உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 8/15 பக். 3-4
  • ஏன் இவ்வளவு அவநம்பிக்கை?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏன் இவ்வளவு அவநம்பிக்கை?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இக்காலங்களின் ஓர் அடையாளம்
  • நம்பிக்கை மீண்டும் துளிர்விடும்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • கடவுளின் நீதியில் நம்முடைய நம்பிக்கையை பலப்படுத்துதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • யெகோவா நம்முடைய நம்பிக்கையாய் இருக்க வேண்டும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • எம் பலமும் நம்பிக்கையும் நீரே!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 8/15 பக். 3-4

ஏன் இவ்வளவு அவநம்பிக்கை?

‘இந்தக் காலத்தில் யாரைத்தான் நம்புவது?’ விரக்தியடைந்த சிலர் இப்படிக் கேட்பது உங்கள் காதில் விழுந்திருக்கலாம். அல்லது உங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு அது உங்களை அலைக்கழித்திருந்தால், இதே கேள்வியைக் கேட்டு நீங்களும் பொருமியிருக்கலாம்.

உலகமுழுவதிலுமே ஸ்தாபனங்கள் மீதும் மக்கள் மீதும் அவநம்பிக்கை இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அடிக்கடி இந்த அவநம்பிக்கை நியாயமென்றே விவாதிக்கப்படுகிறது. ஆட்சிக்கு வரும்முன் அரசியல்வாதிகள் அள்ளிவீசும் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்கள் என்று உண்மையில் யாராவது நம்புகிறார்களா? 1990-ல், 1,000 மாணவர்களை வைத்து ஜெர்மனியில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது; உலகப் பிரச்சினைகளை அரசியல்வாதிகளால் தீர்க்க முடியும் என 16.5 சதவீதத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்; ஆனால் இதைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமானோர் அவநம்பிக்கையை வெளிப்படுத்தினர் என்பதை அது சுட்டிக்காட்டியது. மேலும், பிரச்சினைகளைத் தீர்க்க அரசியல்வாதிகளுக்கு இருக்கும் திறமையிலும் விருப்பத்திலும் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை என்றே பெரும்பாலானோர் கூறினர்.

ஸ்டட்கார்ட்ட நாக்ரிக்டன் என்ற செய்தித்தாள் இவ்வாறு குற்றம்சாட்டியது: “பல அரசியல்வாதிகளுக்கு முதலில் தங்களுடைய சொந்த நலன்தான் முக்கியம், அதற்குப் பிறகு முடிந்தால், வாக்காளர்களுடைய நலன்.” மற்ற நாடுகளில் உள்ள மக்களும் இதை ஒத்துக்கொள்கின்றனர். தி ஈரோப்பியன் என்ற செய்தித்தாள் ஒரு நாட்டைப் பற்றி இவ்வாறு சொன்னது: “அரசியல்வாதிகள் மீது இளைஞர்களுக்கு இருக்கும் அவநம்பிக்கைக்கு பலமான ஆதாரமுள்ளது, அதே அவநம்பிக்கைதான் வயதானவர்களிடமும் காணப்படுகிறது.” ‘ஆளும் கட்சியை வாக்காள பெருமக்கள் எப்போதுமே கவிழ்த்துவிடுகின்றனர்’ என்பதையும் அது குறிப்பிட்டது. அந்தச் செய்தித்தாள் மேலும் கூறியது: “[அங்குள்ள] இளைஞர்களிடம் இருக்கும் அவநம்பிக்கையையும் எதிலும் பிடிப்பு இல்லாத மனநிலையையும் அவர்களிடம் பேச்சுக் கொடுக்கும் எவருமே சட்டென்று கவனித்துவிடுகின்றனர்.” என்றபோதிலும், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறாத எந்த ஜனநாயக அரசும் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி ஒருமுறை இவ்வாறு சொன்னார்: “வலுவான அரசாங்கத்திற்கு அடித்தளமே பொதுமக்களுடைய நம்பிக்கைதான்.”

