலரும்
ரோம கவி, பொ.ச.மு 1-ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதியும், 16-வது நூற்றாண்டு