உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 4/15 பக். 21-22
  • மொழிபெயர்ப்புக்கு பயனுள்ள உபகரணம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மொழிபெயர்ப்புக்கு பயனுள்ள உபகரணம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • இதே தகவல்
  • கம்ப்யூட்டர் தொழிற்நுட்பத்தைக் குறித்து சமநிலையான ஓர் நோக்கை காத்துக்கொள்ளுதல்
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • சயற்கை அறிவுத்திறன் அதற்கு அறிவுத்திறன் உண்டா?
    விழித்தெழு!—1989
  • ஜானிக்கு இப்பொழுது ஒரு கம்ப்யூட்டர் தேவையா?
    விழித்தெழு!—1990
  • பைபிள் பிரியரை மகிழ்வித்த சாதனை!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 4/15 பக். 21-22

மொழிபெயர்ப்புக்கு பயனுள்ள உபகரணம்

பைபிளின் நூலாசிரியரான யெகோவா தேவன் தமது ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி “சகல ஜாதிகளுக்கும் [அதாவது தேசத்தாருக்கும்], கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்” அறிவிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறார். (வெளிப்படுத்துதல் 14:6) எழுதப்பட்ட தமது வார்த்தை மனிதகுலம் முழுவதற்கும் எளிதாக கிடைக்க வேண்டுமென்றும் அவர் விரும்புகிறார். அது நிறைவேறும் வகையில், உலகிலுள்ள வேறெந்த புத்தகத்தைவிட பைபிள் மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடவுளுடைய எண்ணங்களை மற்றொரு மொழியில் அளிப்பதற்கு ஆயிரக்கணக்கான மொழிபெயர்ப்பாளர்கள் காலம் நேரம் பார்க்காமல் அயராது பாடுபட்டிருக்கிறார்கள்.

ஆனால், பைபிள் மொழிபெயர்க்கப்பட வேண்டிய புத்தகம் மட்டுமல்ல. மற்ற புத்தகங்களை மொழிபெயர்க்க உதவும் உபகரணமாகவும் அது அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. பைபிள் பதங்கள் எவ்வாறு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதை மொழிபெயர்ப்பாளர்கள் பலர் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். இவ்வாறு, குறிப்பிட்ட வார்த்தைகளுக்குரிய சரியான மொழிபெயர்ப்பைக் கண்டறிந்துள்ளனர். மொழிபெயர்ப்பு உபகரணமாக பயன்படும் தன்மைகளை பைபிள் பெற்றிருப்பதால் தற்போது கம்ப்யூட்டர் மொழிபெயர்ப்பிலும் பைபிள் பயன்படுத்தப்படுகிறது.

கம்ப்யூட்டர் மொழிபெயர்ப்பது உண்மையிலேயே மிகவும் கடினம். மொழிபெயர்ப்பு என்பது கம்ப்யூட்டர் செய்ய முடியாத வேலை என்றுகூட வல்லுனர்கள் சிலர் நினைத்திருக்கிறார்கள். ஏன்? மொழி என்பது வெறுமனே வார்த்தைகளின் தொகுப்பு மட்டுமல்ல. ஒவ்வொரு மொழியும் அதற்கே உரிய வார்த்தை கோர்வைகள், விதிகள், விதிவிலக்குகள், மரபுத்தொடர்கள், மறை குறிப்புகள் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் கம்ப்யூட்டருக்கு கற்பிக்கும் முயற்சியில் இதுவரை பெரியளவில் வெற்றி கிட்டவில்லை. கம்ப்யூட்டர் மொழிபெயர்ப்புகளில் பெரும்பாலானவற்றைப் புரிந்துகொள்வது சிரமமாக இருந்திருக்கிறது.

இருப்பினும், கம்ப்யூட்டர் வல்லுனர்கள் தற்போது புதிய முறைகளை ஆராய்ந்து வருவதாக கம்ப்யூட்டர் மொழிபெயர்ப்பில் முன்னணி வல்லுநராக விளங்கும் ப்ரான்ட்ஸ் ஜோசஃப் ஓக் கூறுகிறார். நீங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். முதலில், இரு மொழிகளிலுமே இருக்கும் சில பத்திகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்யுங்கள். அது அவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும். உதாரணமாக, ஒரே தமிழ் வார்த்தை பல இடங்களில் வருவதையும் அதற்கு இணையாக “ஹவுஸ்” என்ற ஆங்கில வார்த்தை வருவதையும் அது கண்டால், அந்தத் தமிழ் வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தை “ஹவுஸ்” என்று முடிவு செய்கிறது. அவ்வார்த்தைக்கு அருகே உள்ள வார்த்தைகள் பெரும்பாலும் பெயரடைகளாக இருக்கும் உதாரணத்திற்கு “பெரிய,” “சிறிய,” “பழைய,” “புதிய” போன்ற வார்த்தைகள் இருக்கும். இவ்வாறு, இணையான வார்த்தைகள் மற்றும் வார்த்தை கோர்வைகளைக் கொண்ட பட்டியலை கம்ப்யூட்டர் தயாரிக்கிறது. சில நாட்கள் அல்லது வாரங்களில் அதற்குப் போதுமான “பயிற்சி” கிடைத்த பிறகு, தான் “கற்றுக்கொண்டதைப்” பயன்படுத்தி புதிய வாக்கியங்களை அதனால் மொழிபெயர்க்க முடியும். இத்தகைய மொழிபெயர்ப்பு இலக்கணத்திலும் மொழிநடையிலும் பிழையாக இருந்தாலும், அதன் அர்த்தத்தையும் முக்கிய குறிப்புகளையும் புரிந்துகொள்ளும் அளவிற்கு இருக்கும்.

மொழிபெயர்ப்பின் தரம், கம்ப்யூட்டரில் முதலில் பதிவு செய்யப்பட்ட வாக்கியங்களின் தரத்தையும் அளவையும் பேரளவு சார்ந்திருக்கிறது. இந்த விஷயத்திலேயே பைபிள் பயனுள்ளதாக நிரூபித்திருக்கிறது. அது பல மொழிகளில் கவனமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; எளிதாக கிடைக்கிறது; அதிகளவான வார்த்தைகளையும் கொண்டிருக்கிறது. ஆகவே கம்ப்யூட்டரை ஒரு புதிய மொழிக்காக பயிற்றுவிக்கும்போது பைபிள்தான் ஆராய்ச்சியாளரின் முதல் தேர்வாக இருந்தது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்