உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 10/1 பக். 2-4
  • இக்கட்டான காலங்களில் ஆறுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இக்கட்டான காலங்களில் ஆறுதல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • துன்மார்க்கத்தை கடவுள் எப்படி கருதுகிறார்
  • துன்மார்க்கத்திற்கு யார் காரணம்?
  • உண்மையிலேயே ஒருவர் அக்கறை காட்டுகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா?
    அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா?
  • கடவுளுடைய நோக்கம் விரைவில் நிறைவேறவிருக்கிறது
    வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
  • கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவில் ஆறுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 10/1 பக். 2-4

இக்கட்டான காலங்களில் ஆறுதல்

இந்தக் காலத்தில் நாம் கேட்கும் செய்திகள் மருந்துக்குக்கூட ஆறுதல் அளிப்பதில்லை. ஒருவர் இப்படி எழுதினார்: “நடப்பு செய்திகள் அந்தளவுக்கு மனதை உறைய வைப்பதாக இருப்பதால், ஆறு மணி செய்தியைப் பார்க்க தைரியம் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதே நமக்கு பெரும்பாலும் கஷ்டமாக இருக்கிறது.” போர், பயங்கரவாத செயல்கள், துன்பம், குற்றச்செயல், நோய் ஆகியவை இந்த உலகை திக்குமுக்காட வைக்கின்றன. இந்தத் தீய காரியங்கள் எந்த விநாடியும் நம்மை நேரடியாக தாக்கலாம், ஏற்கெனவே அப்படி தாக்கவில்லையென்றால்.

இப்படிப்பட்ட சூழ்நிலையைப் பற்றி பைபிள் துல்லியமாக முன்னறிவித்தது. இயேசு நம்முடைய காலத்தைப் பற்றி விவரிக்கும்போது, பெரும் யுத்தங்கள், கொள்ளை நோய்கள், உணவுப் பற்றாக்குறைகள், பூமியதிர்ச்சிகள் ஆகியவை இருக்கும் என கூறினார். (லூக்கா 21:10, 11) இது போலவே, ‘கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களைப்’ பற்றி அப்போஸ்தலன் பவுலும் எழுதினார். அப்பொழுது, ஜனங்கள் கொடுமையுள்ளவர்களாயும், பணப்பிரியர்களாயும், நல்லதில் பிரியமற்றவர்களாயும் இருப்பார்கள் என்றார். அந்தக் காலப்பகுதியை “கடைசி நாட்கள்” என்றும் அவர் அழைத்தார்.​—⁠2 தீமோத்தேயு 3:1-5, NW.

இவ்வாறு, உலக நிலைமைகளை விவரிக்கும் விஷயத்தில் இன்றைய செய்திகளுக்கும் பைபிள் முன்னறிவிப்புகளுக்கும் கொஞ்சம் ஒற்றுமை உண்டு. ஆனால் மற்றபடி வேறெந்த ஒற்றுமையும் இல்லை. செய்திகளில் இல்லாத நோக்குநிலையை பைபிள் தருகிறது. ஏன் நிலைமை இவ்வளவு கெட்டுக்கிடக்கிறது என்பதை மட்டுமல்ல, எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும் கடவுளுடைய ஏவுதலால் எழுதப்பட்ட அவருடைய வார்த்தையின் வாயிலாக புரிந்துகொள்கிறோம்.

