உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 1/1 பக். 2-3
  • போர் காயங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • போர் காயங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சீழ்வடியும் காயங்கள்
  • போர் காயங்களை ஆற்றுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • 50 ஆண்டுகளுக்குமுன் உலகம் எப்படியிருந்தது?
    விழித்தெழு!—1995
  • யுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு யுத்தம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • போர்
    விழித்தெழு!—2017
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 1/1 பக். 2-3

போர் காயங்கள்

“போரில் யாருமே வெற்றிவாகை சூடுவதில்லை, எல்லாருக்கும் தோல்விதான்.” இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட முன்னாள் வீரர் ஒருவர் இதை குறிப்பிட்டார். அவர் சொல்வதை அநேகர் ஆமோதிப்பார்கள். போருக்கான செலவை கேட்டால் நீங்கள் சிலிர்த்துப் போவீர்கள். வெற்றிவாகை சூடுகிறவர்கள், தோல்வியை தழுவுகிறவர்கள் ஆகிய இருதரப்பினருமே அதற்காக செலுத்தும் விலை படுபயங்கரம். ஒரு வழியாக போர் முடிந்தாலும், கோடிக்கணக்கானோர் கோரமான போர் காயங்களால் காலங்காலமாக அவதியுறுகிறார்கள்.

எப்படிப்பட்ட காயங்களால்? போருக்குப்பின் மக்கள்தொகை மடிந்துவிடுகிறது; அநாதைகள், விதவைகள் எண்ணிக்கை ஏறிவிடுகிறது. போரில் உயிர் தப்புவோருக்கு பயங்கரமான உடல் காயங்களோடு உள்ளக் காயங்களும் இருக்கும். கோடிக்கணக்கானோர் ஆதரவற்றவர்களாகவோ அகதிகளாகவோ ஆகிவிடலாம். போரில் உயிர் தப்பியவர்களின் உள்ளத்தில் குமுறும் பகைமையையும் வேதனையையும் நம்மால் கற்பனை செய்ய முடியுமா?

சீழ்வடியும் காயங்கள்

போர் எனும் தீ அணைக்கப்பட்டு, குண்டு மழை ஓய்ந்து, போர் வீரர்கள் வீடு திரும்பிய பின்னும் போரினால் மக்களின் இதயத்தில் ஏற்பட்ட காயம் ஆறுவதே இல்லை. அடுத்துவரும் சந்ததியாரும் ஒருவருக்கொருவர் கடும் மனக்கசப்பை வளர்த்துக்கொள்கின்றனர். இப்பொழுது மற்றொரு போருக்கு இது வித்தாகிவிடுகிறது.

உதாரணமாக, முதல் உலகப் போரை முறைப்படி முடிவுக்கு கொண்டுவர 1919-⁠ல் கையெழுத்திடப்பட்ட வெர்செயில்ஸ் ஒப்பந்தத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஜெர்மன் நாட்டவர்மீது வைக்கப்பட்ட இந்த நிபந்தனைகள் கடுமையானவை, பழிக்குப் பழி வாங்குபவை என அந்நாட்டு குடிமக்கள் கருதினர். இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் “ஜெர்மானியர்கள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்தின, பழிக்குப் பழி வாங்கத் தூண்டின” என்று தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. சில வருடங்களுக்குப்பின், “சமாதான ஒப்பந்தத்தின் மீதிருந்த இந்தக் கசப்புணர்வு பழிவாங்குவதற்கு ஹிட்லருக்கு ஓர் அடிப்படையாக” அமைந்தது. இதுவே இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த காரணிகளில் ஒன்றாக விளங்கியது.

இரண்டாம் உலகப் போர் போலந்தில் வெடித்து, பால்கன் பகுதிவரை சிதறியது. 1940-களில் அந்தப் பகுதியில் வாழ்ந்த சிறுபான்மை தொகுதியினர் ஒருவர்மேல் ஒருவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களே 1990-களில் பால்கன் பகுதியில் போருக்கு வழிநடத்தின. “பகையும் பழிக்குப் பழி வாங்கும் உணர்ச்சியும் ஒரு நச்சு வளையத்தை ஏற்படுத்தி, காலப்போக்கில் அது சுருள் சுருளாக மாறி நம்முடைய நாள் வரை தொடர்ந்து பாதிப்பை உண்டாக்குகிறது” என ஜெர்மன் செய்தித்தாள் டீ சீட் கூறுகிறது.

ஆம், மனிதகுலம் அமைதி பூங்காவில் உலவுவதற்கு போர் காயங்களை ஆற்றும் மூலிகை தென்றல் வீச வேண்டும். அது எப்படி சாத்தியம்? பகையையும் வேதனையையும் விரட்டியடிக்க என்ன செய்யலாம்? போர் காயங்களை யாரால் ஆற்ற முடியும்?

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

COVER: Fatmir Boshnjaku

[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]

▼ஐ.மா. கடற்கரை காவலர் போட்டோ; ▲ஐநா போட்டோ 158297/J. Isaac

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்