123-வது கிலியட் பள்ளிப் பட்டமளிப்பு விழா
‘ஆழமாகத் தோண்டத் துவங்கும்படி’ கிலியட் பட்டதாரிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்
சனிக்கிழமை, செப்டம்பர் 8, 2007 அன்று உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 123-வது வகுப்பின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 41 நாடுகளைச் சேர்ந்த 6,352 பேர் அந்த விழாவிற்கு வருகை தந்தனர். காலை பத்து மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. ஆளும் குழுவின் அங்கத்தினரான ஆந்தணி மாரிஸ் வருகை தந்தவர்களை வரவேற்றார். ஒருசில குறிப்புகளுடன் விழாவை ஆரம்பித்துவைத்த பிறகு, முதல் பேச்சாளரான கேரி ப்ரோவை அறிமுகப்படுத்தினார்; இவர் அமெரிக்க கிளை அலுவலகக் குழுவின் உறுப்பினராவார்.
யெகோவாவின் சித்தத்தைச் செய்பவர்கள் உடல் தோற்றத்தில் எப்படியிருந்தாலும் சரி, அவருடைய பார்வையில் அழகுள்ளவர்களே என்பதை மாணவர்களுக்கு சகோதரர் ப்ரோ உறுதிப்படுத்தினார். (எரே. 13:11, NW) இந்த அழகை மங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளும்படி பட்டதாரிகளை அவர் ஊக்குவித்தார். அடுத்ததாக, ஆளும் குழுவின் அங்கத்தினரான கெரட் லாஷ் உரையாற்றினார். யெகோவாவுக்குச் சேவை செய்யும்போது பலனை எதிர்பார்ப்பதில் தவறில்லை என்ற குறிப்பை அவர் வலியுறுத்தினார். (எபி. 11:6) என்றாலும், சுயநலமற்ற அன்பைக் காட்டுவதே நம் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அடுத்ததாக, தேவராஜ்ய பள்ளிகளின் துறைக்குக் கண்காணியான வில்லியம் சாம்யல்சன் சொற்பொழிவாற்றினார்.a இப்போது ஆட்சி புரிந்துவருகிற அரசரைப்பற்றி அறிவிக்கும் இந்தக் கௌரவமான வேலையை உண்மையான பற்றுடன் செய்யும்படியும் நன்னடத்தை மூலம் தங்களுடைய நன்மதிப்பைக் காட்டும்படியும் பட்டதாரிகளை அவர் ஊக்குவித்தார். பிறரிடமுள்ள நல்ல குணங்களையே எப்போதும் பார்க்கும்படி தேவராஜ்ய பள்ளிகளின் துறைக்கு உதவி கண்காணியான சாம் ராபர்சன் உற்சாகப்படுத்தினார். பட்டதாரிகள் அப்படிச் செய்கையில், ‘சகோதரர்கள் எல்லாரிடமும் அன்புகாட்ட’ முடியும்.—1 பே. 2:17.
இத்தகைய ஆர்வமூட்டும் சொற்பொழிவுகளுக்குப் பிறகு, கிலியட் போதனையாளரான மார்க் நூமர் பட்டதாரிகள் பலரைப் பேட்டி கண்டார். கிலியட் பயிற்சியின்போது ஊழியத்தில் கிடைத்த அனுபவங்களை அவர்கள் சொன்னார்கள். ஊழியம் செய்வதற்கான வாஞ்சையும், பிறருக்கு உதவ வேண்டுமென்ற ஆர்வமும் அவர்களுடைய பேச்சில் வெளிப்பட்டதை வந்திருந்தோர் புரிந்துகொண்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதன் பிறகு, பாட்டர்சன் பெத்தேல் அலுவலகத்தில் சேவை செய்யும் கென்ட் ஃபிஷ்ஷர், ஏற்கெனவே மிஷனரிகள் அனுப்பப்பட்டிருக்கிற மூன்று நாடுகளைச் சேர்ந்த கிளை அலுவலக உறுப்பினர்களைப் பேட்டி கண்டார். இந்த அருமையான சகோதரர்கள் சொன்ன வார்த்தைகள், இப்புதிய மிஷனரிகள் எந்தெந்த நாடுகளில் நியமிக்கப்படுகிறார்களோ அங்குள்ள சகோதர சகோதரிகள் அவர்களை நன்கு கவனித்துக்கொள்வார்கள் என்ற உறுதியை பட்டதாரிகளின் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் அளித்தது. அடுத்ததாக, மொழிபெயர்ப்புச் சேவைத் துறையைச் சேர்ந்த ஈசாக் மரே மிஷனரி சேவையில் பழுத்த அனுபவம் பெற்றிருந்த சிலரைப் பேட்டி கண்டார்; தாங்கள் பெறவிருக்கும் சந்தோஷத்தை முன்னரே ருசித்துப்பார்க்க இந்தப் பேட்டிகள் பட்டதாரிகளுக்கு உதவின.
