உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w92 11/15 பக். 30
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • இதே தகவல்
  • உலகப்பிரகாரமான மனக்கற்பனைகளை வெறுத்தொழித்து, ராஜ்ய உண்மைகளை நாடித்தொடருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • வலையும் மீனும் உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • யெகோவாவின் ஏற்பாடு, “ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • “ஆபத்துக் கால”த்தை யார் தப்பிப்பிழைப்பார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
w92 11/15 பக். 30

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

காவற்கோபுர சமீப வெளியீடுகளை வாசித்துப் போற்றினீர்களா? அவ்வாறெனில், பின்வரும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கக்கூடுமாவென பாருங்கள்:

◻ பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்தபோது நிதனீமியருக்கும், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரருக்கும் கொடுக்கப்பட்ட கூடுதலான ஊழிய சிலாக்கியங்கள் எதை நன்றாய் முன்குறித்துக் காட்டலாம்?

இன்று, பூமியிலிருக்கும் ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதிபேர் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகையில், மற்றச் செம்மறியாடுகள் தொடர்ந்து பெருகிக்கொண்டிருக்கின்றனர். செம்மறியாட்டைப்போன்ற இவர்களில் சிலர், நிதனீமியரையும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரையும்போல், மீதிபேரின் மேற்பார்வையின்கீழ் இப்பொழுது, முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகள் நியமிக்கப்பட்டுள்ளனர். (ஏசாயா 61:5)—7/15, பக்கங்கள் 16-17.

◻ தீர்க்கதரிசி செப்பனியா பின்வருமாறு சொன்னபோது என்ன பொருள் கொண்டார்: “அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்”? (செப்பனியா 2:2, 3, தி.மொ.)

வரவிருக்கும் “மிகுந்த உபத்திரவத்தின்”போது எவராவது பாதுகாக்கப்பட, அது ஒருமுறை ரட்சிக்கப்பட்டது, எப்பொழுதும் ரட்சிக்கப்பட்டதே என்ற காரியமாயில்லை. (மத்தேயு 24:13, 21) அந்த நாளில் மறைக்கப்படுவது ஒருவர் மூன்று காரியங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதன்பேரில் சார்ந்திருக்கும்: அவர் யெகோவாவைத் தேடவேண்டும், நீதியைத் தேடவேண்டும், மனத்தாழ்மையைத் தேடவேண்டும்.—8/1, பக்கங்கள் 15-16.

◻ “முடிவுகாலத்”தில் எந்தக் கருத்தில் மிகாவேல் “எழும்பி நிற்பார்”? (தானியேல் 12:1, 4, NW)

தாம் அரசராக 1914-ல் சிங்காசனத்திலேற்றப்பட்டது முதற்கொண்டு, மிகாவேல் யெகோவாவின் ஜனங்கள் சார்பாக “நின்றுகொண்டிருக்கிறார்.” ஆனால் மிகாவேல் மிக விசேஷித்தக் கருத்தில்—யெகோவாவின் பிரதிநிதியாக பூமியிலிருந்து எல்லா அக்கிரமத்தையும் நீக்கவும் கடவுளுடைய ஜனங்களை விடுவிப்பவராகவும்—“எழும்பி நிற்கப்” போகிறார்.—8/1, பக்கம் 17.

◻ உண்மையான மகிழ்ச்சி எதன்பேரில் சார்ந்திருக்கிறது?

உண்மையான மகிழ்ச்சி, யெகோவாவுடனிருக்கும் நம்முடைய அருமையான உறவு, அவருடைய அங்கீகாரம், மற்றும் அவருடைய ஆசீர்வாதம் ஆகியவற்றின்பேரில் சார்ந்திருக்கிறது. (நீதிமொழிகள் 10:22) ஆகவே, யெகோவாவுக்குக் கீழ்ப்படிதலும் அவருடைய சித்தத்துக்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொடுத்தலுமான இவற்றிற்குப் புறம்பாக உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியாது. (லூக்கா 11:28)—8/15, பக்கங்கள் 16, 19.

◻ இயேசு தம்முடைய சுகப்படுத்தும் அற்புதங்களை நடப்பித்தபோது, சுகப்படுத்தப்பட்டவர்களின் பங்கில் விசுவாசம் தேவைப்பட்டதா?

சுகப்படுத்தப்படுவதற்கு இயேசுவிடம் வருவதற்கு ஓரளவான விசுவாசம் பலரின் பங்கில் தேவைப்பட்டது. (மத்தேயு 8:13) எனினும், இயேசு யாரென அறியாத ஒரு முடவனை அவர் சுகப்படுத்தினபோது இருந்ததுபோல், இயேசு தம்முடைய அற்புதங்களை நடப்பிப்பதற்கு எந்த விசுவாசத்தின் அறிக்கையும் தேவைப்படவில்லை. (யோவான் 5:5-13) இயேசுவின் சத்துருக்களின் கூட்டத்தைச் சேர்ந்த பிரதான ஆசாரியனின் ஊழியக்காரனுடைய வெட்டப்பட்ட காதையும் அவர் திரும்ப சுகப்படுத்தினார். (லூக்கா 22:50, 51) இந்த அற்புதங்கள் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வல்லமையால் நடப்பிக்கப்பட்டது, நோயாளியின் விசுவாசத்தின் காரணமாக அல்ல.—9/1, பக்கம் 3.

◻ மத்தேயு 13:47-50-ல் இயேசுவின் உவமையில் பேசப்பட்ட “வலை” எதைக் குறித்துக் காட்டினது?

