வேதவாக்கியங்களெல்லாம் போதிப்பதற்கு பயனுள்ளவை
1 பைபிளின் மதிப்பீடு பற்றிய கருத்துக்கள் அநேகமானவையாகவும் பலதரப்பட்டவையாகவும் இருக்கின்றன. எனினும் அதில் மனிதவர்க்கத்தின் சிக்கலான பிரச்சினைகளுக்கு பதில்களும் அதோடு வாழ்க்கையில் நம்முடைய தனிப்பட்ட போக்கிற்கு நம்பத்தக்க வழிகாட்டுதலும் இருக்கின்றன என்பதில் நாம் உறுதியாயிருக்கிறோம். (நீதி. 3:5, 6) அதன் ஆலோசனையின் ஞானம் ஒப்பற்றது. அது பரிந்துபேசும் ஒழுக்க தராதரங்கள் விஞ்சமுடியாதவை. அதன் செய்தி “இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிற” வலிமைமிக்கது. (எபி. 4:12) அதைக் கவனமாகக் கூர்ந்தாராய வேண்டியதன் தேவையைக் காண மற்றவர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்? புதிய உலக மொழிபெயர்ப்புடன் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? என்ற புத்தகத்தையோ அல்லது பழைய 192-பக்க பதிப்புகளில் ஒன்றையோ நவம்பரில் அளிக்கையில் பின்வரும் ஆலோசனைகளில் சிலவற்றை உபயோகிக்க நீங்கள் முயற்சிசெய்ய விரும்பலாம்.
2 அநேக ஆட்கள் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பெறுவதைக்குறித்து கவலைப்படுவதால் ஒருவேளை இந்த அணுகுமுறை அவர்களுடைய கவனத்தைக் கவரலாம்:
◼ “இந்நாட்களில் நான் பேசிய அநேக ஆட்கள் தங்களுடைய பண சம்பந்தப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவது குறித்து கவலைப்படுகிறார்கள். அநேகர் பொருள் சம்பந்தமான காரியங்களை முயன்றுபெறுவதில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள், இது அழுத்தத்தில் விளைவடைந்திருக்கிறது. இத்தகைய காரியங்களின் பேரில் அறிவுரையைப் பெற்றுக்கொள்வதற்கான மிகச் சிறந்த இடம் எங்கே இருக்கிறது? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] தேவையற்ற பிரச்சினைகளை நாம் தவிர்ப்பதற்கு உதவ பைபிள் நடைமுறையான அறிவுரையைக் கொடுப்பதாக நான் கண்டிருக்கிறேன். உங்களுக்கு நான் ஓர் உதாரணத்தைக் காட்டுகிறேன்.” பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? என்ற புத்தகத்தில் பக்கம் 163-க்குத் திருப்பி, பாரா 3-ல் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் 1 தீமோத்தேயு 6:9, 10-ஐ வாசிக்கவும். பாரா 4-ன் பேரில் கூடுதலான குறிப்புகளைச் சொல்லி பிறகு புத்தகத்தை அளியுங்கள்.
3 “பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா?” என்ற புத்தகத்தையோ அல்லது பழைய 192-பக்க பதிப்புகளில் ஒன்றையோ அளிக்கையில் இதோ நீங்கள் சிந்திக்க விரும்புகிற ஓர் ஆலோசனை:
◼ “நாம் செய்தித் தாளை வாசிக்கும், அல்லது செய்தி அறிக்கையைக் கேட்கும் ஒவ்வொரு சமயத்திலும் நம்மைக் கவலைப்பட செய்யும் வருத்தம்தரும் மற்றொரு பிரச்சினையைக்குறித்து நாம் கேட்கிறோம். [சமீபத்தில் செய்தி அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அமைதியை இழக்கச் செய்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுங்கள்.] இதுபோன்ற பிரச்சினைகளை நாம் எவ்வாறு சமாளிக்கலாம்? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] எக்காலத்திலும் எழுதப்பட்டவற்றுள் மிகச் சிறந்த செய்தியை பைபிள் கொண்டிருப்பதாகவும் ‘எக்காலத்திலும் மனிதன் அறிந்திருக்கிற பிரச்சினைகளுக்கான பதில்களனைத்தும் அதில் அடங்கியிருப்பதாகவும்,’ பிரசித்திபெற்ற ஒரு மனிதர் சொன்னார். அவர் சொன்னது பைபிள் தானேயும் குறிப்பிடுவதை மனதிற்குக் கொண்டுவருகிறது. [2 தீமோத்தேயு 3:16, 17-ஐ வாசிக்கவும்.] பைபிளில் நாம் ஏன் நம்பிக்கை கொண்டிருக்கலாம் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்.” நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் என்ற துண்டுப்பிரதியிலிருந்து சில சிறப்புக்குறிப்புகளைக் குறிப்பிட்டு, ஒரு குறிப்பிட்ட பொருளின் பேரிலான பைபிள் போதனைகளை விளக்குகிற பழைய 192-பக்க பதிப்புகளில் ஒன்றை அளியுங்கள். இந்த நவீன உலகத்திலும் பைபிளுடைய அறிவுரை நடைமுறையானதாக இருப்பது எவ்வளவு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது என்பதைக் கலந்தாராய பின்னர் வருவதாக குறிப்பாகத் தெரிவியுங்கள்.
4 உங்கள் பிராந்தியத்தில் மதசார்பற்ற ஆட்கள் இருக்கிறார்கள் என்றால், இந்த அணுகுமுறையை நீங்கள் முயற்சி செய்யலாம்:
◼ “இன்று அநேக ஆட்கள் பரிசுத்த புத்தகங்களை முரணானவை எனவும் கட்டுக்கதைகள் அல்லாமல் வேறொன்றுமில்லை எனவும் கருதுகின்றனர். மிகப் பேரளவான கெட்ட காரியங்கள் மதத்தின் பெயரில் செய்யப்பட்டதைக் கண்டிருப்பதால் இனிமேலும் அவர்கள் மதத் தலைவர்களை நம்புவதில்லை. உண்மையில், கடவுள் நமக்கு எந்தவிதமான வழிகாட்டுதலையாவது கொடுத்திருக்கிறாரா என அதிகதிகமான ஆட்கள் சந்தேகிக்கின்றனர். உங்களுடைய கருத்தென்ன?” பதிலளிக்க அனுமதிக்கவும். வீட்டுக்காரரின் பதிலுக்கேற்ப, உங்களிடத்திலுள்ள ஏதேனும் ஒரு பழைய 192-பக்க பதிப்பில், வீட்டுக்காரருடைய ஆட்சேபணை அல்லது நோக்குநிலையைப் பற்றி கலந்தாராய்கிற பகுதிக்குத் திருப்பி ஓரிரு குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள். உதாரணமாக, நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு என்ற ஆங்கில புத்தகத்தில் 12-ம் அதிகாரத்தை உபயோகிப்பதற்கு உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கலாம்.
5 நம்முடைய மேன்மையான போதகர், கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் தம்முடைய சித்தத்தைப் பற்றிய அறிவு கிடைக்கும்படியாக உறுதிசெய்திருக்கிறார். பைபிளின் உண்மையான மதிப்பைப் போற்ற மற்றவர்களுக்கு உதவுவதே, அவர்களுக்கு உதவுவதற்கு நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியங்களில் ஒன்றாகும்; இது அவர்களுடைய ஜீவனைக் காக்கலாம்.—நீதி. 1:32, 33.