நிகழ்ச்சியின் முக்கியப் பேச்சை ஆளும் குழுவின் அங்கத்தினரான ஜெஃப்ரீ ஜேக்ஸன் கொடுத்தார்; அப்பேச்சின் பொருள், “பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டீர்கள்—இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்?” என்பதே. தென் பசிபிக் பகுதியில் கிட்டத்தட்ட 25 வருடங்கள் மிஷனரியாகச் சேவைசெய்த சகோதரர் ஜேக்ஸன், மலைப்பிரசங்கத்தின் முடிவான பகுதியை விளக்கினார். அந்தப் பிரசங்கத்தில், வீடுகளைக் கட்டிய புத்தியுள்ள ஒருவரையும் புத்தியில்லாத ஒருவரையும்பற்றி இயேசு பேசினார். இந்த இருவருமே பொதுவான ஓர் இடத்தில் தங்கள் வீடுகளைக் கட்டியிருக்கலாம் என பேச்சாளர் குறிப்பிட்டார். என்றாலும், புத்தியில்லாதவர் மணற்பரப்பிலேயே அதைக் கட்டினார்; புத்தியுள்ளவரோ ஆழமாய்த் தோண்டி பாறை தென்பட்டதும் அதன்மீது கட்டினார். பெருங்காற்றுடன் மழை பெய்தபோது, பாறைமீது கட்டப்பட்ட வீடு நிலைத்திருந்தது; மணலின்மீது கட்டப்பட்ட வீடோ இடிந்துவிழுந்தது.—மத். 7:24-27; லூக். 6:48.
தம்முடைய போதனைகளைக் கேட்டும் அதன்படி நடக்காதவர்கள் புத்தியில்லாத மனிதனைப்போல இருக்கிறார்கள் என இயேசு விளக்கினார். தம்முடைய வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களோ புத்தியுள்ள மனிதனைப்போல இருக்கிறார்கள் என்றும் விளக்கினார். “பைபிள் படிப்பின் மூலமாக கற்றுக்கொண்டதை மிஷனரி ஊழியத்தில் கடைப்பிடித்தால், நீங்கள் புத்தியுள்ள மனுஷனைப்போல் இருப்பீர்கள்” என பட்டதாரிகளிடம் சகோதரர் ஜாக்ஸன் சொன்னார். ஆகவே, தன்னுடைய பேச்சின் முடிவாக, மிஷனரி சேவையில், “ஆழமாகத் தோண்டத் துவங்குங்கள்” என்று பட்டதாரிகளை அவர் ஊக்குவித்தார்.
கடைசியில், பட்டதாரிகள் தங்களுடைய பட்டங்களையும் நியமிப்புகளையும் பெற்றார்கள்; முடிவாக சகோதரர் மாரிஸ் சில அறிவுரைகளை வழங்கினார். எப்போதும் இயேசுவைப் பின்பற்றும்படியும், பலத்திற்காக யெகோவாவைச் சார்ந்திருப்பதை ஒருபோதும் விட்டுவிடாமல் இருக்கும்படியும் பட்டதாரிகளை அவர் உற்சாகப்படுத்தினார். அத்துடன், விழா இனிதே நிறைவு பெற்றது.
[அடிக்குறிப்பு]
a தேவராஜ்ய பள்ளிகளின் துறை போதனா குழுவின் கண்காணிப்பில் இயங்குகிறது. கிலியட் பள்ளி, கிளை அலுவலகக் குழுவினருக்கான பள்ளி, பயணக் கண்காணிகளுக்கான பள்ளி ஆகியவற்றை இத்துறை மேற்பார்வை செய்கிறது.
[பக்கம் 31-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 10
அனுப்பப்பட்ட நாடுகள்: 24
மாணவர்கள்: 56
சராசரி வயது: 33.5
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 17.9
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 13.8
[பக்கம் 32-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 123-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) எஸ்பார்ஸா, ஈ.; பப்பையா, எஸ்.; பீலால், ஏ.; ஸ்வாரேஸ், எம்.; எவர்ஸ், ஈ.; டிமிச்சீனோ, கே. (2) ரோஸா, எம்.; ஃப்யூஜீ, ஆர்.; ரேடி, ஓ.; லெவட்டன், ஜெ.; வான் லிம்பூடன், எம். (3) பாஸ்கையீனோ, ஏ.; பெக், கே.; பூடனாஃப், ஹெச்.; ப்ராஸ், சி.; பெல்ட்ஸ், கே.; சியாவ், ஏ. (4) லெவட்டன், எஸ்.; ஸான்டிகோ, ஹெச்.; கான்டி, எஸ்.; வில்சன், ஜெ.; ரைலட், ஜெ.; பியர்ஸ், எஸ்.; ஃப்யூஜீ, கே. (5) ரோஸா, டி.; பாஸ்கையீனோ, எம்.; ஆஸ்டின், வி.; ரோட்யல், பி.; பீலால், பி.; டிமிச்சீனோ, பி. (6) ரேடி, பி.; சீஸிக், டி.; க்ளார்க், சி.; ரீடல், ஏ.; எஸ்பார்ஸா, எஃப்.; சியாவ், பி.; வான் லிம்பூடன், டி. (7) ரோட்யல், ஜெ.; எவர்ஸ், ஜெ.; க்ரீன், ஜெ.; சீஸிக், ஜெ.; ஸான்டிகோ, எம்.; ரைலட், எம். (8) பெல்ட்ஸ், எல்.; ஆஸ்டின், டி.; ரீடல், டி.; பெக், எம்.; பியர்ஸ், டபிள்யூ.; கான்டி, எஸ்.; க்ரீன், எஸ். (9) ஸ்வாரேஸ், ஜெ.; க்ளார்க், ஜெ.; பப்பையா, எஸ்.; பூடனாஃப், எம்.; வில்சன், ஆர்.; ப்ராஸ், ஆர்.