அந்த “வலை” கடவுளுடைய சபையென சொல்லிக்கொள்வதும் “மீன்களைக்” கூட்டிச்சேர்ப்பதுமான பூமிக்குரிய கருவியாகப் பயன்படும் அமைப்பைக் குறிக்கிறது. இது கிறிஸ்தவமண்டலத்தையும் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையையும் இரண்டையுமே உட்படுத்தியிருக்கிறது, பின் குறிப்பிடப்பட்டவர்கள் மத்தேயு 13:49-க்குப் பொருந்த, தேவதூதர்களின் வழிநடத்துதலின்கீழ் ‘நல்ல மீன்களைத்’ தொடர்ந்து கூட்டிச் சேர்த்துக்கொண்டிருக்கின்றனர்.—9/15, பக்கம் 20.

◻ இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் தங்கள் வேலைநியமிப்புகளை நிறைவேற்றுகையில் பொருத்திப் பயன்படுத்த வேண்டியிருந்த நியமங்களில் சில யாவை?

செல்வந்தருக்கும் ஏழைகளுக்கும் சம நீதி, கண்டிப்பான பட்சபாதமற்ற தன்மை, பரிதானங்கள் வாங்காமை. (லேவியராகமம் 19:15; உபாகமம் 16:19)—10/1, பக்கம் 13.

◻ நியாய விசாரணைகளின்மூலம் மூப்பர்கள் எதை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்?

ஒரு குறிக்கோளானது அந்த வழக்கின் உண்மையான நிகழ்ச்சிகளைக் கண்டுபிடிப்பது, இதை அன்புடன் செய்வது. இவை தெரிந்துகொள்ளப்பட்ட பின், சபையைப் பாதுகாப்பதற்கும் யெகோவாவின் உயர் தராதரங்களையும் கடவுளுடைய ஆவி தடங்கலில்லாமல் அதற்குள் நிலவுவதையும் காத்துவைப்பதற்கும் தேவைப்படும் எல்லாவற்றையும் மூப்பர்கள் செய்ய வேண்டும். ஆபத்துக்குட்பட்ட பாவியைக் கூடுமானால், காப்பாற்றுவதற்கும் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. (லூக்கா 15:8-10-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.)—10/1, பக்கங்கள் 18-19.

◻ கள்ளத்தனமான பாலுறவு சம்பந்தப்பட்ட மனக்கற்பனைகள் ஏன் தீங்குள்ளவை?

மத்தேயு 5:27, 28-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளைக் கருதுகையில், கள்ளத்தனமான பாலுறவு மனக்கற்பனைகளில் விடாது ஈடுபடும் எல்லாரும் தங்கள் இருதயங்களில் விபசாரஞ்செய்யும் குற்றமுடையோராக இருக்கின்றனர். அத்தகைய மனக்கற்பனைகள் ஒழுக்கக்கேட்டு நடத்தைக்கு வழிநடத்தலாமென்ற உண்மையான ஆபத்தும் இருக்கிறது.—10/15, பக்கம் 15.

◻ நம்முடைய துன்பங்களைச் சரியான முறையில் கருதுவதற்கும் அவ்வாறு அவற்றைச் சகிப்பதற்கும் என்ன வழிகளில் யெகோவா நமக்கு உதவிசெய்யலாம்?

உடன் விசுவாசிகளால் அல்லது பைபிள் படிப்பின்போது, வேத வசனங்கள் நம்முடைய கவனத்துக்குக் கொண்டுவரப்படலாம். கடவுளுடைய வழிநடத்துதலின்மூலம் நிகழச் செய்யப்பட்ட சம்பவங்கள் என்ன செய்வதென்பதைக் காணும்படி நமக்கு உதவி செய்யக்கூடும். நம்மை வழிநடத்துவதில் தேவதூதர்கள் பங்குகொள்ளலாம், அல்லது பரிசுத்த ஆவியின்மூலம் நாம் வழிநடத்துதலைப் பெறலாம். (எபிரெயர் 1:14)—10/15, பக்கம் 21.

◻ நைஸியாவில் பொ.ச. 325-ல் நடந்த ஆலோசனை சபை திரித்துவக் கோட்பாட்டை நிலைநாட்டவோ உறுதிப்படுத்தவோ செய்ததா?

இல்லை, நைஸியா ஆலோசனை சபை குமாரனை பிதாவுடன் “ஒரே தன்மையுடையவர்” என பிதாவோடு சமப்படுத்த மாத்திரமே செய்தது. பிதாவும், குமாரனும், பரிசுத்த ஆவியும் ஆகிய ஒவ்வொருவரும் உண்மையானக் கடவுள்—ஒரே கடவுளில் மூவர்—என்ற இந்த எண்ணம் அந்த ஆலோசனை சபையாலோ முந்தின சர்ச் பிரமுகர்களாலோ தொடங்கி வைக்கப்படவில்லை.—11/1, பக்கம் 20.

◻ யோபு தான் வாழ்ந்த காலத்தின்போது யெகோவாவுக்கு உண்மையுள்ளவனாக நிலைத்திருந்த ஒரே மனிதனா? (யோபு 1:8)

இல்லை, எலிகூ கடவுளால் ஏற்கப்பட்டவனென யோபின் புத்தகம்தானே குறிப்பிடுகிறது. மேலும், யோபு வாழ்ந்த காலத்தின்போது, எகிப்தில் பல இஸ்ரவேலர் வாழ்ந்துகொண்டிருந்தனர், அவர்கள் எல்லாரும் கடவுளுக்கு உண்மையற்றவர்களாயும் ஏற்கத்தகாதவர்களாயும் இருந்தார்கள் என்று நினைப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.—11/1, பக்கம் 31.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்