உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 10/1 பக். 3-4
  • பைபிள் அதன் உண்மை மதிப்பென்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் அதன் உண்மை மதிப்பென்ன?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • இதே தகவல்
  • வேதவாக்கியங்களெல்லாம் போதிப்பதற்கு பயனுள்ளவை
    நம் ராஜ்ய ஊழியம்—1995
  • பைபிள்—கடவுள் தந்த புத்தகம்
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • கடவுளைப் பிரியப்படுத்தும் உண்மையான போதனைகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • பைபிள்​—⁠கடவுள் தந்த புத்தகம்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 10/1 பக். 3-4

பைபிள் அதன் உண்மை மதிப்பென்ன?

“பைபிள் மனித அறிவுக்குப் புலப்படாதது, புரிந்துகொள்வதற்கு எழுதப்பட்ட ஒரு புத்தகம் அல்ல,” என்று ஒரு வீட்டுக்காரர் தெரிவிக்கிறார். மற்றொருவர் சொல்கிறார்: “பைபிள் ஒரு முக்கியமான புத்தகம் என்பது எனக்குத் தெரியும், ஆனால் எனக்கு அதைப்பற்றி அதிகம் தெரியாது. அதைப் புரிந்துகொள்வது கஷ்டம்.”

“அநேக கிறிஸ்தவர்களுக்கு . . . பைபிளைப் பற்றி அதிகம் தெரியாது,” என்பதாக தி டோரன்டோ ஸ்டார் குறிப்பிட்டது. கத்தோலிக்க பெண்மணி ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒரு பைபிளை வைத்திருப்பது, என்னை மனநிறைவாக உணரச்செய்கிறது. உள்ளார்ந்த சமாதானத்தை அது கொண்டுவருகிறது.” “அமைதியில்லாத கொந்தளிப்பான வாழ்க்கை என்னும் கடலினூடாக பாதுகாப்பான ஓரிடத்துக்கு ஒருவரை வழிநடத்திச் செல்லும் ஒரு திசைக்காட்டியைப் போல பைபிள் இருக்கிறது,” என்று ஒரு மீனவர் சொல்கிறார். முன்னர் இந்துவாக இருந்த ஒருவரின் வார்த்தைகளில், “பைபிள், கடவுளுடைய வார்த்தை, மனிதவர்க்கத்துக்கு ஒரு பரிசு, ஆன்மீக துயரங்களுக்கு ஒரு மருந்து.”

பைபிளின் உண்மையான மதிப்பின் பேரிலுள்ள கருத்துக்கள் அநேகமாயும் வித்தியாசப்பட்டவையாயும் இருக்கின்றன. ஆனால், அதன் உண்மை மதிப்பென்ன?

பைபிள் அதிமுக்கியமானதும் உள்ளதிலேயே மிகப் பரவலாக விநியோகிக்கப்படுவதுமான ஒரு புத்தகமாகும். மனிதன் அனுபவித்திருக்கும் அல்லது இனி எதிர்ப்படவிருக்கும் குழப்பமடையச் செய்கின்ற பெரும்பாலான பிரச்சினைகளுக்கு விடைகள் அதனுடைய பக்கங்களில் இருக்கின்றன. அதனுடைய புத்திமதியின் நடைமுறைப்பயன் ஒப்பற்றது. அது பரிந்துரை செய்யும் ஒழுக்கத் தராதரங்கள் விஞ்சமுடியாதவை. அதன் செய்தி ஆற்றல் மிகுந்ததாயும் பயனுள்ளதாயும் இருக்கிறது. ஒப்பிடமுடியாத மதிப்புள்ள இந்தப் புத்தகம் நம்முடைய புத்தக அலமாரியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு கருத்துள்ள கவனத்தையும் நுட்பமான ஆய்வையும் பெற தகுதியுள்ளதாய் இருக்கிறது.

பைபிள் முற்றிலும் திருத்தமானது, நம்பகமானது, அதிகாரப்பூர்வமானது என்ற முழு நம்பிக்கையுடன் அதை நாம் திறக்கலாம். அதில் பதிவுசெய்யப்பட்டுள்ள வரலாற்று சம்பவங்களை உலகியல் வரலாறு உறுதி செய்கிறது. திரும்பத் திரும்ப, புதைப் பொருள் ஆய்வு கண்டுபிடிப்புகள், பைபிள் உண்மை நிகழ்ச்சிகளோடு தொடர்புடையதாக இருப்பதையும் உண்மையே பேசுவதையும் நிலைநாட்டுகின்றன. சுமார் 40 பைபிள் எழுத்தாளர்களின் ஒளிவுமறைவற்றத்தன்மை, அவர்களை நேர்மையும் உத்தமுமான மனிதர் என்பதாக அடையாளங்காட்டுகிறது. பைபிளின் உள்ளான ஒத்திசைவு அது மனித மூலத்திலிருந்து வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதில் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவங்கள் உண்மையானவை. அது குறிப்பிட்டு பேசும் மக்கள் உண்மையானவர்கள். அது குறிப்பிடும் இடங்களும் இருப்பிடங்களும் உண்மையானவை. மேலுமாக, யெகோவா தேவனை பைபிளின் ஆசிரியராக மறுக்கமுடியாத விதத்தில் அடையாளங்காட்டும் குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசனங்களைப் பைபிள் கொண்டிருக்கிறது.—2 பேதுரு 1:21.