பொருளாதாரம் திடீரென வீழ்ச்சியடைவது, சீக்கிரம் பணக்காரர் ஆவதற்கான திட்டங்கள் தோல்வியடைவது ஆகியவற்றின் காரணமாக நிதி உலகில் நம்பிக்கை வைப்பதற்கு அநேகர் தயங்குகின்றனர். அக்டோபர் 1997-ல் உலக பங்கு சந்தை தறிகெட்டு போனது; அப்போது “மிதமீறிய, சிலசமயங்களில் நியாயமற்ற அவநம்பிக்கை” நிலவியது; “எங்கு பார்த்தாலும் நம்பிக்கையில்லா மனநிலைதான்” என ஒரு செய்திப் பத்திரிகை சொன்னது. “[ஆசிய நாடு ஒன்றில்] அந்தளவுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டதால், நடப்பு ஆட்சியையே ஆட்டங்காண வைக்கும் அளவுக்கு . . . அது அச்சுறுத்தலாக இருக்கிறது” என்றும்கூட அது சொன்னது. சுருக்கமாய் சொல்லப்போனால், “பொருளாதாரம் நம்பிக்கையின் மீதே சார்ந்திருக்கிறது” என்ற உண்மையை அது சொன்னது.

நம்பிக்கையை வளர்ப்பதில் மதமும்கூட தோல்வியைத் தழுவி வருகிறது. கிறைஸ்ட் இன் டே கேகென்வார்ட் என்ற மதப் பத்திரிகை வருத்தத்துடன் சொல்கிறது: “சர்ச்சுகள் மீது பொதுமக்களுக்கு இருந்த நம்பிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.” 1986-க்கும் 1992-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், சர்ச் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, அல்லது ஓரளவு நம்பிக்கை வைத்த ஜெர்மானியர்களின் எண்ணிக்கை 40-லிருந்து 33 சதவீதத்திற்கு குறைந்துவிட்டது. சொல்லப்போனால், முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் அது 20 சதவீதத்திற்கு கீழே சென்றுவிட்டது. மாறாக, சர்ச் மீது அதிக நம்பிக்கையில்லாத அல்லது கொஞ்சம்கூட நம்பிக்கையில்லாத மக்களின் எண்ணிக்கை, முன்னாள் மேற்கு ஜெர்மனியில் 56 சதவீதத்திலிருந்து 66 சதவீதத்திற்கும் முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் 71 சதவீதத்திற்கும் உயர்ந்துவிட்டது.

மனித சமுதாயத்தின் மூன்று தூண்களான அரசியல், பொருளாதாரம், மதம் ஆகியவற்றை தவிர, மற்ற துறைகள் மீதும் மக்களுடைய நம்பிக்கை குறைந்துவருவது தெளிவாக தெரிகிறது. இதற்கு மற்றொரு உதாரணம் சட்டத் துறை. குற்றவியல் சட்டங்களில் உள்ள ஓட்டைகள், சட்டத்தை நேர்மையுடன் நிர்வகிப்பதில் உள்ள கஷ்டங்கள், நீதிமன்றங்களின் கேள்விக்குரிய தீர்ப்புகள் ஆகியவை மக்களுடைய நம்பிக்கையை தகர்த்தெறிந்துவிட்டன. டைம் பத்திரிகையின்படி, “ஆபத்தான குற்றவாளிகளை [சட்டத்துறை] அடிக்கடி வெளியில் நடமாடவிடுகிறது; அதனால் குடிமக்கள் மற்றும் போலீஸாரின் வெறுப்புணர்ச்சிகள் அவநம்பிக்கையின் உச்சத்தையே தொட்டுவிட்டன.” போலீஸாரின் அராஜகத்தாலும் கொடுமையாலும்கூட, அவர்கள் மீதே மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

முறிவடைந்த சமாதான பேச்சுவார்த்தைகளும் போர் நிறுத்த மீறுதல்களும் சர்வதேச அரசியலில் அவநம்பிக்கையை எடுத்துக்காட்டுகின்றன. மத்திய கிழக்கில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு முக்கிய தடையாக இருப்பது “அவநம்பிக்கையே” என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் பில் ரிச்சர்ட்சன் சுட்டிக் காட்டினார்.

தனிப்பட்ட மனிதர்களுக்கிடையே எடுத்துக்கொண்டால், பிரச்சினைகள் வரும்போது அனுதாபத்தையும் ஆறுதலையும் பெற பொதுவாக மனிதர்கள் யாரை நாடுவார்களோ அவர்கள் மீதே, அதாவது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மீதே பெரும்பாலானோருக்கு அவநம்பிக்கைதான். இது, தீர்க்கதரிசியாகிய மீகா விவரித்த நிலைமையைப் போலவே இருக்கிறது: “சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.”—மீகா 7:5.

இக்காலங்களின் ஓர் அடையாளம்

ஜெர்மானிய உளவியல் நிபுணர் ஆர்தர் ஃபிஷர் இவ்வாறு சொன்னதாக சமீபத்தில் மேற்கோள் காட்டப்பட்டது: “சமுதாயத்தின் வளர்ச்சியிலும் ஒருவருடைய சொந்த எதிர்காலத்திலும் வைத்திருக்கும் நம்பிக்கை எல்லா தரப்பினர் மத்தியிலும் அடியோடு குறைந்துவிட்டது. சமுதாய ஸ்தாபனங்கள் தங்களுக்கு உதவ முடியுமா என்பதைக் குறித்து இளைஞர்கள் சந்தேகிக்கின்றனர். அரசியலாக இருந்தாலும்சரி மதமாக இருந்தாலும்சரி வேறெந்த அமைப்பாக இருந்தாலும்சரி, அவர்கள் இனிமேலும் எதிலும் நம்பிக்கை வைப்பதில்லை.” காலங்காலமாக இருந்துவரும் அதிகாரங்கள் மீதும் ஸ்தாபனங்கள் மீதும் நிபுணர்கள் மீதும் உள்ள “சந்தேக கலாச்சாரத்தைப்” பற்றி சமூகவியலாளர் உல்ரிக் பெக் பேசுவதில் ஆச்சரியமேதும் இல்லை.

இப்படிப்பட்ட கலாச்சாரத்தில், மக்கள் ஒதுங்கிக்கொள்ளவும் எல்லா அதிகாரத்தையும் புறக்கணிக்கவும் தங்களுடைய சொந்த இஷ்டத்தின்படி வாழவும் மற்றவர்களுடைய அறிவுரையோ வழிநடத்துதலோ இல்லாமல் சுயமாக தீர்மானங்கள் எடுக்கவுமே விரும்புகின்றனர். இவர் நம்பிக்கைக்குரியவர் அல்ல என்று யாருக்காவது முத்திரை குத்திவிட்டால், அவர்களோடு பழகும்போது எப்போதுமே சந்தேக மனப்பான்மைதான் சிலருக்கு தலைதூக்குகிறது, ஏன் அவர்களிடம் கரிசனையற்றவர்களாகவும்கூட நடந்துகொள்கிறார்கள். இத்தகைய மனப்பான்மை ஆரோக்கியமற்ற சூழ்நிலையையே முன்னேற்றுவிக்கிறது. அது பைபிளில் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது: “கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.” (2 தீமோத்தேயு 3:1-5; நீதிமொழிகள் 18:1) உண்மையில், இன்று காணப்படும் அவநம்பிக்கை இக்காலங்களின் ஓர் அடையாளமாக, அதாவது ‘கடைசிநாட்களுக்கு’ ஓர் அடையாளமாக உள்ளது.

அவநம்பிக்கை நிறைந்த ஓர் உலகில், அதோடு மேலே விவரிக்கப்பட்டுள்ளவர்களைப் போன்ற மக்கள் நிறைந்த உலகில், உண்மையிலேயே வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியாது. ஆனால் எல்லாம் மாறிவிடும் என்று நினைப்பது நடைமுறையானதா? இன்று நிலவும் அவநம்பிக்கையை போக்க முடியுமா? அப்படியானால், எப்படி, எப்பொழுது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்