கிலியட் பள்ளி—50 வருடங்களானது, தொடர்ந்து செழித்தோங்குகிறது!
“இராஜ்யம் சம்பந்தமான சாட்சி பேரளவில் கொடுக்கப்பட்டிராத இடங்கள் அநேகம் இருக்கின்றன,” என்று N. H. நார், பள்ளியின் முதல் நாள் பிப்ரவரி 1, 1943-ல், கிலியடின் முதலாம் வகுப்பினரிடம் சொன்னார். அவர் தொடர்ந்து சொன்னார்: “பிராந்தியத்தில் அதிக வேலையாட்கள் இருந்தால், நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் அதிக ஜனங்களைச் சென்றடையலாம். கர்த்தரின் தகுதியற்ற தயவினால், அங்கு அதிகமானோர் இருப்பார்கள்.”
மேலும் அங்கு அதிக வேலையாட்கள் இருந்திருக்கிறார்கள்—லட்சக்கணக்கில் அதிகமாக! இராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை, 1943-ல் 54 நாடுகளில் 1,29,070-லிருந்து, 1992-ல் 229 நாடுகளில் 44,72,787 ஆக அதிகரித்திருக்கிறது! கிலியட் பள்ளி, இந்த அதிகரிப்பைக் கொடுக்கும் சாட்சிவேலைக்கு முக்கிய பங்கை வகித்தது. இது, 50 வருடங்களுக்குப் பின்பு, உலகப் பிராந்தியத்தில் எங்கெல்லாம் மிஷனரி ஊழியர்களின் தேவையிருக்கிறதோ அங்கெல்லாம் அவர்களைச் சேவைசெய்ய அனுப்ப பயிற்றுவிப்பதில், இன்னும் தொடர்ந்து முக்கியப் பங்கை வகிக்கிறது.
மார்ச் 7, 1993-ல், நியூ ஜெர்சியிலுள்ள, ஜெர்சி நகர அசெம்பிளி மன்றத்தில், 94-ம் வகுப்பின் பட்டமளிப்புக்குக் கூடின ஐ.மா. பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களும், அழைக்கப்பட்ட விருந்தினர்களும், 4,798 பேராயிருந்தனர். இந்த நிச்சயமான விசேஷித்த நிகழ்ச்சி, கிலியட் பள்ளியின் 50 வருடங்களைப் பின்னோக்கிப் பார்க்க ஒரு வாய்ப்பையும் தந்தது. இந்த நிகழ்ச்சிநிரலைப்பற்றி கொஞ்சத்தை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா?
ஆரம்பப் பாடலுக்குப் பின்பு, நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஜார்ஜ் D. கேங்கஸ், உருக்கமான ஒரு ஜெபத்தைச் செய்தார். அதன்பிறகு, அக்கிராசனர் கேரி W. பார்பர், அறிமுக குறிப்புகள் சொன்னார். இதன்பின், பட்டதாரிகள்—கூடியிருந்த அனைவருங்கூட—ஒரு தொடர்வரிசையான சிறு பேச்சுகளுக்குக் கவனத்தோடு செவிசாய்த்தனர்.
ராபர்ட் W. வாலன், “நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை,” என்ற தலைப்பில் முதலாவது பேசினார். மிதமான குரலில் அவர் சொன்னார்: ‘வரும்சில நாட்களில், உங்கள் வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் நடக்கப்போகின்றன, அப்போது, ஓ, இவ்வளவு தனிமையிலா, குடும்பத்திலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் இவ்வளவு தூரத்திலா என்று நீங்கள் உணர்வீர்கள்.’ அப்படியென்றால், “நீங்கள் ஒருபோதும் தனிமையில் இல்லை,” என்று எப்படிச் சொல்லப்படலாம்? அவர் விளக்கினார்: ‘ஏனென்றால், உங்களனைவருக்கும் இருக்கப்போவது, யெகோவா தேவனோடு உடனடித் தொடர்புகொள்ளும் வாய்ப்பு.’ அவர் ஜெப சிலாக்கியத்தை நெஞ்சார நேசிக்கும்படியும் அதைத் தினந்தோறும் பயன்படுத்தும்படியும் பட்டதாரிகளைத் துரிதப்படுத்தினார். அப்படிச்செய்தால், இயேசுவைப்போல், அவர்கள் இவ்வாறு சொல்ல முடியும், “நான் தனித்திரேன்.” (யோவான் 16:32) இந்த வார்த்தைகள் பட்டதாரிகளுக்கு எவ்வளவு உற்சாகம் தருபவையாய் இருந்தன!
