உலகெங்கும் யெகோவாவின் சாட்சிகள்—பஹாமாஸ்
பஹாமாஸ் குடியரசு—3,000 தீவுகள் மற்றும் சிறு தீவுகளின் ஒரு கூட்டம்—ஃப்ளாரிடாவுக்கும் கியூபாவுக்கும் இடையே குறுக்காக 900 கிலோமீட்டர் மங்கலான நீல நிறக் கடலில் ஒரு பவழ மாலையைப் போல் அமைந்துள்ளது. அதன் 2,67,000 குடியிருப்பாளர்களில், வளர்ந்துகொண்டுவரும் ராஜ்ய அறிவிப்பாளர்களின் பல்லவி ஒன்றும் உள்ளது. அவர்களுடைய துதிப் பாடல், ஏசாயா 42:10-12-ஐ மனதிற்குக் கொண்டுவருகிறது: “சமுத்திரத்தில் யாத்திரை பண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள். . . . பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக. கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக.”
புதிய விசுவாசம் சவாலிடப்பட்டது
ஜூலை 1992-ல் ஓர் ஒழுங்கான பயனியர் (ஒரு முழுநேர ராஜ்ய பிரசங்கிப்பாளர்), வியாபாரத்தில் பழக்கப்பட்ட ஒருவருக்கு நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற பைபிள் படிப்பு உதவி புத்தகத்தை அளித்திருந்தார். அந்த மனிதன் அந்தப் புத்தகத்தைப் படித்தபின், ‘இந்த மதம் நான் ஆராய்ந்து பார்க்கவேண்டிய ஒன்று,’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். அடுத்த இரு ஞாயிற்றுக்கிழமைகள், யெகோவாவின் சாட்சிகளுடைய இரு வெவ்வேறு ராஜ்ய மன்றங்களில் அவர் கூட்டங்களுக்குச் சென்றார். அடுத்ததாக, அவரோடு ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், பைபிள் பாடங்கள் தொடங்கி ஆறே வாரங்களில், அவருடைய புதிய விசுவாசத்தைச் சோதிக்கும் சவால் ஒன்று எழும்பியது—பிறந்தநாள் கொண்டாட்டங்கள்.
இந்த வியாபாரியின் குடும்பம் அப்படிப்பட்ட கொண்டாட்டங்களில் அதிகமாக ஈடுபட்டிருந்தது; ஆனால் கடவுளுடைய வார்த்தையிடமான அன்பு தன்னுடைய பைபிள் பாடங்களைத் தொடரும்படி அந்த மனிதனைத் தூண்டியது. வேதப்பூர்வ சத்தியத்தைப் பற்றிய அவருடைய அறிவு அதிகரித்தபோது, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், உலகப்பிரகாரமான விடுமுறை நாட்கள், அவற்றினிடமாக யெகோவாவின் நோக்குநிலை ஆகியவற்றை பற்றிய அவருடைய புரிந்துகொள்ளுதலும் அதிகரித்தது.
தந்தைகளின் தினத்திற்காக இந்த மனிதனின் மனைவி ஒரு சமூகக் கூட்டுறவை ஒழுங்கமைத்தபோது, பண்பட்ட விதத்தில், அதற்குச் செல்ல மறுப்பு தெரிவித்தார். இருந்தாலும், அவர் இனிமேலும் தன்னிடம் அன்பைக் கொண்டில்லை என்றும், தன் மதத்தை அவளுக்கும் குடும்பத்திற்கும் மேலாக வைத்துக்கொண்டிருந்தார் என்றும் அவள் நினைத்தாள். தான் பைபிளிலிருந்து கற்றுக்கொண்டிருந்ததை பொருத்திப் பிரயோகிப்பது தன்னை ஒரு மேம்பட்ட கணவனாகவும் தகப்பனாகவும் மாற்ற உதவிசெய்துகொண்டிருக்கிறது என்று அவர் தயவாய் விளக்கினார். காலப்போக்கில், அவள் வேதப்பூர்வ சத்தியத்தினிடம் அவருடைய விருப்பத்திற்கான மதித்துணருதலில் முன்னேற்றமடைந்து, பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டாள். இப்போது அவர் தன் குடும்பத்திற்கு ஒரு பைபிள் படிப்பை நடத்துகிறார். கடந்த வருடத்தில், “தெய்வீக போதனை” மாவட்ட மாநாட்டில் அவர் என்னே ஒரு சந்தோஷத்தை அடைந்திருந்தார்! அவருடைய மனைவியும் மகளும் அங்கு வந்திருந்து, அவர் முழுக்காட்டுதல் பெறுவதைக் கண்டனர்.
