உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w92 10/1 பக். 3-4
  • ஏன் இவ்வளவு மனமுறிவு?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏன் இவ்வளவு மனமுறிவு?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • விடுபட அதிகக் கடுமையான வழி
  • நம்பிக்கை மனமுறிவை வெல்லுகிறது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • மனமுறிவைச் சமாளிப்பது எப்படி?
    விழித்தெழு!—2000
  • விரைவில் கவலையில்லா உலகம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • சாவுதான் பிரச்சினைக்குத் தீர்வா?
    விழித்தெழு!—2008
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
w92 10/1 பக். 3-4

ஏன் இவ்வளவு மனமுறிவு?

மேம்பட்ட ஒரு வாழ்க்கைக்கான நம்பிக்கை—இறுதியில் கிட்டியது! அப்போது கிழக்கு ஜெர்மனி என்று அறியப்பட்டிருந்த இடத்தில் வாழ்ந்துகொண்டிருந்த பெரும்பாலான ஜனங்கள் பெர்லின் சுவர் நவம்பர் 1989-ல் சரிந்து விழுந்த போது இவ்வாறு நம்பினர். என்றபோதிலும், ஒரு வருடத்துக்கும் சற்று அதிகமான காலத்துக்குப் பிறகு, “பெர்லின் சுவரால் பாதுகாக்கப்பட்டிருந்த வாழ்க்கையைக் காட்டிலும், முதலாளித்துவ குடியாட்சியின் கடுமையான உலகத்தை எதிர்த்துச் சமாளிப்பது அதிக கடினமாக இருப்பதாக,” அவர்கள் குறை கூறினர். அதன் விளைவு? குழப்பமும் மனமுறிவும்.

குடும்பத்தில் வன்முறை மற்றும் சமுதாய வன்முறை ஜனங்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு பாதுகாப்பைத் தேடி செல்ல ஒருவேளை வற்புறுத்தலாம். ஆனால் வெகு சிலரே அதை கண்டடைகின்றனர். வீடு இன்றி நகரத்தின் தெருக்களில் வசித்துக்கொண்டிருக்கும் ஜனங்களின் மத்தியில் வாழும் நிலையும்கூட சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது. சில தேசங்களில் இப்படிப்பட்டவர்களில் அநேகர் சிக்கலான வழிமுறைகளில் சிக்கிவிடுவதில் விளைவடைந்திருக்கிறது. அவர்களுக்கு வேலை இல்லாததன் காரணமாக ஒரு வீட்டை கொண்டிருக்க அவர்களால் இயலவில்லை. வீட்டு முகவரி அவர்களிடம் இல்லாததால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. அரசு நல்வாழ்வு நிறுவனங்கள் உதவி செய்ய முயற்சி செய்கின்றன. ஆனால் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு காலம் எடுக்கிறது. ஆகையால் வெறுப்பும் மனமுறிவும் ஏற்படுகின்றன.

மனமுறிவு அநேக பெண்களை அதிர்ச்சி தரும் காரியங்களைச் செய்யும்படி செய்வித்திருக்கிறது. 1990-களில் பெண்களும் குற்றச் செயலும் என்ற அறிக்கையில் டாக்டர் சூசன் எட்வர்ட்ஸ் என்ற சட்ட விரிவுரையாளர் இவ்வாறு விளக்குகிறார்: “இளம் பெண்கள் [விலைமகள் என்ற இழிவான செயலில்] உட்படுவது பொருளாதார தேவையின் நேரடியான விளைவாயிருக்கிறது. சுய-சிட்சை இல்லாததன் காரணமாகவோ அல்லது குடும்ப பின்னணியின் காரணமாகவோ அல்ல.” அதே போன்று, வேலை தேடுவதற்காக வீட்டை விட்டுச் செல்லும் இளம் ஆண்களுக்கும் எந்த வேலையும் கிடைப்பதில்லை. சிலர் ‘வாடகை பையன்களாக’ உணவுக்காகவும் உறைவிடத்துக்காகவும் தங்கள் உடல்களை ஓரினப்புணர்ச்சிக்காரர்களுக்கு வாடகைக்கு கொடுக்கின்றனர். குற்றவாளி கும்பல்களின் கைகளிலே அடைமானப் பொருள்களாக ஆகிவிடுகின்றனர்.