“உங்கள் நம்பிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள்,” என்ற (மார்ச் 7-ன் தின வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட) தலைப்பை விளக்கியுரைப்பவராக, நிர்வாகக் குழுவைச் சேர்ந்த லைமன் A. சுவிங்கள், சகிப்புத்தன்மை, நம்பிக்கை ஆகிய இரண்டு குணங்களின் தேவையைப்பற்றி பேசினார். ‘கிறிஸ்தவர்களுக்கு ஏன் சகிப்புத்தன்மை தேவை என்பதற்கு, நிந்தை, பகை, வெறுப்பு, சிறைவாசம், ஏன் சாவும் காரணங்களாகும்,’ என்று அவர் சொன்னார். ‘தேவைப்பட்ட காலங்களில் யெகோவாவின் உண்மையான சாட்சிகள் எடுத்துப் பயன்படுத்தும் இந்த இணையற்ற வல்லமைக்கு வரையறை ஏதுமில்லை. இது நிச்சயமாகவே விசேஷமாகப் பட்டதாரிகளாகிய உங்களுக்கு,’ உறுதியளிப்பதாய் இருக்கிறது. நம்பிக்கையைப்பற்றி என்ன? ‘நம்பிக்கை, தவிர்க்கமுடியாதது,’ என்று அவர் விளக்கினார். ‘ஒரு தலைக்கவசம் அதை அணிந்திருப்பவரின் தலையைக் காப்பதுபோல், இரட்சிப்பின் நம்பிக்கை, கிறிஸ்தவரின் மன சக்திகளைப் பாதுகாத்து, ஆபத்திலிருந்து காப்பாற்றும், இது அவரை உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்ள உதவும்.’—1 தெசலோனிக்கேயர் 5:8.
அடுத்தப் பேச்சாளர், ரால்ஃப் E. வால்ஸ், ஓர் ஆவலைத்தூண்டும் தலைப்பைத் தேர்ந்தெடுத்தார், “‘விசாலமான இடத்தின்’ பாதுகாப்பிற்குள் நாம் எப்படி வருவது?” இந்த ‘விசாலமான இடம்’ என்ன? (சங்கீதம் 18:19) “மனதின் அமைதியையும் இருதயத்தின் பாதுகாப்பையும் கொண்டுவரும் ஒரு விடுதலையாக்கப்பட்ட நிலை” என்று பேச்சாளர் விளக்கினார். எதிலிருந்து நமக்கு விடுதலை தேவை? ‘உங்களிடமிருந்தே—உங்களுடைய சொந்த தவறுகளிலிருந்தே.’ அவர் கூடுதலாகச் சொன்னார்: ‘மேலும் சாத்தானால் முடுக்கிவிடப்படும் வெளிப்புற சூழ்நிலைகளிலிருந்தும் விடுதலையாக்கப்படவேண்டும்.’ (சங்கீதம் 118:5) ஒரு விசாலமான இடத்தின் பாதுகாப்பிற்கு நாம் எப்படித் தப்பிவரலாம்? ‘நாம் செய்வதில் எல்லாம், யெகோவாவின் கட்டளைகளைத் தேடிப்பின்பற்றுவதன்மூலமும், நம்முடைய எல்லா கவலைகளிலும் விசுவாசத்தோடு யெகோவாவிடம் மன்றாடுவதன்மூலமும்.’
“என்ன காத்திருக்கிறது?” என்பதுதான் டான் A. ஆடம்ஸ் தேர்ந்தெடுத்தப் பொருள். மேலும் புதிய மிஷனரிகளுக்கு என்னதான் காத்துக்கொண்டிருந்தது? அனுசரித்துப் போகவேண்டிய காலம், என்று அவர் விளக்கினார். “உங்களுக்கு முன்பு அநேக ஆசீர்வாதங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.” ஓர் உதாரணமாக, அவர் இரண்டு புதிய மிஷனரிகளைப்பற்றி சொன்னார், அவர்கள் தங்களுடைய நியமிப்பில் பழக்கமடைந்தபின்பு, எழுதினார்கள்: “ஊழியத்தில் இதுவரை அனுபவித்ததில் மிகச்சிறந்த நாளை நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள், அப்படித்தான் ஒவ்வொரு நாளும் இருக்கிறது. நாங்கள் கொண்டுபோக முடிந்த பிரசுரங்களைவிட அதிகமான பிரசுரங்கள் எங்களுக்கு எப்போதும் தேவைப்படுகின்றன, மேலும் மக்கள் படிப்புகளுக்காகக் கேட்டவண்ணமே இருக்கிறார்கள்.” பேச்சாளர், பட்டதாரிகளின் குடும்பத்தினரையும் நண்பர்களையும் கருத்தில்கொண்டு சில குறிப்புகளைச் சொன்னார்: ‘நீங்கள் இந்தப் பட்டதாரிகளைக்குறித்துக் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. நீங்கள் உற்சாகமளிக்கும் வார்த்தைகளை எழுதுவதன்மூலம் அவர்களுக்கு உதவிசெய்யலாம்.’—நீதிமொழிகள் 25:25.
பள்ளியின் போதனையாளர்கள் அடுத்துப் பேசினர். ஜேக் D. ரெட்ஃபர்ட், “எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்,” என்ற தலைப்பைத் தெரிந்தெடுத்தார். மக்களோடு ஒத்துவாழக் கற்றுக்கொள்வதே பட்டதாரிகள் எதிர்ப்படும் சவால்களில் ஒன்று என்று அவர் விளக்கினார். எது உதவக்கூடும்? “அவர்களுடைய குறைகளைக் கண்டுகொள்ளாதீர்கள். மற்றவர்களிடமிருந்து அதிகத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்களுக்கு வரவேண்டியது என்று நீங்கள் கருதும் முழுப்பங்கும் வரவேண்டுமென்று எப்போதும் எதிர்பார்க்காதீர்கள். மற்றவர்களின் அபூரணத்தைச் சிறிது பொறுத்துக்கொள்ளுங்கள், இந்தத் தயவான போக்கு, நீங்கள் புரிந்துசெயல்பட உங்களுக்கு உதவிசெய்யும். மற்றவர்களோடு புரிந்துசெயல்பட முடியும் உங்கள் திறமை, உங்களுடைய முதிர்ச்சியின் அளவுகோல் ஆகும்.” (நீதிமொழிகள் 17:9) இந்த ஞானமான ஆலோசனையைப் பொருத்திப்பிரயோகிப்பது, ஓர் அந்நிய நாட்டில் தாங்கள் மிஷனரிகளாக இருப்பதற்குத் தேவையான வெற்றிதரும் சரிப்படுத்துதலைச் செய்ய பட்டதாரிகளுக்கு உதவிசெய்யும்!
“இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்,” என்று 2 கொரிந்தியர் 4:7 சொல்கிறது. யூலிசிஸ் V. கிளாஸ், கிலியட் பள்ளியின் பதிவாளர், “உங்களுடைய நிரூபிக்கப்பட்ட, உண்மையுள்ள சகோதரர்களை நம்புங்கள்,” என்ற தலைப்பில் விரிவுபடுத்தியபோது, இந்த வசனத்தின்பேரில் குறிப்புச் சொன்னார். “மண்பாண்டங்கள்” யாவை? “இவை அபூரண மனிதர்களாக நம்மை குறிக்கவேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார். ‘பொக்கிஷம்’ எது? “அது நம்முடைய கிறிஸ்தவ ஊழியம்,” என்று அவர் விளக்கினார். (2 கொரிந்தியர் 4:1) இந்தப் பொக்கிஷத்தைக்கொண்டு என்ன செய்யப்படவேண்டும்? “நமக்கு யெகோவா கொடுத்திருக்கும் பொக்கிஷம் சேமித்துவைக்கப்படவேண்டிய ஒன்றல்ல. எனவே, பிரியமான, வருங்கால மிஷனரிகளே, நீங்கள் எங்குப் போனாலும் அங்கு அந்தப் பொக்கிஷத்தைப் பகிர்ந்துகொடுங்கள், அதை எப்படிப் பகிர்ந்துகொடுப்பதென்று மற்றவர்களுக்கும் கற்பியுங்கள்.”
