தேவராஜ்ய செய்திகள்
இந்தியா: ஆகஸ்ட் மாதத்தில் 13,010 பிரஸ்தாபிகள் அறிக்கைசெய்ததோடு, இந்த ஊழிய ஆண்டில் நம்முடைய ஆறாவது உச்சநிலையை நாம் அனுபவித்து மகிழ்ந்தோம். அது இந்த ஆண்டின் எட்டு சதவீத மொத்த அதிகரிப்புக்கு வழிநடத்தியது. வருடாந்தர அறிக்கை தயார்செய்யப்பட்டபோது, அந்த ஊழிய ஆண்டின்போது 1,200 பேர் முழுக்காட்டப்பட்டிருந்ததைக் காண்பது அதிக உற்சாகமூட்டுவதாய் இருந்தது—கடந்த வருடத்தைவிட வியக்கத்தக்க 29% அதிகரிப்பு! செப்டம்பர் 1, 1993-லிருந்து 60 புதிய ஒழுங்கான பயனியர்கள் சேர்ந்திருப்பதுடன், நடவடிக்கை நிறைந்த மற்றொரு பலன்மிக்க ஆண்டை நாம் எதிர்பார்க்கலாம்.
பிரேஸில்: ஜூலை மாதத்தில் 3,48,634 பேர் அறிக்கைசெய்து, 1993 ஊழிய ஆண்டிற்கான பிரஸ்தாபிகளின் நான்காவது உச்சநிலையானது அடையப்பட்டது.