குடியேறியவர்கள் புதிய பாட்டைக் கேட்கின்றனர்
ஹைதியிலிருந்து குடிபுகுந்த ஆயிரக்கணக்கானவர்கள் பஹாமிய சமுதாயத்திற்குள் ஒருங்கிணைந்துகொண்டிருக்கின்றனர். அவர்களும் ராஜ்ய சத்தியத்தின் புதிய பாட்டைக் கேட்க வேண்டும். இரண்டு ஹைதிய-அமெரிக்க தம்பதிகள் வந்திருப்பதற்காக பஹாமாஸிலுள்ள சாட்சிகள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். கிரான்டு பஹாமா மற்றும் அபாகோ தீவுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட ஹைதிய தொகுதிகளைப் பலப்படுத்த இந்த நபர்கள் உதவியிருக்கின்றனர்.
இராஜ்ய செய்தியில் அக்கறையுள்ள ஹைதியர்களுக்கு மேலுமான உதவியாக, பஹாமாஸில் நடத்தப்பட்ட முதல் க்ரியோல் மாவட்ட மாநாடு ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 1, 1993 வரை நிகழ்ந்தது. வந்திருந்தவர்களின் எண்ணிக்கை, புதிதாக ஒப்புக்கொடுக்கப்பட்ட மூவர் முழுக்காட்டப்பட்டதுடன் சேர்த்து 214-ஐ எட்டியது. பஹாமாஸில் சத்தியத்தைப் படித்த அநேக ஹைதியர்கள், அப்போதுமுதல் தங்கள் தாயக தீவிற்குத் திரும்பிச் சென்றிருக்கின்றனர்; அல்லது வேறு எங்காவது குடியேறும்படி சென்றிருக்கின்றனர்; யெகோவாவுக்குத் துதி பாடுவதில் உள்ளூர் சாட்சிகளின் குரல்களுடன் தங்களுடைய குரல்களையும் சேர்க்கும்படி அவ்வாறு செய்திருக்கின்றனர்.
[பக்கம் 8-ன் பெட்டி]
நாட்டு தகவல்கள்
1993 ஊழிய ஆண்டுa
சாட்சி கொடுப்பவர்களின் உச்ச எண்ணிக்கை: 1,294
விகிதம்: 1 சாட்சிக்கு 197
நினைவு ஆசரிப்பிற்கு வந்திருந்தோர்: 3,794
சராசரி பயனியர் பிரஸ்தாபிகள்: 186
சராசரி பைபிள் படிப்புகள்: 1,715
முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை: 79
சபைகளின் எண்ணிக்கை: 22
கிளை அலுவலகம்: நாஸா
[அடிக்குறிப்புகள்]
a கூடுதலான தகவலுக்கு, 1994 யெகோவாவின் சாட்சிகளுடைய நாட்காட்டியை (1994 Calendar of Jehovah’s Witnesses) பார்க்கவும்.
[பக்கம் 9-ன் படம்]
முதல் ராஜ்ய மன்றம், கிளை அலுவலகம் மற்றும் மிஷனரி இல்லத்துடன்
[பக்கம் 9-ன் படம்]
சாட்சிகள் வைராக்கியமாக நற்செய்தியை அறிவிக்கிறார்கள்
[பக்கம் 9-ன் படம்]
சுமார் 45 வருடங்களுக்குமுன் மில்டன் G. ஹென்ஷலும் நேதன் H. நாரும், நாஸாவிலுள்ள மிஷனரிகளுடன்
[பக்கம் 9-ன் படம்]
புதிய கிளை அலுவலகம், பிப்ரவரி 8, 1992-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது