உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w00 6/1 பக். 29-31
  • அபார ஆலோசனைக்கு எங்கே போவது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அபார ஆலோசனைக்கு எங்கே போவது?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நம்பகமான ஆலோசனை எங்கே?
  • பைபிள் அளிக்கும் ஆலோசனைகள்
  • கடவுளுடைய வார்த்தையால் நன்மையே
  • விரக்தியை விரட்டியடிக்க...
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • தேவனுடைய வசனமே சத்தியம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • நீங்கள் பயனடைகிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—2000
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
w00 6/1 பக். 29-31

அபார ஆலோசனைக்கு எங்கே போவது?

ஆலோசனையைத் தேடி மக்கள் எங்கும் அலைகின்றனர். இதற்காக வருடந்தோறும் பல கோடி ரூபாயை செலவழிக்கின்றனர். “[இன்றைய சமுதாயத்தில்] கல்வி மற்றும் சமூக குறைபாடுகள் உள்ளன. முன்பு இருந்ததுபோல மத நெறிமுறைகள் இப்போது இல்லை. குடும்பங்களும் ஸ்திரமாக இல்லை . . . , அதன் விளைவாக மக்கள் தடுமாறுகின்றனர்” என மனநல நிபுணர் ஹைன்ட்ஸ் லேமான் குறிப்பிடுகிறார். “ஒருசமயம், மன, ஆன்மீக, சரீர சம்பந்தமான பிரச்சினைகளுக்காக தங்களுடைய குலகுருவிடமோ, குருமாரிடமோ அல்லது குடும்ப வைத்தியரிடமோ போய்க் கொண்டிருந்த மக்கள் இப்போது ஆலோசனைக்காக புத்தகங்களிடமாக திரும்பியிருக்கின்றனர்” என்கிறார் பத்திரிகையாசிரியர் எரிக் மைசல்.

இந்த ஆலோசனைப் புத்தகங்களைத் தேடி மக்கள் ஏன் செல்கின்றனர் என்பதை ஆராய அமெரிக்க உளவியல் கழகம் ஒரு குழுவை நிறுவியது. “இந்தப் புத்தகங்கள், தனிநபர் ஒவ்வொருவரும் தங்களையும் மற்றவர்களையும் புரிந்துகொள்ள ஒருவேளை உதவலாம் . . . , என்றாலும், இவை பெரும்பாலும் மிகைப்படுத்தியே விளம்பரப்படுத்தப்படுகின்றன” என அந்தக் குழு தெரிவிக்கிறது. ஆனால் “ஆன்மீகப் போர்வையில் வழங்கப்படும் போலி ஆலோசனைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். . . . மிக முக்கியமாக, மிகக் குறைந்த காலத்தில், மிகக் குறைந்த முயற்சியில் சுலபமாக நிறைய சாதிக்கலாம் என சொல்லும் எல்லா வகையான புத்தகங்கள், டேப்புகள் அல்லது கருத்தரங்குகளைப் பற்றி ஜாக்கிரதையாய் இருங்கள்” என டோரான்டோ ஸ்டார் செய்தித்தாளின் எழுத்தாளர் ஒருவர் குறிப்பிடுகிறார். உண்மையிலேயே உதவும் எண்ணமுடையவர்கள் அநேகர் இருக்கின்றனர் என்பது மெய்யே. என்றாலும், தனிமையையும் துயரங்களையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஏமாற்று பேர்வழிகள் அநேகர் இருக்கிறார்கள். இவர்கள் எந்த விதத்திலும் உதவி செய்வதுமில்லை பரிகாரம் அளிப்பதுமில்லை என்பதுதான் உண்மை.

அப்படியென்றால், நம்பகமான, பலனளிக்கும் ஆலோசனையை நாம் எங்கே பெறலாம்?

நம்பகமான ஆலோசனை எங்கே?

“கடவுள் தந்த வரைபடமே பைபிள். வாழ்க்கை எனும் கடலில் நீங்கள் எந்த திசையில் போக வேண்டுமோ அந்த திசையில் செல்லவும், கப்பற்சேதத்தை தவிர்க்கவும், துறைமுகம் எங்கே இருக்கிறது என்பதைக் காட்டவும், பாறைகளிலோ அல்லது மணற்திட்டுக்களிலோ மோதாமல் இருக்கவும் அது உதவுகிறது” என 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்க பிரசங்கியார் ஹென்றி வார்ட் பீச்சர் சொன்னார். பைபிளைக் குறித்து இன்னொருவர் இப்படி குறிப்பிடுகிறார்: “பைபிளுக்கு மிஞ்சியவர்கள் எவருமே இல்லை; அதை படிக்க படிக்க அறிவு ஆழமாகிறது, வளரவும் செய்கிறது.” இந்தப் புத்தகத்திற்கு நீங்கள் ஏன் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்?

இந்த கருத்தை வலியுறுத்தி பைபிள் பின்வருமாறு சொல்கிறது: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) பைபிளில் சொல்லப்பட்ட அனைத்தும், உயிரின் ஊற்றுமூலராகிய யெகோவா தேவனிடமிருந்து வந்தவையே. (சங்கீதம் 36:9) சொல்லப்போனால், நாம் எப்படி உருவாக்கப்பட்டோம் என்பது அவருக்குத்தான் நன்றாக தெரியும். “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” என சங்கீதம் 103:14 சொல்கிறது. எனவே, பைபிளின் ஆலோசனைகளை நாம் முழுமையாக நம்பலாம்.

பைபிளில் நியமங்களும் வழிநடத்துதல்களும் குவிந்து கிடக்கின்றன. நீங்கள் எந்த சூழ்நிலையிலும் இதை பொருத்தி நன்மை அடையலாம். “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என பைபிள் வாயிலாக கடவுள் காட்டுகிறார். (ஏசாயா 30:21) இன்று தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் பைபிள் உண்மையிலேயே உதவ முடியுமா? நாம் சிந்திப்போம்.

பைபிள் அளிக்கும் ஆலோசனைகள்

கவலையால் தவிக்கையில். “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” என பைபிள் நமக்கு சொல்கிறது. (பிலிப்பியர் 4:6, 7) பணக் கஷ்டங்கள், பாலின துஷ்பிரயோகம், புண்படுத்தும் பேச்சு, அல்லது அன்புக்குரியவரின் மரணம் போன்ற மன வேதனைகளை சமாளிக்க ஜெபம் உதவியாக இருந்திருக்கிறதா? பின்வரும் அனுபவத்தை படியுங்கள்.

ஒரு தாய் தன் மகள் பாலின துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அறிந்து இப்படி குமுறுகிறார்: “பெற்ற மகளை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வு வாட்டி வதைத்தது. அதை எப்படி சொல்றதுன்னே தெரியல! மனம் கசந்தது, எதை பார்த்தாலும் வெறுப்பு, கோபம் கோபமா வந்தது, இதையெல்லாம் எதிர்த்து போராட வேண்டியிருந்தது. அப்ப எனக்கிருந்த வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. அது என் வாழ்க்கையை நாசமாக்கியது. உதவிக்காக யெகோவாவிடம் கெஞ்சி மன்றாடினேன்.” பிலிப்பியர் 4:6, 7-ஐ மறுபடியும் மறுபடியுமாக வாசித்து, அதிலுள்ள புத்திமதியை பின்பற்றியதாக கூறுகிறார் அந்தத் தாய். “வீணான இப்படிப்பட்ட வேதனைகள் என்னை அப்படியே அமிழ்த்திவிடாதபடி கடவுளிடம் திரும்பத் திரும்ப ஜெபிக்கிறேன். சாந்தமான, சந்தோஷமான மனநிலையை வளர்த்துக்கொள்ள யெகோவா எனக்கு உதவியிருக்கிறார். உண்மையிலேயே எனக்கு மனநிம்மதி கிடைத்திருக்கிறது” என அந்தத் தாய் கூறுகிறார்.

உங்கள் சக்திக்கு மிஞ்சிய அல்லது உங்களால் தீர்க்கமுடியாத சில பிரச்சினைகளை நீங்களும் எதிர்ப்படலாம். அப்படிப்பட்ட சமயங்களில் உதவிக்காக ஜெபம் செய்யுங்கள் என்ற பைபிளின் அறிவுரைக்கு செவிகொடுங்கள். அப்போது, நீங்கள் இந்தப் பிரச்சினைகளை திறமையாக சமாளிக்க முடியும். சங்கீதக்காரரும் இதையே ஆமோதித்து கூறுகிறார்: “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.”—சங்கீதம் 37:5.

உற்சாகம்பெற. சங்கீதக்காரர் இப்படியாக தன் போற்றுதலை விவரித்தார்: “கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமைதங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன். என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன்.” (சங்கீதம் 26:8, 12) யெகோவாவை வணங்குவதற்காக தவறாமல் கூடிவரும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. இந்தக் கூட்டுறவு உங்களுக்கு எவ்வாறு உதவும்? மற்றவர்களின் அனுபவம்தான் என்ன?

