உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w15 10/1 பக். 13-பக். 15 பாரா. 6
  • உங்களுக்கு தெரியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு தெரியுமா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • இதே தகவல்
  • விருந்து படைக்கும் திரிகைகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • திரிகைக் கல்
    சொல் பட்டியல்
  • செக்கியாவின் மில்களில் வாழ்க்கை
    விழித்தெழு!—2005
  • மாவு அரைக்கும் கல்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
w15 10/1 பக். 13-பக். 15 பாரா. 6

உங்களுக்கு தெரியுமா?

பழங்காலத்தில் மாவை எப்படி அரைத்தார்கள்?

அன்று மக்கள் மாவு அரைக்கும் கற்களை பயன்படுத்தி தானியங்களை அரைத்தார்கள். அரைக்கப்பட்ட மாவிலிருந்து ரொட்டிகளை செய்தார்கள். மாவு அரைப்பது, பெண்களின் அல்லது வேலைக்காரர்களின் தினசரி வேலையாக இருந்தது. பழங்காலத்தில் மாவு அரைக்கும் சத்தம் அன்றாடம் கேட்கும் சத்தமாக இருந்தது.—யாத்திராகமம் 11:5; எரேமியா 25:10.

மாவு அரைக்கும் கல்லை பயன்படுத்தி ஒருவர் மாவு அரைக்கிறார். இது எகிப்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருள்

மாவு எப்படி அரைக்கப்பட்டது என்பதை பூர்வ எகிப்திலிருந்து எடுக்கப்பட்ட வரைபடங்களும், சிலைகளும் காட்டுகின்றன. சற்றே குழியான அடிக்கல்லின் மேல் அரைக்கப்பட வேண்டிய தானியத்தை வைப்பார்கள். மாவு அரைப்பவர், இந்த அடிக்கல்லின் முன் மண்டியிட்டு, மேல் கல்லை இரண்டு கைகளிலும் பிடித்து முன்னும் பின்னுமாக அரைப்பார். பொதுவாக, மேல் கல் இரண்டு அல்லது நான்கு கிலோ எடை (4-9 பவுண்டு) இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. இதை ஆயுதமாக பயன்படுத்தினால் அது உயிரையே பறித்துவிடலாம்.—நியாயாதிபதிகள் 9:50-54.

உணவுக்காகத் தானியங்களை அரைப்பது, அன்று வாழ்ந்த மக்களுக்கு அத்தியாவசியமாக இருந்தது. அதனால்தான், மாவு அரைப்பதற்காக உபயோகிக்கிற கல்லை அடகாக வாங்கக் கூடாது என்று பைபிளில் ஒரு சட்டம் இருந்தது. “திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடகாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகு வாங்குவதுபோலாகும்” என்று உபாகமம் 24:6 சொல்கிறது. ▪ (w15-E 07/01)

‘நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்’ என்ற பதம் எதை குறிக்கிறது?

கடைசி பஸ்காவின்போது இயேசுவின் நெஞ்சத்திற்கு நெருக்கமாக அப்போஸ்தலன் யோவான் உட்கார்ந்திருக்கிறார்

இயேசு, அவருடைய அப்பாவின் ‘நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்’ என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 1:18) இயேசுவுக்கும் கடவுளுக்கும் இடையே இருந்த நெருக்கமான பந்தத்தைத்தான் இது குறிக்கிறது. விருந்து சாப்பிடும்போது யூதர்களுக்கு இருந்த பழக்கத்தை இந்த வார்த்தை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்கள், சாப்பாட்டு மேஜையை சுற்றி மெத்தை விரித்திருப்பார்கள். விருந்து சாப்பிடும் ஒவ்வொருவரும், மேஜையை நோக்கி உட்கார்ந்திருப்பார்கள், அவர்களுடைய கால்கள் மேஜையைவிட்டு விலகி இருக்கும். அவர்கள் இடது கையை தலையணையின்மீது ஊன்றி உட்கார்ந்திருப்பார்கள். இப்படி உட்காருவது, அவர்கள் வலது கையை பயன்படுத்தி சாப்பிடுவதற்கு வசதியாக இருந்தது. மேஜையை சுற்றி எல்லாரும் இப்படி இடது பக்கமாக சாய்ந்து உட்கார்ந்திருப்பதால் “ஒவ்வொருவருடைய தலையும் அவருக்குப் பக்கத்தில் இருப்பவரின் மார்புக்கு அருகே இருந்தது. இது பார்ப்பதற்கு, ஒருவர் இன்னொருவருடைய ‘நெஞ்சத்தில் சாய்ந்து’ உட்கார்ந்து இருப்பது போல் இருக்கும்” என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது.

குடும்ப தலைவருக்கு, அல்லது விருந்துக்கு அழைத்த நபருக்கு பக்கத்தில் இப்படி உட்காருவது கவுரவமாக கருதப்பட்டது. இயேசு கடைசியாக பஸ்கா பண்டிகையை தம் சீடர்களுடன் கொண்டாடியபோது, அவர் அதிகம் நேசித்த சீடரான யோவான், அவருடைய நெஞ்சத்திற்கு நெருக்கமாக உட்கார்ந்திருந்தார். அதனால்தான் யோவானால், “அவரது [இயேசுவின்] நெஞ்சிலே சாய்ந்தபடி” அவரிடம் கேள்வி கேட்க முடிந்தது.​​—⁠யோவான் 13:​23-25; 21:20.▪(w15 -E 07/01)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்