ஆல்பர்ட் D. ஷ்ரோடர் பேச ஆரம்பித்தபோது, பழங்கால நாட்ட உணர்வு அங்கு இருந்தது, ஏனென்றால் கிலியட் பள்ளி ஆரம்பிக்கப்பட்டபோது அவர் தான் அதன் பதிவாளராக இருந்தார். “தேவராஜ்ய பயிற்சியின் அரை நூற்றாண்டு,” என்பதுதான் அவருடைய பொருள். “பலன்தரும் பயிற்சியை எப்படித் தருவது என்று யெகோவாவுக்குத் தெரியும், இதை அவர் செய்தும் இருக்கிறார்,” என அவர் சொன்னார். எப்படி? சகோதரர் ஷ்ரோடர், 50 வருடங்களுக்கு முன்பாக நிறுவப்பட்ட இரண்டு பள்ளிகளிலிருந்து—தேவராஜ்ய ஊழியப் பள்ளி, கிலியட் பள்ளி—பெறப்பட்ட பயிற்சியை மேற்கோள் காட்டினார். திருத்தமான அறிவைத் தருவதில் ஒரு மதிப்புமிக்க கருவி, புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation) என்று அவர் குறிப்பிட்டார். அவர் பட்டதாரிகளுக்கு இவ்வாறு நம்பிக்கையூட்டினார்: “சங்கம், யெகோவாவின் நோக்கங்களைப்பற்றிய திருத்தமான அறிவினால் உங்களைத் தொடர்ந்து நன்றாகப் போஷிக்கும் என்ற திட நம்பிக்கையோடு நீங்கள் உங்களுடைய அயல்நாட்டு நியமிப்புகளுக்குப் போகலாம்.”
மில்டன் G. ஹென்ஷல், உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி ஆஃப் பெனிசில்வேனியாவின் தலைவர் “முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்கள்,” என்ற தலைப்பில் பேசினார். சகோதரர் ஹென்ஷல், 1943-ன் வருடாந்தர வசனத்திலிருந்து அவருடைய தலைப்பை எடுத்திருந்தார்: “நம்மீது அன்புவைத்தவரால் முற்றும் ஜெயங்கொள்ளுகிறோம்.” (ரோமர் 8:37, கிங் ஜேம்ஸ் வெர்ஷன்) இது மிகப்பொருத்தமான வருடாந்தர வசனமாக இருந்தது, அவர் விளக்கினார், ஏனென்றால் இரண்டாம் உலக யுத்தத்தின் மத்தியில் பல நாடுகளில் நம் சகோதரர்கள் அதிகத் துன்புறுத்தலை அனுபவித்தனர். சகோதரர் ஹென்ஷல் அந்த வருடாந்தர வசனத்தைக் கலந்தாலோசித்த உவாட்ச்டவர் இதழிலிருந்து சில பகுதிகளை வாசித்து, பின்பு விளக்கினார்: “இந்த உவாட்ச்டவர் கட்டுரை [ஜனவரி 15, 1943], முதல் கிலியட் வகுப்பினரினால் பிப்ரவரி மாதம் படிக்கப்பட்டது, இது என்ன வரப்போகிறது என்பதற்கு அவர்களைத் தயார்செய்தது.” கடந்த 50 வருடங்களுக்கு மேலாகப் பட்டதாரிகளில் பலர், தங்களை ஜெயங்கொண்டவர்களாக நிரூபித்திருக்கின்றனர், என்று அவர் விளக்கினார். தொண்ணூற்று நான்காவது வகுப்பைப்பற்றி என்ன? “யெகோவாவிடம் நெருங்கியிருங்கள், அவருடைய அன்பிலும் நெருங்கியிருங்கள், உங்கள் வெற்றி நிச்சயம்.”
காலை பேச்சுகளைப் பின்தொடர்ந்து, பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட சில வாழ்த்துக்களை அக்கிராசனர் பகிர்ந்துகொண்டார். பின்பு 24 திருமணமான தம்பதிகள் ஆவலோடு காத்திருந்த நேரம்—பட்டங்கள் கொடுக்கப்படும் நேரம் வந்தது. ஏன், கிலியட் மாணவர்கள் இப்போது முறைப்படியான கிலியட் பட்டதாரிகள்! அவர்கள் 5 நாடுகளிலிருந்து வந்திருந்தனர், ஆனால் அவர்களுடைய நியமிப்புகளோ, அவர்களை ஹாங்காங், தைவான், மொஸாம்பிக், மேலும் கிழக்கு ஐரோப்பப் பகுதிகள் உட்பட, 17 தேசங்களுக்கு கொண்டுசெல்லும்.