“என் பெற்றோர் யெகோவாவின் சாட்சிகளல்ல. அதனால், ஊழியம் சம்பந்தமாக நான் எதை செய்தாலும் அவர்களுக்குப் பிடிக்காது. என்னைப் பொறுத்தவரை, கூட்டங்களுக்கு செல்வதென்பதே பெரிய விஷயம்” என சாந்தி சொல்கிறார். ஆனால், இவர் அநேக ஆசீர்வாதங்களை பெற்றதாக கருதுகிறார். ஏனென்றால், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்ல அவராலான எல்லா முயற்சிகளையும் எடுத்திருக்கிறார். “கூட்டங்கள் என் விசுவாசத்தை பலப்படுத்துகிறது. மகளாக, மாணவியாக, யெகோவாவின் ஊழியக்காரியாக ஒவ்வொரு நாளும் நான் எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடிகிறது. ஸ்கூல் பிள்ளைகளுக்கும் சாட்சிகளுக்கும் ரொம்ப வித்தியாசம்! சாட்சிகள் உண்மையிலேயே உதவுபவர்கள், அக்கறை காட்டுபவர்கள். எப்போதும் உற்சாகம் அளிக்கும் விஷயங்களையே பேசுவார்கள். அவர்கள்தான் உண்மையான நண்பர்கள்.”

பைபிளின் அறிவுரைக்கேற்ப, தவறாமல் சபைகூடிவந்தால் யெகோவா நிச்சயம் நம்மை உற்சாகப்படுத்துவார். சங்கீதக்காரருடைய இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை: “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.”—சங்கீதம் 46:1.

திருப்தியளிக்கும், பிரயோஜனமான வேலைக்கு. “உறுதியோடு இருங்கள்; நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்” என பைபிள் அறிவுறுத்துகிறது. (1 கொரிந்தியர் 15:58, பொது மொழிபெயர்ப்பு) “ஆண்டவரின் பணி” உண்மையிலேயே திருப்தியளிக்கிறதா? கிறிஸ்தவ ஊழியத்தால் ஏதாவது பிரயோஜனம் உண்டா?

ஜெயந்திa விவரிக்கிறார்: “விவாகரத்து செய்துகொள்ளும் நிலையில் இருந்த ஒரு தம்பதிக்கும், மகளை பறிகொடுத்த ஒரு தாய்க்கும் நான் உதவியிருக்கிறேன். இறந்தவர்களின் நிலை பற்றி சரியாக தெரியாமல் அந்த தாய் மிகவும் வேதனையில் இருந்தார். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், பைபிளின் ஆலோசனையை பின்பற்றியது அவர்களுடைய வாழ்க்கையில் மீண்டும் சமாதானத்தையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது. அவர்களுக்கு உதவ முடிந்தது எனக்கு அளவிலா ஆனந்தத்தையும் அதிக திருப்தியையும் தந்தது.” சுந்தர் சொல்கிறார்: “ஊழியத்தில் நல்ல அனுபவம் கிடைத்தால், புதிய பைபிள் படிப்பு ஒன்றை ஆரம்பித்தால், அல்லது சந்தர்ப்ப சாட்சி அளிப்பதில் வெற்றி அடைந்தால், வருடக்கணக்கில் அதைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பீர்கள். ஒவ்வொரு முறை அதைச் சொல்லும்போதும் அந்த சமயத்தில் கிடைத்த அதே சந்தோஷத்தையும் உணர்ச்சிகளையும் நீங்கள் அடைவீர்கள்! நிரந்தர மகிழ்ச்சி ஊழியத்திலேயே கிடைக்கும்.”

பைபிள் அறிவுரைக்கேற்ப அநேகர் ஊழியத்தில் சுறுசுறுப்பாக இருக்கின்றனர். திருப்தியளிக்கும், பிரயோஜனமான வேலையில் ஈடுபட வேண்டுமென்கிற இவர்களுடைய ஆவலை ஊழியம் பூர்த்தி செய்தது. கடவுளுடைய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் மற்றவர்களுக்கு கற்பிக்கும் இந்த சேவை செய்ய உங்களையும் அன்புடன் அழைக்கிறோம். இது உங்களுக்கும் நன்மையளிக்கும்!—ஏசாயா 48:17; மத்தேயு 28:19, 20.

கடவுளுடைய வார்த்தையால் நன்மையே

இன்றும் நம்பத்தக்க ஆலோசனை வழங்குவதில் முதலிடம் வகிப்பது பைபிளே என்று சொன்னால் அது மிகையாகாது. இதிலிருந்து நன்மையடைய, நம் பங்கில் தொடர்ந்து முயற்சி தேவை. “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு” என பவுல் அறிவுறுத்தினார். (1 தீமோத்தேயு 4:15; உபாகமம் 11:18-21) பைபிளில் உள்ள கடவுளுடைய புத்திமதிகளை நடைமுறைப்படுத்த நாம் உண்மையிலேயே முயற்சி செய்தால், வெற்றி நிச்சயம் என கடவுள் உறுதி தருகிறார். “கர்த்தரில் [“யெகோவாவில்,” NW] நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என்பதே அவரளிக்கும் வாக்குறுதி.—நீதிமொழிகள் 3:5, 6.

[அடிக்குறிப்புகள்]

a பெயர் மாற்றப்பட்டுள்ளது.

[பக்கம் 31-ன் படம்]

வாழ்க்கையில் திருப்தியும் நிறைவும் தருவது பைபிள் ஆலோசனையே!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்