வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
பருவக்காலங்களிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்வீர்களா?
யெகோவா ஒருசமயம் சொன்னார்: ‘பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும் கோடைகாலமும் மாரிகாலமும் ஒழிவதில்லை.’ (ஆதியாகமம் 8:22) இவ்விதமாக அவர் வேளாண்மைப் பருவக் காலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
பருவக்காலங்களைப் பற்றியும் வேளாண்மைக்கு அவற்றின் சம்பந்தம் பற்றியும் உங்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் ஒரு நகரத்தில் வசித்துவந்தாலும் அல்லது வேளாண்மையில் ஈடுபடாதிருந்தாலும், நீங்கள் இஸ்ரவேலரின் பருவக்காலங்களையும் வேளாண்மை நடவடிக்கைகளையும் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். ஏன்? ஏனென்றால், இவைகளைக் குறித்து எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறீர்களோ அவ்வளவு நன்றாக கடவுளுடைய வார்த்தையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
விவசாயிகள் நிலத்தை உழுது, விதை விதைத்து பின்னர் பயிர்களை அறுவடை செய்து போரடிக்கிறார்கள். ஆனால் பைபிள் சொல்வதை அதிகத் தெளிவாக கிரகித்துக்கொள்வதற்கு அந்த நடவடிக்கைகள் எந்தச் சமயத்தில் நிகழ்ந்தன என்பது உட்பட அதிகத்தை நாம் தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு பூர்வ யூதேயா இருந்த இடத்தில் தட்டையான மேட்டுச்சி நிலத்தில் மேலே செய்யப்படுவதை நாம் பார்ப்பது போன்று நிலத்தில் உழுவதை எடுத்துக்கொள்ளுங்கள்.a எந்த மாதத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டது என்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் தேசத்தில் எப்பொழுது நிலம் உழப்படுகிறது என்பதைத் தெரிந்திருப்பது உங்களைத் தவறாக வழிநடத்தக்கூடும். உழுவதற்குரிய காலம், நில உலகின் வட அரைக்கோளத்தில் இருப்பது போன்ற அதே சமயமாக தென் அரைக்கோளத்தில் இருப்பதில்லை; அது பல்வேறு உயரங்களிலும் மழைக்கால சமயத்தைப் பொறுத்தும்கூட வித்தியாசப்படுகிறது.
பைபிள் சம்பவங்களை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள் என்பதை இது பாதிக்கக்கூடும். எலியா தன் வாரிசை நியமிப்பதைக் குறித்து நீங்கள் வாசிக்கக்கூடும்: “அவன் . . . பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்.” (1 இராஜாக்கள் 19:19) அது எந்த மாதத்தில் சம்பவித்தது என்பதாகவும் தேசம் எவ்விதமாக தோற்றமளித்திருக்கும் என்பதாகவும் நீங்கள் நினைக்கிறீர்கள்? யோவான் 4:35-ல் இயேசு சொன்னார்: “அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலு மாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? . . . வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்.” அவர் ஒரு சமயத்தைக் குறிப்பாகச் சொன்னபோதிலும், எப்போது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா?
விளக்கவரைப் படம், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் பருவக்காலங்களைப் பற்றியும் வேளாண்மை நடவடிக்கைகளைப் பற்றியும் மிகச் சிறந்த ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. வெளிப்புறத்தேயுள்ள வளையம் யூத பரிசுத்த நாட்காட்டியின் மாதங்களைத் தருகிறது.b நம்முடைய மாதங்களோடு இவைகளை ஒப்பிடுகையில் இவை பகுதியளவில் மாத்திரமே ஒத்திருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். நிசான் (அல்லது ஆபிப்) மார்ச் மாத பிற்பகுதியிலும் ஏப்ரல் மாத முற்பகுதியிலுமாகச் சேர்ந்து வருகிறது. நடுப் பகுதியை நோக்கிய அடுத்தப் பகுதி பயிர்கள் எப்பொழுது முதிர்ந்தன என்பதைக் காண்பிக்கிறது. இது அறுப்பு மற்றும் போரடித்தல் போன்ற ஒருசில வேளாண்மை நடவடிக்கைகள் எப்பொழுது நடைபெற்றது என்பதை அறிய உங்களுக்கு உதவிசெய்கிறது. விளக்கவரைப் படத்தின் நடுப்பகுதி ஆண்டின் போது நிகழும் சீதோஷண மாற்றங்களை ஒப்பிட உங்களை அனுமதிக்கிறது.
ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட இரண்டு உதாரணங்களைப் போல, பைபிள் பதிவுகளின் உங்கள் புரிந்துகொள்ளுதலையும் போற்றுதலையும் ஆழமாக்க விளக்க வரைப்படத்தைப் பயன்படுத்தவும்.
எலிசா, தீர்க்கதரிசியாக இருக்கும்படி அழைக்கப்பட்டபோது நிலத்தை உழும் ஒரு முக்கிய வேலையில் அவன் பங்குகொண்டிருந்தான். அது கோடை காலத்தின் அளவுக்கு அதிகமான உஷ்ணம் கடந்துபோன பின்பு டிஷ்ரியாக (செப்டம்பர்–அக்டோபர்) இருக்கிறது. சரியான நேரத்தில் பெய்யும் மழை மண்ணை மென்மையாக்க, நிலத்தை உழுவதும் அதைத் தொடர்ந்து விதை விதைப்பதும் கூடிய காரியமாக இருக்கிறது.