நம்முடைய மகத்தான போதகர் தம்முடைய சித்தத்தையும் நோக்கங்களையும் பற்றிய அறிவு அதை அறிய விரும்புகிறவர்களுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்படிப் பார்த்துக்கொண்டார். உண்மையில், எல்லா மனிதரும் தம்முடைய வார்த்தையைப் படித்து, “சத்தியத்தை அறிகிற அறிவை அடைய” வேண்டும் என்பதே தம்முடைய சித்தம் என தெளிவான சொற்களில் யெகோவா நமக்குச் சொல்கிறார். (1 தீமோத்தேயு 2:3, 4; நீதிமொழிகள் 1:5, 20-33) இது நாம் நம்முடைய வாழ்நாட்காலத்தில் செய்யக்கூடிய அதிமுக்கியமான காரியங்களில் ஒன்றாகும். இது நாம் எதிர்ப்பட்டே தீரவேண்டிய ஒரு சவாலாகும். பண்டையக் கிறிஸ்தவர்கள் இதைப் புரிந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் பின்வருமாறு சொல்ல தூண்டப்பட்டார்: ‘அதிமுக்கியமான காரியங்களை நீங்கள் நிச்சயப்படுத்திக் கொள்ளத்தக்கதாக, உங்கள் அன்பானது திருத்தமான அறிவிலும் எல்லா பகுத்துணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும் வேண்டுமென்று நான் தொடர்ந்து வேண்டுதல் செய்கிறேன்.’—பிலிப்பியர் 1:9, 10, NW; கொலோசெயர் 1:9, 10.

படைப்பாளருடைய சித்தத்தையும் நோக்கத்தையும் மனித குடும்பத்துக்குத் தெரியப்படுத்துவதற்கு முக்கியமான வழிமூலமாக பைபிள் இருக்கிறது, அந்த நோக்கத்திற்குள் நாம் தனிப்பட்டவர்களாக எவ்வாறு பொருந்துகிறோம் என்பதை அது விளக்குகிறது. அதில் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான மனக்காட்சியை அது கொடுக்கிறது. பைபிள் சரியான கோட்பாடுகளை விவரித்துக் கூறி, நாம் எதை நம்பவேண்டும் அல்லது நம்பக் கூடாது என்பதைப் பற்றியதில் நம்மைச் சீர்திருத்துகிறது. (அப்போஸ்தலர் 17:11; 2 தீமோத்தேயு 3:16, 17) மனிதன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தைக்குரிய விதிமுறைகளை அளித்து வெற்றி மற்றும் மகிழ்ச்சியின் பாதையில் மனிதர்களை வழிநடத்துகிறது. (மத்தேயு, அதிகாரங்கள் 5 முதல் 7) கடவுளுடைய ராஜ்யமே எல்லா மனிதவர்க்கத்துக்கும் ஒரே நம்பிக்கை என்பதை வலியுறுத்தி அவருடைய அரசாங்கம் எவ்விதமாக அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தி அவருடைய அரசாட்சியை நியாயநிரூபணம் செய்வதற்குக் கருவியாக இருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. நமக்கு உயிரளித்தவராகிய யெகோவாவோடு நெருக்கமான அன்புள்ள உறவை அனுபவித்துக்களிக்க நாம் பின்தொடரவேண்டிய போக்கை பைபிள் விளக்குகிறது.

மேலுமாக, மனிதவர்க்கம் பெற்றுக்கொள்ளக்கூடிய மிகப் பெரிய பரிசுக்கு—பரிபூரண மனிதர்களாக ஒரு பரதீஸிய பூமியில் நித்திய வாழ்க்கைக்கு—உங்களை வழிநடத்தும் ஒரே புத்தகமாக பைபிள் இருக்கிறது. (ரோமர் 6:23) யெகோவாவின் ஒரே பேறான மகன் நமக்குச் சொல்லுகிறார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3) நிச்சயமாகவே நித்திய வாழ்க்கையின் பரிசை பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள இத்தகைய பெரும் மதிப்புவாய்ந்த ஒரு புத்தகம் நம்மைத் தூண்டுவிக்கவேண்டும். அடுத்தக் கட்டுரை காண்பிக்கப் போகிற வண்ணம், பைபிள் புரிந்துகொள்வதற்கு எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்