இடைவேளைக்குப் பிறகு, ராபர்ட் L. பட்லரால் நடத்தப்பட்ட சுருக்கமான உவாட்ச்டவர் படிப்போடு பிற்பகல் நிகழ்ச்சி ஆரம்பித்தது. பின்பு பட்டதாரிகள், நியூ யார்க், வால்கில் அருகில், சாட்சிகொடுத்தபோது அவர்கள் அனுபவித்த முனைப்பான அனுபவங்களில் சிலவற்றை மறுபடியும் நடித்துக்காண்பித்தனர். சந்தேகமில்லாமலே, அவர்களைக் கிலியடுக்கு வரச்செய்த விஷயங்களில் ஒன்றை நிகழ்ச்சிநிரல் பிரதிபலித்தது—வெளி ஊழியத்திற்கான அவர்களுடைய ஆழ்ந்த அன்பு.
மாணவர்களின் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கிலியட் பள்ளியின் 50 வருட நிறைவு ஏதேனும் விசேஷித்த நிகழ்ச்சியைக் கொண்டிருக்கும் என பார்வையாளர்களில் அநேகர் ஆவலோடு எதிர்பார்த்தனர். அவர்கள் ஏமாற்றமடையவில்லை!—“கிலியட் பள்ளியின் 50 வருடங்களைப் பின்னோக்கிப் பார்த்தல்,” என்ற உடன்கொடுக்கப்பட்டுள்ள பெட்டியைப் பார்க்கவும்.
ஐம்பது வருடங்களுக்கு முன்பு, சகோதரர் நார், தான் விசுவாசமும் கூர்நோக்குமுள்ள ஒரு மனிதர் என்பதைச் செயல்களின்மூலம் மெய்ப்பித்தார். கிலியட் பள்ளி வெற்றிவாகைசூடும் என்ற தன்னுடைய தளராத நம்பிக்கையை முதல் வகுப்பினரிடம் தன்னுடைய ஆரம்ப பேச்சில் அவர் இவ்வாறு சொன்னபோது வெளிக்காட்டினார்: “அதனுடைய பெயருக்குப் பொருத்தமாக, ஒரு ‘சாட்சிக் குவியல்’ இந்த இடத்திலிருந்து உலகின் எல்லாப் பாகங்களுக்கும் போகும்; இப்படிப்பட்ட சாட்சி, என்றும் அழியாது நிலைநிற்கும் கடவுளுடைய மகிமையின் நினைவுச்சின்னமாக இருக்கும். நீங்கள், நியமிக்கப்பட்ட ஊழியக்காரர்களாக, மகா உன்னதமானவரில் உங்களுடைய முழு நம்பிக்கையையும் வைத்து, தேவையான சமயங்களில் எல்லாம் அவர் உங்களைப் பலப்படுத்தி, வழிநடத்துவார் என்று அறிந்திருப்பீர்கள்; மேலும், அவர் ஆசீர்வாதத்தின் கடவுள் என்றும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.”a
ஐம்பது வருடங்கள் கழிந்தும், கிலியட் பள்ளி இன்னும் தொடர்ந்து செழித்தோங்குகிறது! இப்போது 94-ம் வகுப்பின் பட்டதாரிகள், இவர்களுக்கு முன்பு சென்ற 6,500-க்கும் மேலான பட்டதாரிகளைப் பின்தொடரும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கின்றனர். இவர்கள், யெகோவா தேவனின் மகிமைக்கு நினைவுச்சின்னமாக நிலைநிற்கும் ‘சாட்சிக் குவியலை’ குவிப்பதில் தங்களுடைய பங்கைச் செய்து, தங்கள் முழு நம்பிக்கையையும் மகா உன்னதமானவரின் மேல் வைப்பார்களாக.
[அடிக்குறிப்புகள்]
a எபிரெயுவில் “கிலியட்” என்ற வார்த்தைக்கு, “சாட்சிக் குவியல்” என்று அர்த்தம்.—ஆதியாகமம் 31:47, 48.
[பக்கம் 25-ன் பெட்டி]
வகுப்புப் புள்ளிவிவரங்கள்
மாணவர்களின் மொத்த எண்ணிக்கை: 48
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 5
அனுப்பப்பட்ட தேசங்களின் எண்ணிக்கை: 17
சராசரி வயது: 32
சத்தியத்தில் சராசரி வருடங்கள்: 15.3
முழுநேர ஊழியத்தில் சராசரி வருடங்கள்: 9.6
[பக்கம் 26, 27-ன் பெட்டி]
கிலியட் பள்ளியின் 50 வருடங்களைப் பின்னோக்கிப் பார்த்தல்
கிலியடின் சரித்திரத்தை, அதை வாழ்ந்தவர்கள்—முன்னாள் பட்டதாரிகள், போதனையாளர்கள், மேலும் அதை ஒழுங்குப்படுத்த உதவிசெய்த மற்றவர்கள்—ஆகியோரின் அனுபவங்களின்மூலம் பின்னோக்கிப் பார்ப்பதைவிட வேறு என்ன சிறந்த வழி இருக்கமுடியும்? தியடோர் ஜெர்ரஸால் நடத்தப்பட்ட, “கிலியட் பள்ளியின் 50 வருடங்களைப் பின்னோக்கிப் பார்த்தல்,” என்ற பகுதிக்குச் செவிசாய்ப்பதில் வந்திருந்தவர்கள் அதிக மகிழ்ச்சியடைந்தனர்.
பள்ளியை நிறுவும்படிச் செய்த சூழ்நிலைகள் யாவை? பள்ளியை ஒழுங்கமைக்க, அவருக்கும் மற்ற இரண்டு போதனையாளர்களுக்கும் நான்கு மாதங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தன என்று விளக்கினார் சகோதரர் ஷ்ரோடர். “ஆனால், பிப்ரவரி 1, 1943, திங்கட்கிழமை, நாங்கள் பிரதிஷ்டைக்குத் தயாரானோம்.”
இது அனுப்பப்பட்ட முதலாம் மிஷனரிகளுக்கு என்னவாக இருந்தது? சகோதரர் ஹென்ஷல் ஞாபகப்படுத்தினார்: “அவர்கள், அவர்களோடு எடுத்துச்செல்ல விரும்பிய உடைமைகள் அனைத்தையும், சங்கத்தின் சரக்கனுப்பும் இலாகா, மரக்கட்டைப் பெட்டிகளில் வைத்திருந்தது. பெட்டிகள் சேரவேண்டிய இடத்தை வந்தடைந்தவுடன், அவர்கள் அதை ஜாக்கிரதையாய்த் திறந்து, அவர்களுடைய சொந்த உடைமைகளை எடுத்துக்கொண்டனர். ஆனால் அதற்குப்பின்பு மரப்பெட்டிகளைத் தட்டுமுட்டு சாமான்கள் (ஃபர்னிச்சர்ஸ்) செய்ய பயன்படுத்துவர்.” அவர் குறிப்பிட்டார், காலப்போக்கில் நடுத்தர வசதியுள்ள மிஷனரி இல்லங்களைச் சங்கம் ஏற்படுத்தித் தந்தது.
நிகழ்ச்சிநிரலில் அடுத்து, கிலியடின் முன்னாள் வகுப்புகளின் சில பட்டதாரிகள், இவர்கள் இப்போது ஐ.மா. பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள், தங்களுடைய நினைவுகளையும், உணர்ச்சிகளையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். அவர்களுடைய குறிப்புகள், வந்திருந்த அனைவரின் இருதயங்களையும் உண்மையில் கவர்ந்தன.
“முதல் வகுப்பிற்கு வரும்படி அழைப்பிதழை நான் பெற்ற பின்புதான், என் அம்மாவுக்குப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அவள் 16 வயதிலிருந்தே பயனியர் ஊழியம் செய்துவந்தவளாக இருந்ததால், அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படி என்னை அதிகமாக வற்புறுத்தினாள். எனவே மன சஞ்சலத்தோடும், யெகோவாவின்மேல் நம்பிக்கையோடும், நான் தென் லென்சிங்-க்குப் பிரயாணம்செய்தேன். கிலியட் பயிற்சியை நான் முழுவதும் அனுபவித்தேன், மிக ஆழமாகப் போற்றினேன். என் பட்டமளிப்பிற்குப் பின் சில காலங்களில் என் தாய் அவளுடைய பூமிக்குரிய வாழ்க்கையை முடித்தாள்.”—ஷார்லட் ஷ்ரோடர், மெக்ஸிகோவிலும் எல் சால்வடாரிலும் ஊழியம்செய்தவள்.
“நான் இருந்த பூமியின் பகுதியில், யெகோவா என்னை ஏற்கெனவே பராமரித்து வந்ததால், நான் எங்குப் போனாலும் அவ்விடம் அவருடைய பூமிதான் என்றும், மேலும் அவர் என்னைப் பராமரிப்பார் என்றும் நான் திட்டமிட்டுக்கொண்டேன். எனவே, முதல் வகுப்பில் சேருவதற்கான அழைப்பைப் பெறுவதில் அதிக மகிழ்ச்சியடைந்தேன்.”—ஜூல்ய ஒய்ல்ட்மன், மெக்ஸிகோவிலும் எல் சால்வடாரிலும் ஊழியம் செய்தவள்.
“அது நன்றாக இருந்தது! ஒவ்வொரு கதவண்டையிலும் நாங்கள் பேச முடிந்தது. முதல் மாதத்தில், நான் 107 புத்தகங்களைக் கொடுத்தேன், 19 பைபிள் படிப்புகளை நடத்தினேன். இரண்டாம் மாதத்தில், 28 பைபிள் படிப்புகளைக் கொண்டிருந்தேன். நிச்சயமாகவே, சில விஷயங்களில் நாங்கள் பழக்கமடைய வேண்டியதிருந்தது—வெப்பம், ஈரப்பதம், மூட்டைப்பூச்சிகள் போன்றவை. ஆனால், அங்கு இருப்பதுதானே நல்ல சிலாக்கியமாய் இருந்தது. அது நான் எப்போதும் நெஞ்சார நேசிக்கும் ஒன்றாகும்.”—மேரி ஆடம்ஸ், இரண்டாவது வகுப்பு, அவளுடைய கியூபா நியமிப்பைப்பற்றி.
“அலாஸ்காவில் தட்பவெப்பநிலை நாங்கள் எதிர்ப்படவேண்டிய பெரிய தடைகளில் ஒன்றாகும். வடக்கில் அது மிக அதிக குளிராக இருந்தது, 60 டிகிரியிலிருந்து பூஜ்யம் பாரென்ஹீட் அல்லது இதைவிட குளிராக இருந்தது. தென்கிழக்கு அலாஸ்காவில் உள்ள இந்திய கிராமங்களும், சிறிய தனிப்பட்ட இடங்களும் படகின்மூலமோ அல்லது விமானத்தின்மூலமோ சென்றெட்டப்பட்டன.”—ஜான் எரிக்கெட்டி, மூன்றாம் வகுப்பு.
“என்னைப் பொருத்தவரை, கிலியட் என்பது, ஆவிக்குரிய வகையில் நம்மை பலப்படுத்தி, ஓர் ஆச்சரியமான ஜீவ பாதையைக் காண்பிக்க, யெகோவாவிடமிருந்து அவருடைய பூமிக்குரிய அமைப்பின்மூலம் வரும் அழைப்பாகும்.”—மில்ட்ரட் பார், 11-ம் வகுப்பு, அயர்லாந்தில் ஊழியம்செய்தவள்.
அதிகப் பெருமகிழ்ச்சிதரும் அனுபவங்கள் தொடர்ந்தன—லூஸில் ஹென்ஷல் (14-ம் வகுப்பு, வெனிசுவேலாவில் ஊழியம்செய்தவள்), மார்காரேட்ட கிளைன் (20-ம் வகுப்பு, பொலிவியாவில் ஊழியம்செய்தவள்), லூஸில் கோல்ட்ரப் (24-ம் வகுப்பு, பெருவில் சேவைசெய்தவள்), லரேன் வாலன் (27-ம் வகுப்பு, பிரேஸிலில் ஊழியம்செய்தவள்), வில்லியம் மற்றும் சேன்ர மெலன்ஃபான்ட் (34-ம் வகுப்பு, மொராக்கோவில் சேவைசெய்தவர்கள்), கெரட் லூச் (41-ம் வகுப்பு, ஆஸ்திரியாவில் சேவைசெய்தவர்), டேவிட் ஸ்பிலேன் (42-ம் வகுப்பு, செனிகலில் சேவைசெய்தவர்).
போதனையாளர்களாகச் சேவைசெய்த சகோதரர்களைப்பற்றி என்ன? அவர்களில் பலர் பேட்டிகாணப்பட்டனர்—ரசல் குர்சென், கார்ல் ஆடம்ஸ், ஹெரல்ட் ஜேக்சன், ஃபிரட் ரஸ்க், ஹேரீ பெலோயன், ஜேக் ரெட்ஃபர்ட், யூலிசிஸ் கிளாஸ் ஆகியோர். அவர்கள் தங்களுடைய சிலாக்கியம், எப்படி இந்நாள் வரை அவர்கள்மீது செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது என்பதைப் பிரதிபலித்தனர்.
