உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 12/1 பக். 3-4
  • மனிதருக்கே உரிய ஒரு பண்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனிதருக்கே உரிய ஒரு பண்பு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அறவியல் என்றால் என்ன?
  • எது சரி, எது தவறு எப்படி தீர்மானிப்பீர்கள்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • தார்மீக தராதரங்களை எங்கே காணலாம்?
    விழித்தெழு!—2004
  • 7 ஒழுக்கநெறிகள்
    விழித்தெழு!—2018
  • நேர்மை வெற்றியின் ஏணிப்படி
    விழித்தெழு!—2012
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 12/1 பக். 3-4

மனிதருக்கே உரிய ஒரு பண்பு

ஜோடீ சொந்தமாக தொழில் செய்கிறார். இறந்தவருடைய சொத்தை பட்டியலிட்டு, எவ்வளவு மதிப்பு தேறும் என்பதை அதன் உரிமையாளர்களுக்கு கணக்கிட்டு சொல்வதுதான் அந்தத் தொழில். இப்படி ஒரு பெண்மணிக்கு, இறந்துபோன அக்காவின் வீட்டுப் பொருட்களை வகைப்படுத்தவும் விற்கவும் உதவி செய்தார். வீட்டிற்குள் பாழடைந்த கணப்படுப்பு அருகே, மீன் பிடி கருவிகளை வைப்பதற்குரிய இரண்டு பழைய பெட்டிகளை அவர் கண்டெடுத்தார். அவற்றில் ஒரு பெட்டியை அவர் திறந்து பார்த்தபோது, அவர் கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை. அலுமினிய தாளில் 100 டாலர் நோட்டுக் கத்தைகள் சுற்றி வைக்கப்பட்டிருந்தன! அதன் மொத்த மதிப்பு 82,000 டாலர்கள்!! அந்த அறையில் ஜோடீயைத் தவிர வேறு யாருமே இல்லை. அவர் என்ன செய்திருப்பார்? அதை கமுக்கமாக தானே வைத்துக்கொள்வாரா அல்லது அந்தப் பெண்மணியிடம் கொடுத்திருப்பாரா?

ஜோடீயின் இந்தக் குழப்பநிலை மனிதருக்கே உரித்தான ஒரு பண்பை சிறப்பித்துக் காட்டுகிறது. மிருகங்களிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டும் பல பண்புகளுள் அதுவும் ஒன்று. அதைப் பற்றி த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு குறிப்பிடுகிறது: “நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது போன்ற அர்த்தமுள்ள கேள்விகளைக் கேட்பதே மனித இனத்தின் விசேஷித்த பண்புகளில் ஒன்றாகும்.” ஒரு நாய் பசியோடு இருக்கையில் டேபிளில் ஒரு கறித் துண்டைப் பார்த்தால், அதை சாப்பிடலாமா வேண்டாமா என்பதையெல்லாம் யோசிக்காது. ஆனால் ஜோடீக்கோ தனது தீர்மானம் தார்மீக அடிப்படையில் சரியானதா என்பதை சீர்தூக்கிப் பார்க்கும் திறமை உள்ளது. அவர் அந்தப் பணத்தை தன்னிடமே வைத்துக் கொண்டால் அது திருட்டுக்கு சமம், ஆனாலும் அவர் பிடிபட வாய்ப்பில்லை. அந்தப் பணம் அவருடையது இல்லைதான், ஆனால் அந்தப் பணம் இருப்பது அவரது வாடிக்கைக்காரருக்கு தெரியவே தெரியாது. அது தவிர, ஜோடீ அந்தப் பணத்தை வாடிக்கைக்காரரிடம் கொடுத்தால் அவர் பிழைக்கத் தெரியாதவர் என்றே அநேகர் நினைப்பார்கள்.

ஜோடீயின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? நீங்கள் எப்பேர்ப்பட்ட அறவியல் தராதரங்களின் அடிப்படையில் வாழத் தீர்மானித்திருக்கிறீர்களோ அதைப் பொறுத்தே உங்கள் பதில் இருக்கும்.

அறவியல் என்றால் என்ன?

அறவியல் என்பது “தார்மீக ரீதியில் எது சரி எது தவறு என்பதைப் பற்றிய கேள்விகளை ஆராயும் துறை.” (கோலின்ஸ் கோபில்ட் இங்லிஷ் டிக்ஷ்னரி) எரிக் ஜே. ஈஸ்டன் என்ற நூலாசிரியர் இவ்வாறு எழுதுகிறார்: “‘அறம்,’ ‘தார்மீகம்’ ஆகியவற்றின் வேர்ச்சொற்கள் ஒரே அர்த்தத்தைத்தான் தருகின்றன. . . . தார்மீக நெறிகளை உருவாக்குவதில் பழக்கவழக்கங்களும் பாரம்பரியங்களும் பங்களித்திருக்கின்றன.”

மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய தார்மீக நெறிகளை மதமே நீண்ட காலமாக நிர்ணயித்து வருகிறது. பல சமுதாயங்களில் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் செல்வாக்கு செலுத்தி வந்திருக்கிறது. என்றாலும், பல்வேறு மத தராதரங்கள் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும் பைபிளின் தார்மீக நெறிமுறை காலத்துக்கு ஒவ்வாது என்றும் சொல்லி அவற்றை புறக்கணிப்பவர்கள் உலகெங்கிலும் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். அப்படியானால், அவற்றிற்குப் பதிலாக எதை நம்புகிறார்கள்? “முன்பு செல்வாக்கு செலுத்திய மதத்தின் இடத்தை இப்போது உலக ஞானம் . . . பிடித்துக் கொண்டது” என எதிக்ஸ் இன் பிஸினஸ் லைஃப் என்ற புத்தகம் கருத்து தெரிவிக்கிறது. அநேகர் வழிநடத்துதலுக்காக மதத்தினிடம் திரும்பாமல் அறவியல் துறை வல்லுநர்களையே நாடுகின்றனர். உயிர்-அறவியல் நிபுணர் பால் மெக்னெய்ல் சொல்வதாவது: “அறவியல் நிபுணர்கள் உலகின் குருமார்களாக ஆகியிருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். . . . ஜனங்கள் ஒரு காலத்தில் மத அடிப்படையில் பேசிய காரியங்களை இப்பொழுது அறநெறியின் அடிப்படையில் பேசுகிறார்கள்.”

இக்கட்டான தீர்மானங்களை எதிர்ப்படுகையில், சரி எது தவறு எது என்பதை நீங்கள் எப்படி தீர்மானிக்கிறீர்கள்? உங்களுடைய அறநெறிகளை நிர்ணயிப்பது கடவுளா அல்லது நீங்கள்தானா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்