உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 8/15 பக். 3-4
  • மரணத்தின் கோர விளைவு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மரணத்தின் கோர விளைவு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே”
  • மிகப் பெரிய கேள்விக்குறி
  • உங்கள் எதிர்காலம் அது என்னவாக இருக்கக்கூடும்?
    விழித்தெழு!—1995
  • “மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • மரணத்தைப் பற்றிய கட்டுக்கதைகள் ஒரு கண்ணோட்டம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • மரணத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 8/15 பக். 3-4

மரணத்தின் கோர விளைவு

“ஆறு வயது சிறுமி தற்கொலை.” இப்படியொரு அதிர்ச்சியூட்டும் தலைப்புச் செய்தி பத்திரிகையில் வெளிவந்தது. ஜேக்கி என்ற சிறுமியின் பரிதாபமான மரணத்தைப் பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தீராத வியாதியால் அவளுடைய தாய் சமீபத்தில் இறந்துபோயிருந்தார். இந்தச் சிறுமி ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, ‘ஏன்ஜல் மாதிரி ஆகி, அம்மாவோடு இருக்க’ விரும்புவதாக உடன் பிறந்தவர்களிடம் சொல்லியிருந்தாள்.

ஈயனுக்கு 18 வயதாக இருந்தபோது, புற்றுநோயால் தன்னுடைய அப்பா இறந்துபோனதற்குரிய காரணத்தைப் பற்றி பாதிரியிடம் கேட்டான். அவனுடைய அப்பா நல்லவராக இருந்ததால், கடவுள் அவரை பரலோகத்திற்கு எடுத்துக் கொண்டதாக அந்தப் பாதிரியார் கூறினார். அந்த விளக்கத்தைக் கேட்ட பிறகு, இப்படிப்பட்ட கொடூரமான கடவுளைப் பற்றி இனிமேல் அறிந்துகொள்ளப் போவதில்லை என்று ஈயன் முடிவு செய்தான். வாழ்க்கை முற்றிலும் அர்த்தமற்றதாக தோன்றியதால், இன்பத்தை நாடிச் செல்ல அவன் தீர்மானித்தான். இதற்காக மதுபானத்தையும் போதைப் பொருட்களையும் ஒழுக்கயீனத்தையும் நாடினான். அவனுடைய வாழ்க்கை கட்டுப்பாடின்றி போய்க்கொண்டிருந்தது.

“உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே”

மரணம்​—⁠முக்கியமாக அகால மரணம்​—⁠மக்களுடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதையே நெஞ்சை உருக்கும் இந்த இரு சம்பவங்களும் படம்பிடித்துக் காட்டுகின்றன. “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே” என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மையை எல்லாரும் அறிந்திருக்கிறார்கள். (பிரசங்கி 9:5) ஆனால் அநேகர் அந்தக் கொடிய நிஜத்தை எண்ணிப் பார்க்காதிருக்கவே விரும்புகிறார்கள். உங்களைப் பற்றியென்ன? பேரளவான நேரத்தையும் கவனத்தையும் நமது அன்றாட வாழ்க்கை எடுத்துக்கொள்வதால், மரணம் வெகு தொலைவில் இருப்பது போல் தோன்றுகிறது, அதனால் அதைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை, அந்த எண்ணத்தை எங்காவது ஒரு மூலையில் போட்டுவிடுகிறோம்.

“அநேகர் சாவைக் கண்டு அஞ்சுகின்றனர், அதைப் பற்றி யோசிப்பதையே தவிர்க்கின்றனர்” என த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. என்றாலும், ஒரு பயங்கர விபத்தோ உயிரை அச்சுறுத்தும் ஒரு வியாதியோ மரணம் எனும் நிஜத்தை திடீரென எதிர்ப்பட செய்துவிடலாம். அல்லது, ஒரு நண்பரின் அல்லது உறவினரின் சவ அடக்க நிகழ்ச்சி முழு மனிதகுலத்திற்கும் வரப்போகும் கோர விளைவை நமக்கு நினைப்பூட்டலாம்.