கடுமையான அரசியல் மெய்ம்மைகள், வன்முறை, பொருளாதார சிக்கல்கள், இவையனைத்தும் பலதரப்பட்ட மனமுறிவை தூண்டக்கூடும். மேம்பட்ட வாழ்க்கைத் தொழிலை உடையவர்களும்கூட அதிகரித்துக்கொண்டே செல்லும் பணப்பிரச்னைகளை சமாளித்துக்கொண்டு தங்கள் செல்வமிக்க வாழ்க்கை-பாணியை காத்துக்கொள்ள நாடுகையில் அவர்களும்கூட இதற்கு விதிவிலக்கானவர்களாக இல்லை. இதன் விளைவு? பண்டையக் கால சாலொமோன் ராஜா சொன்னது போல, “கொடுமை ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்”!a (பிரசங்கி 7:7, NW) உண்மையிலேயே, மனமுறிவு பிரச்னையிலிருந்து விடுபட அதிக கடுமையான படியை எடுக்கும்படி, தற்கொலை செய்யும்படி அநேகரை வழிநடத்துகிறது.

விடுபட அதிகக் கடுமையான வழி

இளைஞர்கள் மத்தியில் நிகழும் அநேக தற்கொலைகள் மனமுறிவு என்ற தொல்லையினால் அவர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. ஒரு பிரிட்டிஷ் செய்தி எழுதுபவர் இவ்வாறு கேட்டார்: “பருவ வயதினரிடையே அவ்வளவு மனமுறிவை நம்முடைய காலங்களில் ஏற்படுத்துவது எது?” நஞ்சு எடுத்துக்கொள்ள முயற்சி செய்து பிறகு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 8 முதல் 16 வயதையுடைய பிள்ளைகளைப் பற்றிய ஓர் ஆராய்ச்சியில், லண்டனின் மனநோய் மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் எரிக் டெய்லர் இவ்வாறு அறிக்கை செய்கிறார்: “காரியங்களைக் குறித்து பிள்ளைகளில் எத்தனை பேர் மனமுறிவுற்று நம்பிக்கையிழந்து இருந்தனர் என்பது தெளிவாக இருக்கிறது.” வேண்டுமென்றே நஞ்சு சாப்பிட்டு பிறகு காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 1,00,000 என பிரிட்டன் அறிக்கை செய்வது ஜனங்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதைக் காட்டுகிறது.

ஒரு பிரிட்டிஷ் அறக்கொடை நிறுவனம் மனமுறிவுற்றவர்கள் சொல்வதை இரக்கத்தோடு செவிகொடுத்துக் கேட்பதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்தது. இந்த விதத்தில் அந்நிறுவனத்தின் அறிவுரையாளர் “மரணத்துக்குப் பதில் வேறு மாற்று உதவிகளை” அளிப்பதாக உரிமைபாராட்டிக் கொண்டனர். என்றபோதிலும், மனமுறிவை ஏற்படுத்தும் பிரச்னைகளை அவர்களால் தீர்க்க முடியவில்லை என்று அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

“சமுதாயத்தில் சமூக ஒற்றுமையின்மையையும், பிரிந்து இருத்தலின் அளவையும்,” தற்கொலையின் வீதம் பிரதிபலிக்கிறது என்று தி சன்டே கரஸ்பான்டன்ட் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. இன்று ஏன் இவ்வளவு அதிக தற்கொலை? “வீடற்ற நிலைமை, மதுபானங்களை அருந்துவது, எய்ட்ஸ் நோயின் பயமுறுத்தல், மனநோய் மருத்துவமனைகள் மூடிவிடுதல்” ஆகியவை அப்படிப்பட்ட ஆழமான மனமுறிவுக்குத் தனிப்பட்ட நபர்களை வழிநடத்துவதற்கு காரணங்களாக இருக்கின்றன. அதன் காரணமாக தங்கள் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு தங்கள் சொந்த உயிர்களை எடுத்துக் கொள்வதே என அவர்கள் முடிவுசெய்கின்றனர்.

மனமுறிவை மறையச் செய்வதற்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? ஆம்! “நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்,” என்பது இயேசுவின் புது நம்பிக்கைக் கொள்ளும் வேண்டுகோள் ஆகும்! (லூக்கா 21:28) அவர் எதை அர்த்தப்படுத்தினார்? என்ன நம்பிக்கை இருக்கிறது?

[அடிக்குறிப்புகள்]

a ஹாரிஸ், ஆர்ச்சர் மற்றும் வால்கியால் பதிப்பிக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் இறையியல் வார்த்தைப் புத்தகத்தின் பிரகாரம் “கொடுமை” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதற்குரிய மூலமொழி வேர் சொல், “வாழ்க்கையில் தாழ்ந்த நிலையிலிருப்பவர்கள்மேல் சுமை ஏற்றுவதோடு, மிதிப்பதோடு மற்றும் துன்பப்படுத்துவதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்