ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
யெகோவாவின் சாட்சிகள் நல்ல பலன்களோடு சந்தர்ப்ப-சாட்சி முறையில் பிரசங்கிக்கிறார்கள்
அநேக ஆட்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் அவர்களுக்கு சந்தர்ப்ப-சாட்சி முறையில் பிரசங்கித்த போதே முதன் முதலாக பைபிள் சத்தியத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் சாட்சிகள், தண்ணீர் மொள்ள வந்த சமாரிய பெண்ணிடம் சந்தர்ப்ப-சாட்சி கொடுத்த இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை பின்பற்றுகிறார்கள். (யோவான், அதிகாரம் 4) கிழக்கு ஆப்பிரிக்காவில், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரியிடம் சந்தர்ப்ப-சாட்சி முறையில் பிரசங்கித்தாள். என்ன விளைவடைந்தது என்பதைக் காவற்கோபுரம் சங்கத்தின் கிளைக்காரியாலயம் கூறுகிறது:
◻ ஒரு நாள் அதிகாலை நகரத்துக்குப் போகிற வழியில் சாட்சி ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரியைச் சந்தித்தாள். அவள் “இந்தச் சமயத்தில் நீங்கள் எங்கே போய்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்க சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டாள். அதற்கு பதில் இப்படியாக இருந்தது: “நான் என் கடவுளிடம் ஜெபிக்க போகிறேன்.” அப்பொழுது அவள் கன்னியாஸ்திரியிடம் கேட்டாள்: “உங்கள் கடவுளின் பெயர் உங்களுக்குத் தெரியுமா?” “கடவுள் என்பதே அவர் பெயரல்லவா?” என்பதாக கன்னியாஸ்திரி பதிலளித்தாள். சாட்சி, கடவுளுடைய பெயரைப் பற்றி கலந்து பேச அன்று மதியம் அவர்களுடைய வீட்டுக்கு வருவதாக தெரிவித்தாள். சம்பாஷணை முடிந்த பின்பு கன்னியாஸ்திரி தன் சர்ச்சுக்குச் சென்று, பாதிரிமார்களில் ஒருவரிடம் “யெகோவா” என்ற பெயரின் அர்த்தம் அவருக்குத் தெரியுமா என்று கேட்டாள். “அது கடவுளுடைய பெயர்” என்பதே பதிலாக இருந்தது. பாதிரி இதை அறிந்திருந்தும், ஆனால், தனக்கு ஒருபோதும் கற்பிக்கவில்லை என்பதால் கன்னியாஸ்திரி மிகவும் ஆச்சரியமடைந்தாள்.
சாட்சி தொடர்ந்து ஒன்பது நாட்கள் அந்தப் பெண்ணைச் சந்தித்து திரித்துவம், ஆத்துமா, நரக அக்கினி மற்றும் மரித்தோருக்கான நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிய சத்தியத்தை அவளுக்குப் போதித்தாள். அந்தப் பெண் அனைத்தையும் கிரகித்துக்கொண்டு இந்த எல்லா புதிய போதகங்களையும் குறித்துச் சிந்திக்க தனக்கு கொஞ்சம் அவகாசம் தரும்படியாக சாட்சியை கேட்டுக்கொண்டாள். இரண்டு வாரங்களுக்குப் பின்பு அவள் மறுபடியும் சாட்சியோடு தொடர்பு கொண்டு கூடுதலான கலந்தாலோசிப்புகளைக் கொண்டிருக்க அவளை கேட்டுக்கொண்டாள். இந்தச் சமயத்திற்குள் கன்னியாஸ்திரி சர்ச்சைவிட்டு வெளியேற தீர்மானித்துவிட்டிருந்தாள். ஏற்கெனவே தன்னுடைய விக்கிரகங்களையும், ஜெபமாலையையும், சிலுவையையும் அழித்துவிட்டிருந்தாள். பாதிரி, அவளை திரும்பி வரச் செய்ய முயற்சித்துப் பார்த்தார். ஆனால் அவள் சத்தியத்தைத் தொடர்ந்து தேட தீர்மானமாயிருந்தாள். அவள் பின்னால் முழுக்காட்டப்பட்டாள். அவளுடைய மோசமான உடல்நிலை மற்றும் முதிர் வயதின் மத்தியிலும் அவள் அநேக மாதங்களுக்கு ஒழுங்கான பயனியராக சேவித்திருக்கிறாள்.
