அதிகமாகப் பைபிளைப் பயன்படுத்துதல்
1 “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது.” (எபி. 4:12) அதனுடைய வல்லமையை முழு அளவில் செயல்படுத்துவதற்கும் உயிருள்ளதாக இருப்பதற்கும் அது வாசிக்கப்பட்டு பொருத்தப்பட வேண்டும். இதை மேலுமாக நிறைவேற்றுவதற்கு, யெகோவாவின் அமைப்பு முக்கியமாக 1954 முதற்கொண்டு பைபிளை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் உபயோகிக்கும்படி நம்மை உற்சாகப்படுத்தியது. வீட்டுக்கு வீடு சந்திப்புகளின்போது மூன்று முதல் எட்டு நிமிட பிரசங்கங்களைக் கொடுப்பதற்கும் முக்கியமான பொருள்களின்பேரில் பைபிள் என்ன சொல்லுகிறது என்பதை அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும் நாம் பயிற்றுவிக்கப்பட்டோம்.
2 இன்னும் சமீப வருடங்களில், நம் ராஜ்ய ஊழியம் ஒழுங்காக சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை உடையதாக இருக்கிறது. அது ஒரு பொருளின் பேரில் வெளி ஊழியத்தில் நாம் உபயோகிப்பதற்கு இரண்டு அல்லது மூன்று வசனங்களைக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருள் “கடவுளுடைய ராஜ்யம் என்ன செய்யும்” என்ற பொருளைக் கொண்டிருக்கிறது. உபயோகிக்கப்படும் வசனங்கள் எதிர்காலத்தில் கடவுள் நமக்காக வைத்துள்ள மகத்தான நம்பிக்கையை வலியுறுத்திக் காட்டுகின்றன.
3 பைபிளைத் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவதற்குப் பழக்கமும் அது மெய்யாகவே கடவுளுடைய வார்த்தை மேலும் அது உயிருள்ளதும் வல்லமையுடையதுமாயிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள உதவி செய்வதற்கு நம்முடைய பாகத்தில் ஆர்வமும் தேவையாக இருக்கிறது. பத்திரிகை ஊழியத்தின்போது குறிப்பான, சுருக்கமான பத்திரிகை அளிப்புகளை நாம் செய்யும்படி உற்சாகப்படுத்தப்பட்டாலும் ஊழியத்தின் மற்ற அம்சங்களில், நாம் பைபிளைப் பயன்படுத்துவதில் அசட்டையாக இருக்க விரும்புவதில்லை. நாமெல்லாரும் பைபிள் மாணாக்கர்களாக இருப்பதினால் அதற்கு அத்தாட்சியாக யெகோவா தேவன் மனிதவர்க்கத்திற்கும் பூமிக்கும் என்ன நோக்கம் உடையவராக இருக்கிறார் என்பதை கடவுளுடைய வார்த்தையிலிருந்து எடுத்துக் காட்டுவதைவிட வேறு என்ன சிறந்த வழி இருக்கமுடியும்?
நியாயங்கள் புத்தகத்திலிருந்து உதவி
4 நம் ராஜ்ய ஊழியத்திலிருக்கும் சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளோடுகூட வேதவாக்கியங்களிலிருந்து நியாயங்களை எடுத்துக் காண்பித்தல் புத்தகமும் நம்மிடம் இருக்கிறது. பக்கங்கள் 9-15-லுள்ள முன்னுரைகளை விமரிசனம் செய்யும்போது ராஜ்ய செய்திகளை அறிமுகப்படுத்துவதில் முன்னுரைகளைப் பயன்படுத்துவதற்கான வசன மேற்கோள்களை நீங்கள் காண்பீர்கள். பைபிள் என்ன சொல்லுகிறது என்பதை ஜனங்களிடம் காட்டுவதற்கு நமக்கு அநேக வித்தியாசமான வழிகள் இருக்கின்றன.