என்றாலும், “வாழ்க்கை தொடர்ந்துதான் ஆக வேண்டும்” என்று சில நாடுகளில் சவ அடக்க நிகழ்ச்சியில் அடிக்கடி பலர் சொல்கிறார்கள். அது உண்மையே. சொல்லப்போனால், வாழ்க்கை மிக வேகமாய் கடந்து போய்விடுவது போல் தெரிகிறது, முதுமையால் வரும் கஷ்டங்களை எல்லாருமே சீக்கிரத்தில் எதிர்ப்பட வேண்டியிருக்கிறது. அந்தக் கட்டத்தில், மரணம் வெகு தொலைவில் இல்லை என்பது தெரியவருகிறது. அநேக சவ அடக்க நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டியிருக்கிறது, எத்தனையோ பால்ய சிநேகிதர்களின் மறைவை சகிக்க வேண்டியிருக்கிறது. “நான் எப்போது போகப்போகிறேனோ?” என்ற கேள்வி வயதானவர்களுடைய மனதை அடிக்கடி ஆக்கிரமிக்கிறது.

மிகப் பெரிய கேள்விக்குறி

என்றைக்காவது ஒருநாள் சாவு கண்டிப்பாக வரும் என்பதை யாரும் மறுப்பதில்லை, ஆனால் மரணத்திற்குப் பிறகு என்ன சம்பவிக்கிறது என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கலாம். இதைப் பற்றி மக்கள் மத்தியில் முரணான கருத்துகள் நிலவுகின்றன. அதனால், தெரியாத ஒன்றிற்காக ஏன் வீணாக சர்ச்சை செய்ய வேண்டுமென சந்தேகவாதிகள் நினைக்கலாம். எதார்த்தவாதிகளோ “வாழ்வது ஒருமுறை” என்பதால் முடிந்தவரை வாழ்க்கையை நன்றாக அனுபவித்து மகிழ வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

வேறு சிலரோ மரணத்தோடு எல்லாமே முடிந்து விடுகிறது என்பதை நம்ப மறுக்கிறார்கள். ஆனால், அதற்குப்பின் என்ன நடக்கிறது என்பதைக் குறித்தும் எந்தத் தெளிவுமின்றி இருக்கிறார்கள். வாழ்க்கை சொர்க்கத்தில் தொடருமென சிலர் கருதுகிறார்கள். மற்றவர்களோ என்றாவது ஒருநாள் மறுபடியும் உயிர் வாழ்வோம், ஒருவேளை வேறொரு நபராக பிறப்போம் என நினைக்கிறார்கள்.

அன்பானவர்களை இழந்து தவிக்கும் உறவினர்களோ, “இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என கேட்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு, கால்பந்தாட்ட ‘கிளப்’பைச் சேர்ந்தவர்கள் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றிற்காக போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்களுடைய மினி பஸ்மீது திடீரென ஒரு டிரக் மோதியது, உடனே ஒரு சக்கரத்தைப் போல அந்த பஸ் உருண்டோடியது. அந்த அணியைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தார்கள். விபத்தில் மகனை இழந்த அந்நாள் முதற்கொண்டு, ஒரு தாயின் வாழ்க்கை கிட்டத்தட்ட அஸ்தமித்தது போலாகிவிட்டது. ‘என்னுடைய மகன் எங்கே?’ என்ற கேள்வியோடு அவளும் போராடிக் கொண்டிருக்கிறாள். தவறாமல் கல்லறைக்குச் சென்று, அவனிடம் மணிக்கணக்காக சத்தமாய் பேசுகிறாள். “மரணத்திற்கு அப்புறம் ஒன்றுமே இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, ஆனால் அதைப் பற்றி எனக்கு சரியாக தெரியாது” என அவள் புலம்புகிறாள்.

ஆகவே, மரணத்தைப் பற்றிய நம்முடைய மனப்பான்மை இப்போது நம் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மரணம் எனும் கோர சம்பவத்திற்கு மக்கள் பிரதிபலிக்கிற விதங்களைப் பார்க்கும்போது, பல கேள்விகள் எழுகின்றன. அவற்றிற்கு நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். மரணத்தை மறந்துவிட்டு, அன்றாட வாழ்க்கையில் நம்முடைய கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டுமா? மரண பயம் நம் வாழ்க்கையைப் பாழாக்கிப்போட நாம் அனுமதிக்க வேண்டுமா? அன்புக்குரியவர் இறந்துபோனால் அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் துயரப்படும் அவருடைய உறவினர்கள் காலம் முழுவதும் யோசித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதானா? அல்லது, மரணம் என்பது என்றைக்கும் ஒரு புரியாப் புதிராகத்தான் இருக்க வேண்டுமா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்