துன்மார்க்கத்தை கடவுள் எப்படி கருதுகிறார்

நம்முடைய நாளில் நிலவும் வேதனைமிக்க சூழ்நிலைகளைப் பற்றி கடவுள் எப்படி கருதுகிறார் என்பதை பைபிள் விளக்குகிறது. தற்போதுள்ள கஷ்டங்களைப் பற்றி அவர் முன்னரே அறிந்திருந்தபோதிலும், அவற்றை அவர் அங்கீகரிப்பதுமில்லை, என்றென்றும் அனுமதிக்கப்போவதுமில்லை. “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 4:8) மக்களை ஆழ்ந்த அக்கறையோடு யெகோவா கவனித்துக்கொள்கிறார், அதோடு கெட்ட நிலைமைகள் அனைத்தையும் அடியோடு வெறுக்கிறார். ஆறுதலுக்காக அவரிடம் அண்டி வருவது பொருத்தமானதே, ஏனென்றால் அவர் நல்லவர், இரக்கமுள்ளவர், பூமியிலிருந்து தீமையை அடியோடு ஒழிப்பதற்கு வல்லமையும் விருப்பமும் உள்ளவர். “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் [கடவுளால் நியமிக்கப்பட்ட பரலோக ராஜா] விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்” என சங்கீதக்காரன் எழுதினார்.​—⁠சங்கீதம் 72:12-14.

துன்பப்படுகிறவர்களுக்காக நீங்கள் பரிதாபப்படுகிறீர்களா? ஒருவேளை பரிதாபப்படலாம். அனுதாபம் என்பது யெகோவா நமக்குள் வைத்திருக்கிற ஒரு பண்பு, ஏனென்றால் நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம். (ஆதியாகமம் 1:26, 27) ஆகவே, மனிதர் படும் துயரங்களைக் குறித்து யெகோவா உணர்ச்சியற்றவராக இல்லை என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். வேறு எவரையும்விட யெகோவாவை மிக நன்றாக அறிந்திருக்கிற இயேசு, யெகோவா நம்மீது ஆழ்ந்த அக்கறையுள்ளவர் என்றும் கனிவான இரக்கம் நிறைந்தவர் என்றும் கற்பித்தார்.​—⁠மத்தேயு 10:29, 31.

மனிதகுலத்தின் மீது கடவுள் அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதற்கு படைப்பே அத்தாட்சி அளிக்கிறது. கடவுள் “தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்” என இயேசு கூறினார். (மத்தேயு 5:45) லீஸ்திரா எனும் பட்டணத்திலிருந்த ஜனங்களிடம் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “[கடவுள்] நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக் குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை.”​—⁠அப்போஸ்தலர் 14:17.

துன்மார்க்கத்திற்கு யார் காரணம்?

லீஸ்திராவிலிருந்த ஜனங்களிடம் பவுல் மேலும் இவ்வாறு கூறியது குறிப்பிடத்தக்கது: ‘சென்ற காலங்களில் [கடவுள்] சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தார்.’ ஆகவே, பெரும்பாலான அவஸ்தைகளுக்கு தேசங்களே​—⁠அல்லது ஜனங்களே​—⁠முக்கிய காரணம். கடவுளை குற்றம்சாட்ட முடியாது.​—⁠அப்போஸ்தலர் 14:16.

மோசமான காரியங்கள் நிகழ்வதை யெகோவா ஏன் அனுமதிக்கிறார்? என்றாவது நடவடிக்கை எடுப்பாரா? இதற்குரிய பதில்களை கடவுளுடைய வார்த்தையில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஏனென்றால் இதற்குரிய பதில் மற்றொரு ஆவி ஆளுடனும் காணக்கூடாத ஆவி உலகில் அவனால் எழுப்பப்பட்ட ஒரு விவாதத்துடனும் நெருங்க சம்பந்தப்பட்டுள்ளது.

[பக்கம் 4-ன் படங்கள்]

மனிதருடைய கஷ்டங்களைக் கண்டு நாமே அனுதாபப்படும்போது, கடவுளைப் பற்றி சொல்லவா வேண்டும்?

[பக்கம் 2-ன் படங்களுக்கான நன்றி]

அட்டைப்படம்: பீரங்கி: UN PHOTO 158181/J. Isaac; பூமியதிர்ச்சி: San Hong R-C Picture Company

[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]

மேலே இடது, குரோஷியா: UN PHOTO 159208/S. வெள்ளை மாளிகை; பட்டினியால் வாடும் பிள்ளை: UN PHOTO 146150 BY O. MONSEN

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்