யோவான் 4:35-லுள்ள வார்த்தைகளை இயேசு எப்போது சொன்னார்? அறுவடை காலத்துக்கு இன்னும் நான்கு மாதங்கள் தள்ளி இருந்தது. வாற்கோதுமை அறுவடை நிசான் மாதம் (மார்ச்–ஏப்ரல்) சுமார் பஸ்கா சமயத்தில் இருந்தது என்பதைக் கவனியுங்கள். இது கிஸ்லேவுக்கு (நவம்பர்–டிசம்பர்) உங்களைக் கொண்டுவருகிறது. மழை அதிகரித்துக்கொண்டு வர, பலமான மழையும் குளிரான வானிலையும் முன்னால் இருந்தது. ஆகவே, “வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்” என்பதாக இயேசு சொன்னபோது அடையாள அர்த்தமுள்ள ஓர் அறுவடையை அர்த்தப்படுத்தினார் என்பது தெளிவாக இருக்கிறது.
பின்வருபவை உங்கள் தனிப்பட்ட படிப்புக்கு அல்லது உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து அனுபவித்துப் படிப்பதற்கு பயன்படுத்த மற்ற கேள்விகள்:
◼ எரிகோவைச் சுற்றி வாற்கோதுமை அறுவடை ஆதார் மாதத்தில் நடைபெற்றது; ஆகவே யோசுவா 2:6 மற்றும் 3:15-லுள்ள விவரங்கள் எவ்விதமாக, பைபிளின் திருத்தமானத்தன்மையை உறுதி செய்கின்றன?—யோசுவா 4:19; 5:11.
◼ தானிய அறுவடையைத் தொடர்ந்து போரடித்தல் செய்யப்பட்டது. ஆகவே லேவியராகமம் 26:5-லுள்ள வாக்குறுதி எவ்விதமாக நிறைவான செழுமையை விளக்கிக் காட்டுகிறது?
◼ கடவுளுடைய மக்களிடமிருந்து இரத்தப்பழியைப் போக்க, கொல்லப்படும்படி அனுமதியளிக்கப்பட்ட தன் இரண்டு குமாரர்களை ரிஸ்பாள் தொடர்ந்து காவல் காத்துவந்திருக்கக்கூடும் என்பதை 2 சாமுவேல் 21:10 எவ்விதமாகத் தெரிவிக்கிறது?
◼ 1 சாமுவேல் 12:17-ல் குறிப்பிடப்பட்ட இடிமுழக்கங்களும் மழையும் ஏன் தெய்வீக பதிலாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன?—நீதிமொழிகள் 26:1.
◼ போவாஸ் தன்னை நடத்தினவிதம், வெறுமென ஒரு கணநேர பிரதிபலிப்பு இல்லை என்பதாக முடிவுசெய்வதற்கு ரூத்துக்கு என்ன காரணமிருந்தது?—ரூத் 1:22; 2:23.
பைபிள் வாசிப்பைச் செய்கையில் ஏன் இந்த விளக்கவரை படத்தை, எடுக்க வசதியான இடத்தில் வைத்திருக்கக்கூடாது? (w90 9/1)
கிஸ்லே நிசான்
25 பிரதிஷ்டை பண்டிகை 14 பஸ்கா
15–21 புளிப்பில்லா அப்பங்கள்
16 முதற்கனிகள் காணிக்கை
ஆதார் ஐயார்
14 பிந்திய பஸ்கா 14, 15 பூரீம்
சீவான் டிஷ்ரி
6 வாரங்களின் பண்டிகை 1 எக்காளமூதும் நாள்
(பெந்தெகொஸ்தே) 10 பாவநிவாரண நாள்
15–21 கூடாரப்பண்டிகை
22 சபை கூடும் பரிசுத்த நாள்
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளின் 1990 ஆண்டு நாட்காட்டியையும் பார்க்கவும்.
b 19 ஆண்டுகால சுழற்சியின்போது ஒரு கூடுதலான அல்லது இடையில் இணைக்கப்பட்ட மாதம் (வீடார்) ஏழு தடவைகள் சேர்க்கப்பட்டது.
[பக்கம் 17-ன் வரைப்படம்/படங்கள்]
(For fully formatted text, see publication)
நிசான் (ஆபீப்)
மார்ச்-ஏப்ரல்
வாற்கோதுமை
ஐயார் (சீவ்)
ஏப்ரல்-மே
கோதுமை
சீவான்
மே-ஜூன்
முதல் கந்தாயத்து அத்திப்பழம்
தம்மூசு
ஜூன்-ஜூலை
திராட்ச செடியின் முதற்பழம்
ஆப்
ஜூலை-ஆகஸ்ட்
கோடைகால பழங்கள்
எலூல்
ஆகஸ்ட்-செப்டம்பர்
பேரீச்சம், திராட்சை, அத்தி
டிஷ்ரி(ஏத்தானீம்)
செப்டம்பர்-அக்டோபர்
உழுதல்
ஹெஷ்வான்(பூல்)
அக்டோபர்-நவம்பர்
ஒலிவப் பழங்கள்
கிஸ்லே
நவம்பர்-டிசம்பர்
மந்தை தங்கியிருத்தல்
தேபேத்
டிசம்பர்-ஜனவரி
தாவரங்கள் வளர்ச்சியுறுதல்
சேபாத்
ஜனவரி-பிப்ரவரி
வாதுமை மரம் பூப்பூத்தல்
ஆதார்
பிப்ரவரி-மார்ச்
நாரத்தை-எலுமிச்சை-கிச்சிலி பழங்கள்
வீடார்
மார்ச்
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 17-ன் படங்களுக்கான நன்றி]
Garo Nalbandian
Pictorial Archive (Near Eastern History) Est.