அவளுடைய வீடு பெரியதாக இருந்தபடியால், ராஜ்ய மன்றமாக பயன்படுத்தப்பட சபைக்கு அதை அளிக்க முன்வந்தாள். சகோதரர்கள் பழைய கூரையை மாற்றி, உட்புற சுவர்களைத் தகர்த்து கட்டிடத்தின் பெரும்பகுதியைக் கவர்ச்சியான ஒரு கூடுமிடமாக மாற்றினர். முன்னாள் கத்தோலிக்க கன்னியாஸ்திரி மன்றத்துக்குப் பின்னால் ஓர் அறையில் வசிக்கிறாள். யெகோவாவின் வணக்கத்துக்கு இந்த அன்பளிப்பைச் செய்ய முடிந்தது குறித்து அவள் மிகவும் சந்தோஷமாயிருக்கிறாள்.
◻ சந்தர்ப்ப-சாட்சி கொடுப்பதிலிருக்கும் ஞானத்தை யுகாண்டாவில், கம்பாலாவிலிருந்து வரும் மற்றொரு அனுபவம் காண்பிக்கிறது. ஓர் அரசு அலவலகத்துக்குப் போகும் வழியில், ஒரு மிஷனரி சாட்சி மின்தூக்கியில் தன்னோடு இருந்தவர்களிடம் சந்தர்ப்ப-சாட்சியம் பகர்ந்தார். திருவாளர் L— என்ற ஒரு மனிதர் அளிக்கப்பட்ட பிரசுரத்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஆனால் அந்தச் சமயத்தில் அவரால் அதை எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே அவர் மிஷனரியிடம் தன்னுடைய பெயரையும் அலுவலக விலாசத்தையும் கொடுத்தார். பின்னால் மிஷனரி அங்கு சென்று திருவாளர் L——-ஐ சந்திக்க வந்திருப்பதாகச் சொன்னார். அவர் அழைக்கப்பட்டார், ஆனால் மிஷனரி வேறு ஒரு மனிதன் அங்கு வந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். அந்த அலுவலகத்தில் ஒரே பெயருள்ள இரண்டு பேர் வேலை செய்கிறார்கள். இரண்டாவது திருவாளர் L——-க்கு சுருக்கமாக சாட்சி கொடுக்கப்பட்டது. அவர் அசாதாரணமான அக்கறையை காண்பித்தார். முதல் திருவாளர் L—— அக்கறையை இழந்துவிட்டிருக்க, இரண்டாவது திருவாளர் L——-உடன் ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது அவர் முழுக்காட்டப்பட்ட ஒரு சாட்சியாக இருக்கிறார், அவருடைய மனைவியும் மகனும் முழுக்காட்டுதலை நோக்கி நல்லவிதமாக முன்னேறி வருகிறார்கள்.
இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பராக இருக்கிறார், நீதியான மனச்சாய்வுள்ள இருதயங்களைக் கொண்ட செம்மறியாடுகளைப் போன்றவர்களை அவர் அறிந்திருக்கிறார். தம்மைப் பின்பற்றுகிறவர்களை இப்படிப்பட்டவர்களிடமாக அவர் வழிநடத்திச் செல்கிறார் என்பதை இந்த அனுபவங்கள் விளக்குகின்றன. சந்தர்ப்ப-சாட்சி பிரசங்கிப்பு முறை பலன்தருவதாக இருக்கக்கூடும்.—யோவான் 10:14. (w92 1/1)