5 உதாரணமாக, வீட்டுக்காரரில் சிலர் வயதானவர்களைக் குறித்து கவலையுள்ளவர்களாக இருப்பார்களேயானால், நியாயங்கள் புத்தகம் பக்கம் 14 “வயோதிபம்/மரணம்” என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுவது உதவியாக இருக்கும். பின்வரும் கேள்வியைக் கேட்பது பொருத்தமாக இருக்கும்: “நாம் ஏன் வயோதிபராகி மரணமடைகிறோம் என்று நீங்கள் யோசித்ததுண்டா? பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு ஓர் எழுத்தாளன் ரோமர் 5:12-ல் என்ன சொல்லுகிறான் என்பதைக் குறிப்பிட நான் விரும்புகிறேன்.” பிறகு இவ்வாறு சொல்லலாம்: “நாம் ஏன் வயோதிபராகி மரணமடைகிறோம் என்று பைபிள் குறிப்பிடுவது மட்டுமல்லாமல் எதிர்காலத்துக்கான ஒரு சிறந்த நம்பிக்கையையும் அது நமக்கு அளிக்கிறது. இது வெளிப்படுத்துதல் 21:3, 4-ல் காணப்படுகிறது.” பின்பு தற்போதைய பிரசுர அளிப்பைக் குறிப்பிடலாம்.
6 இந்நாட்களில் அநேகர், “வேண்டாம், நான் அதிக வேலையாக இருக்கிறேன்,” என்று சொல்லக்கூடும். அநேகர் உண்மையிலேயே வேலையாகத்தான் இருக்கிறார்கள். எனவே அவர்களுடைய விஷயத்திலும் அவ்வாறு இருக்கக்கூடும் என்பதை நாம் மதித்துணர வேண்டும். அப்படி இருந்தாலும் சூழ்நிலை சாதகமாக இருந்தால் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “இவை மெய்யாகவே அதிக வேலை நிறைந்த நாட்கள். ஆகையால் உங்களுடைய உணர்ச்சிகள் எனக்குப் புரிகிறது. இருந்தபோதிலும், இந்த ஒரே ஒரு கருத்தை உங்களிடம் விட்டுச் செல்ல விரும்புகிறேன்,” என்று சொல்லி தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளிலிருந்து ஒரு வசனத்திற்குக் கவனத்தைத் திருப்புங்கள். அதை வாசித்த பிறகு, நீங்கள் என்ன பிரசுரத்தை அளிக்கப் போகிறீர்கள் என்று சீக்கிரமாக சொல்லாம். ஒரு பொருத்தமான துண்டுப்பிரதியை விட்டுவரலாம் அல்லது வெகு சீக்கிரத்தில் மறுபடியும் அந்தப் பிராந்தியத்திற்கு வருவீர்கள் என்றும், அப்பொழுது மரிக்காமல் வாழக்கூடிய அக்கறைக்குரிய வாய்ப்பைக் குறித்து மேலுமான தகவலைப் பகிர்ந்துகொள்வீர்கள் என்றும் சொல்லுங்கள்.
7 நாம் பைபிள் மாணாக்கர் என்பதையும் ஊழியத்தில் கடவுளுடைய வார்த்தையை உபயோகிப்பதில் திறமையுடையவர்கள் என்பதையும் ஜனங்கள் பார்ப்பதில் எவ்வளவு நன்மை இருக்கிறது! கடவுளுடைய வார்த்தையில் சார்ந்திருப்பவர்களையும் அதைத் தங்களுடைய அன்றாடக வாழ்க்கையில் பொருத்துபவர்களையும் அவர்கள் அடையாளங் கண்டுகொள்ள உதவிசெய்கிறது. எனவே, பத்திரிகை ஊழியத்தைத் தவிர, வழக்கமான பிரசுர அளிப்பை செய்யும்போது பைபிளைப் பயன்படுத்த தயாராக இருங்கள். பைபிளைப் பயன்படுத்துவதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள் நம்முடைய ஊழியத்தில் யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும் மற்றும் கடவுளுடைய வார்த்தை உண்மையிலேயே உயிருள்ளது, வல்லமையுள்ளது. நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும் என்பதையும் அவர்களுடைய மனதிற்குக் கொண்டுவரும்.