அவர்கள் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள்
யெகோவா தங்களுக்குச் செய்திருக்கும் எல்லா நன்மைகளுக்கும் திரும்ப செலுத்த இயலாமற்போனாலும், அவருடைய சாட்சிகளுடைய உலகளாவிய பிரசங்க வேலையை ஆதரிப்பதற்காக அநேகர் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள். (மத்தேயு 24:14; மாற்கு 14:3–9 ஒப்பிடவும்.) அ.ஐ.மா.-விலுள்ள மின்னசோட்டாவிலுள்ள ஒரு குடும்பத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இந்தக் கடிதம் இவ்விஷயத்தில் அக்கறையைத் தூண்டுவதாக உள்ளது:
“அன்புள்ள சகோதரர்களே,
“நாங்கள்—ரூபாய் தொகையை நன்கொடையாக அனுப்பியுள்ளோம். அது உலகளாவிய வேலைக்கு உதவி செய்ய அல்லது ராஜ்ய மன்ற கட்டிட நிதிக்கு அல்லது அமைப்புக்கு இருக்கும் வேறு எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்தப்படலாம் என்று கேட்டுக்கொள்ளுகிறோம்.
“இந்தப் பணம் [யெகோவாவின்] சித்தத்துக்கு இசைவாகப் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் நம்பிக்கையாயிருக்கிறோம். நேர்த்தியான வேலையைத் தொடர்ந்து செய்வதற்கு எங்கள் ஊக்குவிப்பை அளிக்கவும், விசேஷமாக [காவற்கோபுரம்] சங்கத்தின் உலகளாவிய செயல்பாடுகளைப் பற்றிய வீடியோ டேப்புக்காக உங்களுக்கு நன்றி கூறவும் இந்த வாய்ப்பினை எடுத்துக்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். இந்த டேப் தானே மாபெறும் வேலையைப் பற்றி எங்களுக்கு உணர்த்தி, எங்களுடைய உள்ளப்பூர்வ நன்கொடைகள் அவசியம் என்பதாக எங்களை உணரச்செய்தது. முன்பெல்லாம், உங்களுக்கு நன்கொடைகள் அனுப்பும் பொறுப்பு சபை, வட்டாரம் அல்லது மாவட்டத்திடமாக நாங்கள் விட்டுவிட்டிருந்தோம், ஆனால் இப்பொழுது எங்களுடைய குறுகிய நோக்கில் வேலைக்குத் தனிப்பட்ட விதமாக பணஉதவியளிக்க வேண்டியதன் அவசியத்தை அன்பாக எங்களுக்கு காண்பித்தமைக்காக நாங்கள் இப்பொழுது யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் குடும்பமாக குறைந்தபட்சம்—ரூபாய் ஒவ்வொரு மாதமும் நியு யார்க்குக்கு நேரடியாக அனுப்ப தீர்மானித்திருக்கிறோம்.
“மறுபடியுமாக, எங்களுக்கு நீங்கள் செய்திருக்கும் நேர்த்தியான சேவைக்காகவும், நீங்கள் யெகோவாவுக்குக் காண்பித்திருக்கும் உண்மைத்தன்மைக்காகவும் உங்களுக்கு நன்றி.”