கிலியட் பயிற்றுவிப்பைப் பெற்ற மிஷனரிகளின் வினைபயனைக் குறித்து, சிலிர்க்கவைக்கும் நற்சான்று, ஜப்பானில் சேவைசெய்த லாயிட் பேரியால் கொடுக்கப்பட்டது. அங்கு, 1949-ல், 15 மிஷனரிகள் அனுப்பப்பட்டபோது, முழு ஜப்பானிலும் 10 பிரஸ்தாபிகளுக்கும் குறைவான எண்ணிக்கைதான் இருந்தது. ஆனால், 44 வருடங்கள் கழிந்தபின், அந்த நாட்டில் 1,75,000 ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்! பின்பு பனாமாவில் 45 வருடங்களுக்கும் மேலாக இருந்து, ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறும்படி 125 நபர்களுக்கு உதவிசெய்த ஒரு மிஷனரி சகோதரியும் உட்பட, சத்தியத்திடம் வழிநடத்த உதவும் காரியத்தில், சில மிஷனரிகள் பெற்றிருந்த முனைப்பான வெற்றிகளை, ராபர்ட் வாலன் சொன்னார்.
பார்வையாளர்கள் மத்தியில் இருந்த எல்லா கிலியட் பட்டதாரிகளும் மேடைக்கு வரும்படி அழைக்கப்பட்டபோது, முழு நிகழ்ச்சியின் உச்சக்கட்டம் வந்தது. அது உண்மையிலேயே, ஓர் உளங்கனியச் செய்த நேரமாய் இருந்தது. ஒரு நிலையான நீர்த்தாரையாக சகோதரர்களும் சகோதரிகளும்—வருகை தந்திருந்த பட்டதாரிகளோடு பெத்தேல் குடும்பத்தில் 89 பேர்—இடைப்பாதைகளில் அணிவரிசையில் சென்று, படிகள் வழியாய் மேடைக்கு ஏறிப்போனார்கள். அவர்கள், பல வருடங்கள் போதனையாளர்களாகச் சேவைசெய்த சகோதரர்களாலும், பின்பு 94-ம் வகுப்பினராலும் சேர்ந்துகொள்ளப்பட்டனர்—மொத்தமாக ஏறக்குறைய 160 பேர்!
“அயல் நாடுகளுக்காக, மிஷனரிகளைப் பயிற்றுவிக்கும் கிலியட் பள்ளியின் உழைப்பு நிச்சயப் பலனைக் கொண்டிருக்கிறதா?,” சகோதரர் ஜெர்ரஸ் கேட்டார். “கடந்த 50 வருடங்களின் சான்று, ஓர் உறுதியான ஆம்தான்!”
[பக்கம் 25-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் பட்டம் பெறும் 94-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசைகள் முன்னிருந்து பின்நோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) டி லா கார்சா, C.; போர்க், E.; ஆர்யாகா, E.; ச்சு, E.; பர்விஸ், D.; ஃபாஸ்பெரி, A.; டெல்காடோ, A.; டிரஷ்ஷர், L.; (2) ஸ்காட், V.; ஃபிரிட்லண்ட், L.; கெட்டூலா, S.; கோப்லண்ட், D.; ஆர்யாகா, J.; டிடே, J.; ஓல்ஸன், E.; விடக்ரன், S.; (3) டெல்காடோ, F.; கீகன், S.; லேனனென், A.; ஃபின்யிகன், E.; ஃபாஸ்பெரி, F.; ஹால்புருக், J.; பர்க்லண்ட், A.; ஜோன்ஸ், P.; (4) உவாட்ஸன், B.; ஃபிரியாஸ், C.; ச்சு, B.; ஹால்புருக், J.; பர்விஸ், J.; ஃபின்யிகன், S.; ஜோன்ஸ், A.; கூச்ஷிய, M.; (5) ஸ்காட், G.; கோப்லண்ட், D.; டிரஷ்ஷர், B.; டி லா கார்சா, R.; லேனனென், I.; கீகன், D.; உவாட்ஸன், T.; கெட்டூலா, M.; (6) விடக்ரன், J.; போர்க், S.; கூச்ஷிய, L.; பர்க்லண்ட், A.; ஓல்ஸன், B.; ஃபிரியாஸ், J.; ஃபிரிட்லண்ட், T.; டிடே, P.;